Posted in
முஸ்லிம்களின் வரலாறு கற்கத் தயாராகும் !
கல்குடா முஸ்லிம் சமூகம் !!
03.10.2016 ஆம் திகதி திங்கட்கிழமை மீராவோடை தமிழ் சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா,பரிசளிப்பு விழா,சஞ்சிகை வெளியீட்டு விழா முப்பெரும் விழாக்களில் பிரதம,கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யோகேஸ்வரன் ஐயர் அவர்கள்
ஓட்டமாவடியில் இழந்த பிள்ளையார் ஆலயம்,மயானம்,குடியிருப்புக் காணிகளை மீளப் பெற்றுக் கொள்ள தமிழ் மக்கள் முன்வர வேண்டுமென்று பேசியுள்ளார்...!!!
ஓட்டமாவடி முஸ்லிம் சமூகத்தின் சார்பாக நீங்கள் முன் வைக்கும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில்
ஊடக அல்லது இரண்டு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்திய நீண்ட
கலந்துரையாடல்களை நடாத்தி தெளிவு படுத்த நாங்கள் தயார் !
நீங்கள் பங்குபற்றத் தயாரா?
அப்படியானால் கால,நேரங்களைத் தாருங்கள் !
1983,1985 ஆம் ஆண்டுகளில் அன்று சாண்டாரக் கொளணி என்று அழைக்கப்பட்ட
இன்றைய ஓட்டமாவடி சந்தைப் பகுதி,
மர்கஸ் பள்ளிவாயல்,நுாலகம்,பிரதேச செயலகம்,தபால் அலுவலகம் அமைந்துள்ள ஓட்டமாவடி முதலாம் வட்டாரங்களை கால விதிப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து மீட்டெடுக்க வேண்டுமென்று தமிழ் மக்களை அழைக்கிறார்கள்.
இந்தச் சட்டம் பயங்கரவாத காலங்களில் குறைந்த விலைகளுக்கு அச்சுறுத்தி வேண்டிய.விற்பனை செய்த,உயிர் அச்சுறுத்தி,அழித்து வெளியேற்றிவிட்டு பலாத்காரமாக கைப்பற்றிய காணிகள்.
1.அவர்கள் விரும்பி தனி மனிதர்களுக்கு விற்பனை செய்தார்கள்
2.இரண்டு சமூகங்களும் கலந்து பேசி மாற்றுக் காணிகளை பகிர்ந்து கொண்டார்கள்.
ஆலயம்,மயானம்,இருப்புக்களுக்குப் பதிலாக ஓட்டமாவடி முஸ்லிம் சமூகம்
தற்போது வாழைச்சேனை பிரதேச செயலகம்,பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் இன்னபிற அரச அலுவலகங்கள்,தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ள
பழைய வாழைச்சேனை வெலிங்கடன் தியேட்டர் தொடங்கி ஏ,எஸ்.பி.பொலிஸ் நிலையம் முன்பாகச் செல்லும் வினாயபுரம் செல்வதற்கான வீதி வரை
அன்றைய இக்கிராமத்தின் பெயர் யூனியன் முஸ்லிம் கொளணி இக்கிராமத்தில் தியேட்டருக்கும்.சங்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் முஸ்லிம் சமயக் கலாச்சாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல் உட்பட 167 குடும்பங்கள் நிரந்தரமாக வாழ்ந்து வந்த முழுக் கிராமமும் பகரமாக அவர்களிடம் கொடுக்கப்பட்டன.
இக்கிராமங்களில் வாழ்ந்ததற்கான சகல ஆதாரங்களும்,ஆவணங்களும் முஸ்லிம்களிடமுள்ளன.அரச நஸ்ட்ட ஈடுகளான மீள் குடியேற்ற-புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக 110 குடும்பங்கள் நஸ்ட்ட ஈடு நிதிகளையும் பெற்றுக் கொண்ட ஆதாரங்கள் உள்ளன.
அப்படியானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்நாள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே !
முஸ்லிம் சமூகமும் யூனியன் முஸ்லிம் கொளணியை மீட்டெடுக்க காலவிதிப்புச் சட்டத்தின்படி வழக்குகளைத் தொடுக்கவா சொல்கிறீர்கள்?
