Posted in
நாளை ஞாயிற்றுக்கிழமை கிரான் வாராந்த சந்தைக்கு வருகை தரவிருக்கும் முஸ்லிம் வியாபாரிகளை தாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
அதன் பிரகாரம் இன்று மாலை முஸ்லிம் வியாபாரிகளை தாக்குவதற்குத் தூண்டும் பதாதைகள் கிரான் சந்தியில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.
அத்தோடு நள்ளிரவில் கிரானை வந்தடையும் முஸ்லிம் வியாபாரிகளின் வாகனங்களைத் தாக்கவும் சதித் திட்டம் போடப்பட்டுள்ளது.
நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் முன்பாக தமிழ், முஸ்லிம் ஆட்டோ தரிப்பிடப் பிரச்சினையின் போது ஏற்பட்ட வாக்குவாதமே இதற்குக் காரணம் என்றும் தெரிய வருகிறது.
இவ்விடயம் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிய வந்ததையடுத்து இப்போது நள்ளிரவு தொடக்கம் பெருமளவான பொலிசார் கிரான் சந்தியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த தாக்குதல் சம்பவத்தை முன்நின்று நடத்த திட்டமிட்டவராகக் கருதப்படும் கிண்ணையடியைச் சேர்ந்த குணராசா குணசேகரன் என்பவரை வாழைச்சேனைப் பொலிசார் காலை 6 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
ஆகவே, தங்களுக்குத் தெரிந்து கிரானுக்கு வியாபாரத்திற்குச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகளை அங்கு செல்லாது தவிர்ந்து கொள்ள அறிவித்தல் விடுக்கவும்.
உரிய நேரத்தில் பாரிய வன்முறை ஒன்றை முறியடித்து நடவடிக்கை எடுத்த வாழைச்சேளை பொலிசார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினருக்கு பொதுமக்கள் சார்பாக நன்றிகள்.