0
தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சிறுவனுக்கு ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் சிகிச்சைக்கான நிதியுதவி
Posted in
கடந்த ஏப்ரல்
21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கொடூர
தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலத்த காயங்களுக்குள்ளான 10 வயதான அசாயல் றொசைறோ அதி தீவிர
சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு
மேலதிகமாகத் தேவைப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கான செலவுகளை சமாளிக்க
முடியாமல் பெற்றோர் உடைந்து போயிருந்ததோடு விருப்பமுடைய கொடையாளர்களிடமிருந்து உதவிகளையும்
கோரியிருந்தனர்.
மேற்படி சிறுவனின்
மருத்துவச் செலவுகளுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்ட ஐக்கிய
உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம்மாளான ஒரு
உதவித் தொகையினை அவசரமாக சேமித்திருந்தனர்.
அந்தவகையில் நேற்று
2019.05.24ம் திகதி மாலை குறித்த அமைப்பின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் அவர்களின் தலைமையில்
மட்டக்களப்பிலுள்ள குறித்த சிறுவனின் இல்லத்திற்குச் சென்ற ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள்
சங்கத்தின் உறுப்பினர்களால் உதவித் தொகையாக சுமார் இருபத்தி ஐயாயிரம் ரூபா காசோலை மூலம்
வழங்கி வைக்கப்பட்டது.
இதேபோன்று சமூக
அமைப்புக்கள், தனவந்தர்கள் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி படுகாயமடைந்துள்ள குறித்த
சிறுவனின் மருத்துவ செலவுகளுக்கு உதவிட முன் வர வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.