Follow me on Twitter RSS FEED

கருணாவின் கவனத்திற்கு...

Posted in

உனது இனவாதம் எமது சிறுபான்மை அமைச்சர் அமீர் அலிக்கெதிரானதென்றால் பார்த்துக்கொண்டிருக்க நாம் ஒன்றும் உன்னைப்போல் துரோகி அல்ல!!! உனது இனவாத கருத்துக்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க உனது இனத்தின் காலடியில் மண்டியிடும் மங்குனிகள் அல்ல நாம் தெரிந்துகொள்ளும் நீ அன்று ஏறாவூர் காத்தான்குடி மற்றும் இன்னும்பல பகுதிகளில் செய்த இனச்சுத்திகரிப்பின் பிரதிபலன்தான் நீ வாய் பிளக்கும் அளவிற்கு இன்று நாங்கள் வளர்ந்து நிற்கின்றோம்!!! இல்லையென்றால் ஒரு வைத்தியர் ஒரு சட்டத்தரனி ஒரு புலமை பெற்ற ஆசிரியர் எல்லாம் உனது இனத்திலிருந்து வந்துதான் எம்மை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததனர். இன்று எம்மிடம் அத்தனையும் ஏராளம்! அக்குறானை பொத்தானை மினுமனுத்தவெளி என்றெல்லாம் பரந்து வாழ்ந்துகொண்டிருந்த எமது சமூகத்தை ஒரு வட்டத்திற்குல் நசுக்க நினைத்ததன் விளைவே எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது! உனது சமூகத்தை ஒரு கணம் திரும்பிப்பார். இப்போதும் வெள்ளம் வந்தால் பாடசாலைக் கட்டிடத்திற்குள்ளும் கோயில் கட்டிடத்திற்குள்ளும் அடைக்கலம் ஆவதை யாரால் உன்னைப்போன்ற பச்சோந்திகளால்தான். நாங்கள் ஒன்றும் உமது சமூகத்திற்கெதிரானவர்கள் அல்ல உன்னைப்போன்ற கொலைகாரர்களின் இனவாத கருத்துக்களுக்கெதிரானவர்கள். இன்னும் தெரிந்துகொள் ஒரு காலமும் உனது காலடியில் மண்டியிடவும் மாட்டோம் அதை எமக்கு எமது மார்க்கம் கற்றுத்தரவுமில்லை!!! இனங்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் நாயே இனியாவது தெரிந்துகொள் அதற்கான தண்டனை என்னவென்று ஏனென்றால் எமக்குத்தெரியும் கருணா என்ற உனக்கு கொலை கொள்ளை துரோகம் என்பவற்றை தவிர வேரொன்றும் தெரியாதென்று!!!

-நாஷர் இஸ்மாயில்-

புல்மோட்டையில் முஸ்லிம்களின் காணிகளில் கடற்படையினர் அத்துமீறல் எம்.எஸ்.தௌபீக், அன்வர் தலையீட்டு இடைநிறுத்தம்

Posted in
-Haithar Ali-
திருகோணலை மாவட்டத்தின், புல்மோட்டை பிரதேசத்தில் காணப்படும் ஜின்னாபுரம், பட்டிக்குடா, கரையாவெளி, முகத்துவாரம் போன்ற பகுதிகளிலுள்ள தங்களுக்குச் சொந்தமான காணிகளை அப்பிரதேச மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் நோக்கில் சுத்தம் செய்ய முற்படுகின்றபோது கடற்படையினரால் மக்களுக்கு எச்சரிக்கை விடப்படுவதும், தங்களது காணிகளுக்கான எல்லை வேலிகள் மற்றும் தங்குவதற்கு கட்டப்படும் கொட்டில்களை அகற்றி கடற்படை முகாமிற்குள் எடுத்து செல்வது போன்ற நடவடிக்கை தொடர்ந்த வன்னமுள்ளது. இக்காணிகளை அண்மித்து காணப்படுகின்ற, மண்கிண்டி மலை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிலிருக்கும் கடற்படையினரே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்ட வன்னம் உள்ளனர். 


இந்த வகையில் நேற்று சனிக்கிழமை புல்மோட்டை ஜின்னாபுரம் கூமாங்குள பிளவு பகுதியில் அப்துல் காதர் ஜெஸ்மீர் என்பவரால் அவருக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் பரப்புள்ள குடியிருப்பு மற்றும் தோட்ட காணிக்குள் படையினர் அத்துமீறி சென்று குறித்த நபரால் வேலியிடப்பட்டிருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட வேலிக்கான தூண்கள், கொட்டிலில் அமைக்கப்பட்டிருந்த கூரைத் தகடுகள் மற்றும் கம்பி போன்றவற்றை கடற்படையினர் அதிகாலைவேளை சென்று அவை அனைத்தையும் அகற்றி கடற்படை முகாமிற்குள் எடுத்து சென்றுள்ளனர்.


பாதிக்கப்பட்ட நபரான அப்துல் காதர் ஜெஸ்மீர் என்பவரால் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரிடம் முறையிட்டதை தொடர்ந்து உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு நடைபெற்ற சம்பவத்தினை புல்மோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, குச்சவெளி பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.


இது விடயமாக கவனம் செலுத்திய அரசாங்க அதிபர் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு உடனடியாக விடயங்களை கவனத்தில் கொள்ளும்படி பணிப்புரை விடுத்தார்.