மேலும் ஓட்டமாவடி பள்ளிவாயல் நிருவாகம் கருவாக்கேணி ஆலயத்தை கட்டுவதற்கு உதவி செய்தார்கள்.
கருவாக்கேணி என்ற கிராமமே முஸ்லிம் சமூகத்தின் தோட்டங்கள் நிறைந்த வாழ்ந்த கிராமமாகும்.
ஆலயத்திற்கு பக்கத்தில் பாறுக் நானாவின் குடும்பமான பைசிக்கிள் கடை இக்பால் நானா(லத்தீபா ராத்தா) வாழ்ந்த இடமாகும்.
பாடசாலை அமைந்துள்ள,சுற்றுவட்டாரக் காணிகள் அனைத்தும் தென்னிந்திய,காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தின் காணிகளாகும் இந்த அமைவிடங்களுக்குமா வழக்குகளை தொடுக்க வேண்டும்?
கொண்டையன்கேணி,சுங்கான்கேணி,மீராவோடை தமிழ்,கிண்ணையடி போன்ற கிராமங்களில் முஸ்லிம்களின் காணிகள் அனைத்தும் பயங்கரவாதத்தால் கைப்பற்றப்பட்டன.
சிலரின் காணிகளை மீராவோடை முஸ்லிம் பரம்பரையின் அலியார் போடி,ஈசா லெப்பை விதானை,லெப்பைத் தம்பி விதானையின் சகோதரர் பீர் முகம்மத் அவர்களின் காணிகள் மீராவோடை தமிழ் கிராமத்தில் இருந்தன.
அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற தமிழ் மக்கள் எல்லோருக்கும் தெரிந்த குடும்பம்
அப்படி இருந்தும் அவர்களும் வழக்குத் தொடர்ந்துதான் ஒரு பகுதியை சட்டத்தின் ஊடாக மீட்டெடுத்துள்ளனர்.!
ஐயாமாரே இது உங்களுக்குத் தெரியாதா?
நீங்கள் பிரச்சனைப் படுத்தாமல் முஸ்லிம் சமூகத்திற்கு விழங்கிய,பெற்றுக் கொடுத்த ஒரு காணியை காட்டுங்கள் !?
முஸ்லிம்களின் பாரிய தென்னம் தோட்டங்கள் இருந்த இடங்கள் அனைத்திலும் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆதாரங்களையும்,ஆவணங்களையும்,ஆட்களையும் அழைத்து வருகின்றேன் தீர்வு பெற்று மீட்டுக் கொடுக்க முடியுமா?
தற்போது மீராவோடை தமிழ் கிராமம் என்று முஸ்லிம்களின் காணிகளை பறித்தெடுத்த தொடரில் சக்தி வித்தியாலயத்தின் வடக்குப் பகுதி முஸ்லிம்கள் நிரந்தரமாக வாழ்கிறார்கள்.
கிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக வாழ்ந்ததற்கான சாட்சிகளாக தமிழ் மக்கள் இருக்கிறார்கள்,
தடயங்கள் இருக்கிறது,
ஆதாரங்கள்,ஆவணங்கள் உள்ளன.
அப்படியானால் ஏன் முஸ்லிம்களின் காணிகளை அரச காணி என்று பாடசாலைக்கு சுவீகரித்து வேலி போட்டுள்ளீர்கள்?
முஸ்லிம்கள்தான் சட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளன.
சத்தங்கள் மாத்திரம் இல்லாமல் உள்ளன ஆனால் அரச நிருவாக பயங்கரவாதம் முஸ்லிம்களை நசுக்கி,மிதித்துக் கொண்டுதான் செல்கின்றன.
இது போன்று கல்குடாத் தொகுதி முஸ்லிம்கள் வாழ்ந்த 35க்கு மேற்பட்ட கிராமங்கள் தமிழ் மக்கள் பயங்கரவாத காலத்தில் பறித்தெடுத்து முஸ்லிம்களை அகதிகளாகத் துரத்திவிட்டு வாழ்கிறார்கள்.
முடியுமானால் மனச்சாட்சியுள்ள,மனித நேயமுள்ள மனித வர்க்கமானால் வாருங்கள் அழைத்துச் சென்று எல்லா ஆதாரங்களுடனும் காட்டுகிறேன்.!
