Follow me on Twitter RSS FEED

ENTERTAINMENT

Posted in

பொலிவூட் திரைப்படங்களில் சச்சின் நடிக்க உள்ளார் ?
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கார் பொலிவூட் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விது வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜேஷ் மபுஸ்கார் இயக்கத்தில் தயாராகும் "பெராரி கி சவாரி எனும் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் படத்தில் திரீ இடியட்ஸ் படத்தில் நடித்த சர்மான் ஜோஷியும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்மதன் அம்பு டிசம்பர் வெளியாகும் - கே.எஸ்.ரவிக்குமார்
கமலஹாஸன் - த்ரிஷா நடிக்கும் மன்மதன் அம்பு படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்தப் படம் டிசம்பரில் வெளியாகும் என முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. 
கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் மன்மதன் அம்பு, காதல், நகைச்சுவை கலந்த ஒரு மசாலாப் படம். மாதவன், சங்கீதாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 
ஐரோப்பா, கொடைக்கானல் என குளுகுளு பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்தது. 
சில தினங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதைக் கொண்டாடும் விதத்தில் சைதாப்பேட்டையில் உள்ள கேஎஸ் ரவிக்குமாரின் வீட்டில் நிறைவு விழா விருந்து ஞாயிற்றுக்கிழமை நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, கமல், த்ரிஷா, மாதவன் உட்பட படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் இந்த விருந்தில் பங்கேற்றனர். 
படத்தை டிசம்பரில் வெளியிட்டுவிடும் திட்டத்தில் இருப்பதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்தார்.

ஆழ்கடலில் உருவாகும் அவதார் அடுத்த‌ பாகம்




 உலகத் திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை படைத்த அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார். இந்தப் படம் அவதாரின் தொடர்ச்சியாக இருக்கும். இதற்காக அவர் கடலின் மிகவும் ஆழமான பகுதிக்குச் செல்லவுள்ளார்.
இயக்கத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கும் அவர் படப்பிடி்ப்பு நடத்தவிருக்கும் இடம் ஆழ் கடல் ஆகும். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன நீர் மூழகிக் கப்பல் ஒன்றை வாங்குகிறார். இந்த கப்பல் ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது கடலுக்கு அடியில் 10, 972 மீட்டர் சென்று மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் அடிவாரத்திற்குச் செல்லவிருக்கிறது.
இது குறித்து கேமரூன் கூறியதாவது,
கடலுக்குள் செல்ல கப்பல் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் கப்பல் கட்டும் வேலை பாதி முடிவடைந்துவிட்டது என்று அவர் கூறினார்.
இரு இருக்கைகள், வெப்பமூட்டும் கருவி, 3 டி கேமரா ஆகியவை அந்த கப்பலில் இருக்கும்.
கேமரூனுக்கு ஆழ்கடலுக்குச் செல்லும் ஆசை பல வருடங்களாக உள்ளது. இந்த ஆண்டே தனது கடல் பயணத்தை மேற்கொள்கிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மரியானா அகழிக்குச் செல்லும் இரண்டாவது அணி இவர்கள் தான்.
1960-ம் ஆண்டு விஞ்ஞானி ஒருவரும், கடற்படை லெப்டினன்ட் ஒருவரும் மரியானா அகழிக்குச் சென்றனர். கடல் அடிமட்டத்தை நெருங்க அவர்களுக்கு 5 மணி நேரம் ஆனது. அவர்கள் அங்கு 20 நிமிடங்கள் தான் இருந்தனர்.

கேமரூனின் இந்த முயற்சி மூலம் மக்களுக்கு இன்னொரு புதிய அனுபவம் கிடைக்கவுள்ளது.



ஆமர்வீதியில் அம்பலத்துக்கு வந்த அந்தரங்கத் தொழில்!


 கொழும்பு ஆமர்வீதியில் நாளுக்கு நாள் விபசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தி சாய்ந்ததும் சந்திக்கு சந்தி நிற்கத்தொடங்கும் அவர்கள் தங்களது காமப் பார்வையை வீசி இளைஞர் முதியோர் என்று பார்க்காமல் வலைவிரிப்பது வழமை.
வாடிக்கையாளர்களுடன் அவர்கள் பேரம்பேசும் விதமே தனிதான்.
நிலைமை இவ்வாறிருக்க, நேற்றுமுன்தினம் இரவு சுவாரஸ்யமான சம்பமொன்று நடந்தது.
ஆமர்வீதிக்கு மாற்றுடையில் வந்த பொலிஸார் விபச்சாரிகளிடம் பேரம் பேசத் தொடங்கினார்கள். வழமைபோல வெட்கப்படுவதாய் நடித்து கூச்சம் கலந்த புன்சிரிப்புடன் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
திடீரென சுதாகரித்த பொலிஸார் பெண் ஒருவரை துரத்த ஆரம்பித்தனர். மாற்றுடையில் வந்திருப்பவர்கள் பொலிஸார் தான் என்பதை அறிந்துகொண்ட அப்பெண் தலைதெறிக்க ஓடினாள்.
இவர்களும் விடுவதாயில்லை. அந்த ஓட்டத்தைப் பார்த்தால் "மாட்டினோமோ, மண்டை ஓடு கூட மிஞ்சாது" என்பது போலத்தான் இருந்தது.
தப்பினோம்... பிழைத்தோம் என அவள் ஓடி மறைய அதேநேரத்தில் மற்றைய பெண்களும் கண்டபடி ஓட ஆரம்பித்தது தான் அங்கே சுவாரஸ்யமான விடயம்.
ஆமர்வீதியில் இருந்த அனைவருமே கைகொட்டிச் சிரித்து அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தார்கள். ஆனால் விபசாரத்தில் ஈடுபட்ட எவருமே பொலிஸாரிடம் அகப்படவில்லை.
அந்தரங்கமாகச் செய்துவந்த தொழில் அம்பலத்துக்கு வந்ததில் பலருக்கு அதிர்ச்சி. இவர்களெல்லாம் இந்தத் தொழில் செய்தவர்கள் தானா என இளைஞர்கள் சிலர் ஆச்சரியப்பட்டதையும் காணக்கூடியதாகவே இருந்தது. அந்த வகையில் இளைஞர்கள் சற்று விழிப்புடன் இருப்பார்கள் அல்லவா?
இவர்கள் திருட்டுத் தொழிலிலும் ஈடுபடுவதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
விபசாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் இவர்களால் இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார்கள் பொதுமக்கள்.
பாலியல் தொழிலாளர்களை மாத்திரம் தவறு சொல்வதில் பயனில்லை. அவர்களை ஊக்கப்படுத்தும் ஏனைய சக்திகள் குறித்தும் பொலிஸார் சிந்திக்க வேண்டும் என எமது கருத்தை முன்வைத்து அவ்விடத்திலிருந்து நாம் நகர்ந்தோம்.