இது விடயமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதிக்கு தொலைபேசி மூலம் நிலைமைகளை தெளிவுபடுத்தியதுடன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியுடனுன் பேசியதை தொடர்ந்து புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இன்று காலை ஞாயிற்றுக்கிழமை பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை நடாத்தியதுடன் கடற்படையினரால் எடுத்து செல்லப்பட்ட பொருட்களை மீள ஒப்படைக்கும் பொருட்டு கடற்படையினரால் உரியவரின் பொருட்களையும் எடுத்து செல்லுமாறு வேண்டப்பட்டுள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர், அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, புல்மோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி போன்றோரிடம் கடற்படையினர் இவ்வாறு பொதுமக்களின் காணிகளுக்குள் அத்துமீறி செயற்பட அதிகாரமில்லை என்று சுட்டிக்கட்டினார்.

ஏற்கனவே மண்கிண்டி மலை கடற்படை முகாமிற்கு 50 ஏக்கர் காணி பிரதேச செயலகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிகமாக சுமார் 97 ஏக்கர் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் படையினரால் அத்துமீறி வேலியிடப்பட்ட நிலையில் அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலாளரால் அரசாங்க அதிபரூடாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மேலதிகமாக பொதுமக்களின் காணிகள் பிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதியால் கடந்த வருடம் டிசம்பர் 31 ம் திகதி முதல் படையினர் தங்களிடமுள்ள மேலதிக காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் நிலையில் குறித்த படையினரின் அத்துமீறல் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. 


பிரதேச செயலாளரிடம் மேலதிகமாக 93 ஏக்கர் காணிகளை புல்மோட்டை கடற்படை முகாமிற்கு தரும்படி கடற்படையினரால் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலாளரால் பிரதேச மக்களில் அதிகமானோர் காணிகளற்ற நிலையில் இருக்கும்போது தர முடியாத நிலைமை உள்ளதாகவும் படையினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


குறித்த காணியை அண்டிய பகுதியில் வன பரிபாலன திணைக்களத்தின் ஜி.பி.எஸ் யினூடாக தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறிய நிலையிலும் இது விடயமாக பேசப்பட்டு வருகின்றது.


ஏலவே முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்களின் காலத்தில் புல்மோட்டை பிரதேசத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் தலைமையில் வழங்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட காணி அனுமதி பத்திரத்தில் குறித்த பட்டிக்குடா, ஜின்னா புறம் பகுதிகளுக்கும் காணி அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிமக்ளுக்கு வெறுமனே காடுகளுக்கு மட்டுமே காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை ஆராயும் முகமாக விசேட குழுவொன்று இப்பிரதேசத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த நிலையில் பிரதேச செயலகத்தில் அனுமதி பத்திரத்தின் (லெட்ஜ்ர்) அடிக்கட்டைகளை ஜனாதிபதி காரியாலயத்திற்கு கொண்டு சென்ற நிலைமையில் திட்டமிட்டு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை மீள் குடியேற்ற விடாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும். இருந்தும், தொடர்ந்தும் எமது பிரதேச மக்களை அச்சுறுத்தி எச்சரிக்கை செய்து வருகின்றனர், எதுவாயினும் எமது பிரதேச மக்களின் காணிகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவிடயமாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இன்னும் ஒருசில தினங்களில் விசேட கூட்டமொன்றை பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.

மாவடிச்சேனை றியல் விளையாட்டுக் கழகப் பொதுக் கூட்டம்

Posted in
மாவடிச்சேனை றியல் விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டமும் நிருவாகத் தெரிவும் கடந்த 03.01.2019ம் திகதி வியாழக்கிழமை இரவு 8.00 மணியளவில் மாவடிச்சேனை இல்-இக்பால் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அதிதியாக சட்டத்தரணி எம்.எம். ராசீக் அவர்களுடன் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.எல். அஸ்மி மற்றும் அல்-இக்பால் வித்தியாலய அதிபர் எம்.எஸ். ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

நிருவாகத் தெரிவின் போது தலைவராக கே.எல். அஸ்மி அவர்களும், எம்.எம். அஷ்ரப் அவர்கள் செயலாளராகவும், ஏ.எல். அன்வர் அவர்கள் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

நிருவாகத் தெரிவைத் தொடர்ந்து விஷேட இராசப் போசன விருந்து இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 




SCYC கரப்பந்தாட்டத் தொடரில் சம்பியனானது மீராவோடை அல்-அக்ரம் வி.க

Posted in
மீராவோடை கிழக்கு சுப்பர் செலஞ்சர்ஸ் இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று 04.01.2019ம் திகதி மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் அல்-மதினா விளையாட்டுக் கழகம் மற்றும் மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக் கழம் ஆகியன மோதியிருந்தன. புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிவாகை சூடிய மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தைக் கைப்பற்றி சம்பியனானது குறிப்பிடத்தக்கது. 




எம்.எம்.ஹனீபா (G.S) அன்பளிப்பில் UNITED AIDஇனால் கொப்பிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Posted in

UNITED AID அமைப்பானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒரு அங்கமாக வருடாவருடம் வறிய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்களை பல்வேறு பகுதிகளிலும் வழங்கி வருகின்றது

அதன் ஒரு கட்டமாக மாஞ்சேலை-பதுரியா நகர் பகுதிக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான இலவச விநியோகம் இன்று இடம்பெற்றது. இதற்காக பிரபல சமூக சேவையாளரும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.ஹனீபா (ஜீ.எஸ்) அவர்கள் அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

இவை UNITED AID அமைப்பின் பணிப்பாளர் .பி.எம். றிஸ்வின் அவர்களினால் நேரடியாக குறித்த பகுதி மாணவர்களுக்காக இன்று 04.01.2019ம் திகதி மாலை பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது குறுகிய வேண்டுகோளை ஏற்று அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுத்தந்துதவிய எம்.எம்.ஹனீபா (ஜீ.எஸ்) அவர்களுக்கு அமைப்பு சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.