தமிழ் மக்கள் எப்படி மீராவோடையில் முஸ்லிம்களுடன் வாழ்ந்தார்கள் என்பது தெரியுமா?
முஸ்லிம் சமூகம் எங்கெல்லாம் உள்ளார்களோ ! அங்கெல்லாம் சலவைத் தொழிலாளர்கள் என்றும் வண்ணார்கள் என்றும் அழைக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களுடன் வாழ்ந்தார்கள்.முஸ்லிம்கள் அவர்களை வாழ வைத்தார்கள்.இன்றும் வாழ்கிறார்கள்.அவர்கள் உயர்சாதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டதனால்.
முஸ்லிம்களுடன் இரண்டரக் கலந்து வாழ்ந்தார்கள் அதுதான் ஐயாமாரே வரலாறாகும்.! உயர்சாதி வெறிகொண்டவர்களால் மாத்திரம்தான் இப்படியான பிரச்சனைகள் தோன்றின,தோன்றுகின்றன.!
இறுதியாக வெள்ளிமலை ஐயா அவர்களே உங்களிடம் சில கேள்விகள் !
உங்களுக்குத் தெரியுமா?
மீராவோடையில் தத்தி அல்லது குடும்பம் என்று அழைக்கப்படும் குளத்துப் போடியார் குடும்பம் என்பார்கள்,
அக்கிறாணையார் குடும்பம் என்பார்கள் !
இவைகள் என்ன என்று தெரியுமா?
வெள்ளிமலை ஐயா முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான தந்தைமார் அறபிகள்தான் !
தாய்மார் யார் தெரியுமா?
வட-கிழக்கில் ஒரிஜினல் தமிழச்சி ஐயா !
எங்கள் தாய்க்குழாம் !
அப்படியானால் நாங்களும் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்கள்.
எங்களுக்கும்,உங்களுக்கும் இரத்த உறவுகள் உண்டு !
அதனால்தான் முஸ்லிம்களை தமிழர்கள் காக்காமார் என்றும்,சிங்களவர்கள் தம்பிமார் என்றும் அழைக்கிறார்கள்.!
முஸ்லிம்கள்,தமிழர்களுக்கும்,இரத்த உறவுகள்,சிங்களவர்களுக்கும் இரத்த உறவுகள்தான்.!
இன்றும் பல இடங்களில் அப்படித்தான் உள்ளன வாருங்கள் அழைத்துச் சென்று காட்டுகிறேன்.
வட-கிழக்குக்கு வெளியே சிங்களத்தி ஐயா !
எங்கள் தாய்க்குழாம் !
குளத்துப் போடியார் என்று சொல்பவர்கள் பாரம்பரிய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் !
அக்கிறாணையார் குடும்பம் அப்பா அறபிகளையும்,அம்மா தமிழச்சிகளையும் கொண்ட குடும்பம் !
எனவே ஐயாமாரே நீங்கள் எங்களை கீழ்சாதி மக்களாக அடிமைப்படுத்தி,கொடுமைப்படுத்தி எங்களை மனித இனமாக நடாத்ததமல் எல்லா வகையிலும் அடிமைப்படுத்தியதால்தான்.
சாந்தி,சமாதானம்,சமத்துவம்,சகோதரத்துவம்,நல்லுறவு என்று எல்லாவற்றையும் பொதுவில் சமமாக மதிக்கும்,மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் புனித இஸ்லாத்தில் எங்கள் முன்னோர்கள் இணைந்து கொண்டனர்.
இன்னும் உங்கள் உயர்சாதி குணாம்சங்களை மூடை கட்டி மூலையில் வைத்துவிட்டு எல்லோரும் மனிதர்கள்தான்.!
எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டு மனித இனமாக அறிவு ஞானிகளாக மாறுமாறு மனித நேயமிக்க மனித சமூகத்தின் சார்பில்,
அறிஞர் அண்ணா,எம்.ஜீ.ஆர்,கலைஞர் கருணாநிதி இவர்களது சிந்தனைகளையும் ஞாபகப்படுத்தி
அழைக்கின்றேன்.
வை.எல்.மன்சூர் - 0779613620