5000 ரசிகர்கள் அழைப்பு




ரசிகர்களை சந்திக்க ரஜினி தயாராகிறார். ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ரசிகர்களை அழைத்து பேசுவது உண்டு. கடைசியாக 2008 நவம்பர் மாதம் சந்தித்தார். 
5000 ரசிகர்கள் அழைப்பு
அதே வருடம் ஜனவரியில் ரசிகர்களை அழைத்து தனித் தனியாக போட்டோ எடுத்து கொண்டார். குசேலன் பட வெளியீட்டின்போது இச்சந்திப்புகள் நடந்தன. அதன் பிறகு எந்திரன் படப்பிடிப்பில் பிசியாகி விட்டார். இப்படம் தற்போது வெளியாவதையொட்டி ரஜினியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வப்பட்டனர். 
ரஜினி மகள் சவுந்தர்யா திருமணம் சமீபத்தில் நடந்தபோது அத்திருமணத்துக்கு வரவும் விரும்பினர். இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணங்களால் திருமணத்துக்கு ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. ரசிகர்களை விரைவில் அழைத்து விருந்து கொடுப்பேன் என ரஜினி அறிவித்தார். 
அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு மேல் இச்சந்திப்பை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவி- குழந்தைகளுடன் ரசிகர்களை அழைக்கலாம் என முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் போக்குவரத்து செலவு, தங்கும் இடம் போன்ற காரணங்களால் குடும்பத்தினருடன் வருவது செலவில் இழுத்து விடும் என ரசிகர்கள் கருதினர். 
இதையடுத்து ரசிகர்களை மட்டும் அழைக்க முடிவாகியுள்ளது. யார்-யாரை அழைப்பது என்ற பட்டியல் தயாராகியுள்ளது. மொத்தம் 5 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பு நடக்கிறது. அப்போது சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியை ரசிகர்கள் முன்பு ரஜினி அறிமுகப்படுத்துகிறார். 
அது முடிந்ததும் ரசிகர்களை சந்தித்து பேசுகிறார். ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இச்சந்திப்பின்போதும் அதை வலியுறுத்த இருக்கின்றனர். அடுத்து மீண்டும் சினிமாவில் நடிப்பதா? அரசியலில் ஈடுபடுவதா? என்பது பற்றிய முடிவை ரசிகர்கள் மத்தியில் ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்திரன் நுழைவுச்சீட்டு கிடைக்குமா?


Add caption
இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது எந்திரன் வெளியீட்டுக்கு. அதற்குள் இந்த படத்தின் நுழைவுச்சீட்டு முதல் நாளே எவ்வளவு ரூபாய்க்கு விற்கும் என்று கணக்கு போட்டு கணக்கு போட்டு வாயை பிளக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

இத்தனைக்கும் கொஞ்சம் பெரிய மண்டபம் கிடைத்தால் அங்கேயும் ஒரு ஸ்கிரீன் கட்டி படம் போட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு திரும்புகிற இடத்திலெல்லாம் வெளியிட போகிறார்களாம் எந்திரனை. அப்படியிருந்தும் நுழைவுச்சீ்ட்டு கிடைக்குமா என்ற கவலை ரசிகர்களை வாட்ட ஆரம்பித்திருக்கிறது. 

சென்னை மாவட்ட விநியோக உரிமையை பெற்றிருக்கும் திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மேலும் சில கோடிகள் அதிகம் வைத்து இப்படத்தை சத்யம் நிறுவனத்திற்கு விற்று விட்டாராம். 

சென்னையில் மட்டும் முதல் ஒரு வாரத்திற்கு நுழைவுச்சீட்டு ரேட் தாறுமாறாக இருக்கும் என்று கவலைப்படும் ரசிகர்களுக்கு முதல்வர் போட்ட வாய்மொழி உத்தரவு ஒன்று ஆறுதல் அளிக்கக்கூடும். 

அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படும் விதத்தில் எந்த தியேட்டர்காரர்களும் செயற்பட வேண்டாம். நுழைவுச்சீட்டை விலையை அதிகப்படுத்தி விற்பதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் கூறியிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன. 

இந்த நல்ல செய்தி ரசிகர்களை நிச்சயம் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.