Follow me on Twitter RSS FEED

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு புல்மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் அவசர மகஜர் அனுப்பி வைப்பு

Posted in

புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளில் இடம்பெற்றுவரும் பௌத்த மதகுருவின் அத்துமீறல் மற்றும் பிரதேச மக்களின் நீண்ட கால காணி பிரச்சினை தொடர்பாக தீர்வுகளை பெற்றுத்தரும்படியான மகஜர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்மகஜர் புல்மோட்டை அனைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தினால் பதிவுத் தபால் மற்றும் தொலை நகல் ஊடாகவும் 14.09.2018ஆம் திகதி - வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறிப்பிட்ட பௌத்த மதகுருவால் புல்மோட்டையின் அணைத்து பகுதிகளிலும் காணப்படும் காணிகளை அத்துமீறி பிடிப்பது தொடர்பாகவும், இப்பிரதேசத்தில் வசித்து வரும் மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரங்களை பெற்றுத் தரக்கோரியும், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள தங்களது காணிகளுக்குள் சென்று தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வன பரிபாலன சபையினர் அனுமதிக்காது குறித்தும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 17.09.2018ஆம் திகதி அரிசிமலையில் காணப்படும் காணிகள் அளவீடு தொடர்பாக நில அளவையாளர்கள் அன்றைய தினம் விஜயம் மேற்கொள்வது தொடர்பாகவும் அவற்றை தடுத்துநிறுத்தி தமது காணிகளை பெற்றுத்தருபடி கோரியும் இன்றைய (14) ஜூம்ஆவின் பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருந்த நிலையில் அணைத்து பள்ளிவாயல்கள் ஒன்றியத்தின் தலைமையில் புல்மோட்டை இலாஹியா ஜும்மா பள்ளிவாசலில் கட்சி பேதமின்றி நடைபெற்ற கூட்டத்தில் இதனை இப்போது செய்யாது நிறுத்தம் செய்வதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


 அத்துடன், 13.09.2018ஆம் திகதி - வியாழக்கிழமை (நேற்று) புல்மோட்டை பொலிஸ் உயர் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரது தலைமையில் பிரதேச பள்ளிவாயல்களின் தலைவர்கள், அணைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் இறுதியில் அரிசிமலை விகாரையை அண்டிய தொல்பொருள் பகுதியான 4.5 ஏக்கர் பகுதி மாத்திரம் அளவிடப்படும் என்பதுடன் ஏனைய குடியிருப்புகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் தாம் பொறுப்பு நிப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின்னர் நில அளவையின் போது குச்சவெளி பிரதேச செயலாளர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புல்மோட்டை பிரதேச மக்கள் சார்பாக இரண்டு முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த எதிப்பு நடவடிக்கையை கை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.


-MTM. Haither Ali-

ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ் வீதியில் பொலிசாரின் அதிரடி - பொதுமக்கள் வரவேற்பு

Posted in
ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ் வீதியானது பிரதான சன நெரிசல் மிக்க வீதியாகும். இவ்வீதியில் பிரதான பாடசாலைகள், பள்ளிவாயல்கள், அரசாங்க அலுவலங்கள், மத்ரசாக்கள், அதிக வர்த்தக நிலையங்கள் என்பன அமைந்துள்ளதாலும் ஓட்டமாவடியிலிருந்து மீராவோடைக்குச் செல்லும் பிரதான மார்க்கம் என்பதாலும் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்வீதியினூடாகப் பயணம் செய்கின்றனர். அத்தோடு வாகனப் போக்குவரத்தும் இவ்வீதியில் அதிகம் காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியாகவும் காணப்படுகின்றது. 

மேலும், போதைவஸ்து பாவனையாளர்கள் மோட்டார் சைக்கிளில் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிகமானவர்களை ஏற்றிக் கொண்டு வேகமாகப் பயணிப்பதால் இவ்வீதியால் செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததோடு அதிக விபத்துக்கள் ஏற்படக் காரணமாகவும் இருந்தது.  

மேற்படி விடயம் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 03.09.2018ம் திகதி தொடக்கம் எம்.பி.சி.எஸ் வீதியில் அதிகளவிலாள போக்குவரத்து பொலிசார் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு அவ்வீதியால் சந்தேகத்திற்கிடமாக மற்றும் வேகமாக பயணிக்கக் கூடியவர்கள், பாடசாலை மாணவிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்கள் போன்றோரை நிறுத்தி சோதனையிட்டு குற்றம் காணப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டதோடு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டும் இருந்தனர். 

மேற்படி பொலிசாரின் நடவடிக்கையை பிரதேச மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு நோக்கியதோடு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன அவர்களுக்கும் பொலிசார் மற்றும் போக்குவரத்துப் பொலிசார் ஆகியோருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்தும் பொலிசார் அவசியம் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென்று பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

TOP WORLD விளையாட்டுக் கழகத்தின் நிருவாகத் தெரிவும் மூத்த வீரர்கள் கௌரவிப்பும்

Posted in
-MS-
TOP WORLD விளையாட்டுக் கழகமானது கல்குடாத் தொகுதியிலுள்ள வெவ்வேறு கழகங்களிலுள்ள திறமையான வீரர்களை ஒருங்கிணைத்து ஒரு வெற்றிகரமான கிரிக்கட் அணியாக வலம் வருகின்றது. 

இந்த அணிக்கான புதிய நிருவாகத் தெரிவும் கல்குடாத் தொகுதியிலுள்ள மூத்த விளையாட்டு வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நேற்று 31.08.2018ம் திகதி மாலை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது.  

இதன்போது கல்குடாத் தொகுதியில் கடினப்பந்து கிரிக்கட் போட்டியில் முதன்முதலாக 100 ஓட்டங்களைத் தாண்டி சதம் பெற்ற ஏ.எல். நளீர் (ஆசிரியர்) அவர்களுக்கும், TOP WORLD அணி சார்பாக முதலாவது 50 ஓட்டங்களைப் பெற்ற முஹம்மட் அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

புதிதாக நிருவாகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டோர்.







புதிய நிருவாகத் தெரிவின் பின்னர் உரையாற்றிய தலைவர் ரனீஸ் அவர்கள் எதிர்காலத்திலும் இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என்பதனையும் தெரிவித்தார்.