Posted in
மட்டக்களப்பில் ஒரே இரவில் நான்கு கோயில்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிட்டதன் பின்னணியில் அடிப்படை இனவாதக் கும்பல் செயற்படுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்கு ஆலயங்கள் நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு நகரின் வடக்கு பிரதான நுழைவாயில் பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிறுவுவதற்கு எடுத்த முயற்சிகளை மட்டக்களப்புவாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மக்கள் எதிர்த்தார்கள்.
அதற்கான அமைதிப் போராட்டம் ஒன்றையும் கடந்த காலத்தில் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயம், குருக்கள்மடம் ஐயனார் ஆலயம், மாங்காடு பிள்ளையார், பாண்டிருப்பு திரௌபதி ஆலயம் ஆகியன ஒரே நாளில் உடைக்கப்பட்டுள்ளன.
இதில் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் 19 விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு 20 பவுண் பெறுமதியான தங்க தகடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த செயற்பாட்டின் பின்னணியில் அடிப்படை இனவாதக் கும்பல் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்ட வேண்டும் என இந்து மக்கள் முன்னணியின் சார்பில் கோரிக்கை விடுவதாக நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.