Follow me on Twitter RSS FEED

சமூக வலைத்தள பாதுகாப்பும், இணையத்தள துஷ்பிரயோகமும் - இளைஞர் செயலமர்வு

Posted in

இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் சமூக வலைத்தள பாதுகாப்பும், இணையத்தள துஷ்பிரயோகமும் எனும் தொணிப் பொருளில் இளைஞர்களுக்கான செயலமர்வு  இன்று 2018.12.30 ஞாயிற்றுக்கிழமை மட்/ செம்மணோடை அல்- ஹம்றா வித்தியாலயத்தில் இளைஞர் சேவை கள உத்தியோகத்தர் திரு.எஸ். அருளானந்தம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. 


பயிற்சி செயலமர்வின் வளவாளர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் நிலைய உத்தியோகத்தர் ஜனாப்.ஏம் ஹனிபா அவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் IS A (IT) ஆலோசகர் ஜனாப்.MBT.கான் அவர்களும் பங்கேற்று இருந்தனர்.

கோறளைப்பற்று மத்திபிரதேச செயலாளர் பிரிவுகளில்உள்ள இளைஞர் கழக அங்கத்தவர்கள் செயலமர்வில் கலந்து கொன்டனர் இணையத்தளத்தின் தவறான தொழில் நுட்ப பாவனைஇணையத்தள துஷ்பிரயோகம்கணணி குற்றங்கள் - சைபர் கிரைம் போன்ற தலைப்புக்களில் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் பங்குபற்றுனர்களுக்கு சிறந்த சமூக ஊடக வலையமைப்புக்காக அணிதிரழ்வோம் எனும் கையேடும் வழங்கிவைக்கப்பட்டது.













விபத்துக்களைத் தடுக்க கல்குடா செலஞ்சர்ஸ் RDA இணைந்து முன்மாதிரியான நடவடிக்கை

Posted in

நாவலடி – கொழும்பு பிரதான வீதியில் புனானை ஆர்வு 125/3 எனும் இடத்தில் வீதியின் குறுக்காக நீர் வழிந்தோடக் கூடிய இடம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முற்றாக சேதமடைந்து வீதியிலும் பாரிய குழி ஏற்பட்டிருந்தது. இதன் திருத்த வேலைகள் துரித கதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த இடத்தில் வீதி திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன என்ற அறிவித்தல் எச்சரிக்கை சமிக்ஞைகள் முறையாக இடப்பட்டிருந்தாலும் வேகமாக வாகனத்தை செலுத்தி வரும் சாரதிகளினால் ஒரு குறுகிய காலத்திற்குள் 05ற்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டிருந்ததோடு ஒரு விபத்தினால் பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த 23 வயதுடைய கர்ப்பிணித் தாயும் மரணமடைந்திருந்தார்.

மேலும் இவ்விடத்தில் விபத்துக்கள் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்குடா செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முன்வந்து RDAயின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தனர். 

அந்தவகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்குப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திரு. சசினந்தன், தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு. தயாபரன் ஆகியோரின் வழிகாட்டலில் குறித்த இடத்தினூடாக வாகனங்கள் மெதுவாகப் பயணிக்க அறிவுறுத்தும் சமிக்ஞைகள் அறிவுறுத்தல்களுடன் போக்குவரத்து பொலிசாரின் உருவ அமைப்பை ஒத்த பொம்மை ஒன்றையும் நிறுவ கல்குடா செலஞ்சர்ஸ் அணியினர் உபதலைவர். முஸ்தபா ஹாஜியின் தலைமையில் அவ்விடத்திற்கு நேற்றைய தினம் 26.12.2018ம் திகதி சென்றிருந்தனர். இதன் போது RDA மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். றிபான் குறித்த இடத்திற்கு வந்து வேலைகளை கண்காணித்திருந்தார். 

கல்குடா செலஞ்சர்ஸ் அணியின் இந்த செயற்பாடானது ஏனைய கழகங்கள் அமைப்புக்களுக்கு ஒரு முன் உதாரணமானதாகும் என்பதோடு மிகவும் பாராட்டத்தக்க ஒன்றும் ஆகும். அத்தோடு இவ்விடத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கிய RDAயையும் பாராட்டி ஆக வேண்டும்.






இறையடி சேர்ந்த இரு ஆசான்களின் ஞாபகார்த்தமாக இரத்ததான முகாம் - OCC 2012 Batch

Posted in


மர்ஹூம் AHM.தாஹிர் (ஆசிரியர்)மர்ஹூம் ALM.கபீர் (ஆசிரியர்) அவர்களின் நினைவாக மட்/மம/ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 2012 .பொ. சாதாரண தர பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாமொன்று எதிர்வரும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது 29.12.2018 (சனிக் கிழமை) மு..8.30 தொடக்கம் பி..4.30 வரை மட்/மம/. எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.


கல்குடா - பிரதேச கலாசார விழா...

Posted in
எஸ்.எம்.எம்.முர்ஷித் - 

கலாசார அலுவல்கள் திணைக்களம் கிழக்கு மாகாண பண்பாட்டல்வல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய பிரதேச கலாசார விழாவும் வாழை மடல் மலர் வெளியீடும் நேற்று (17.12.2018) திங்கள் கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு பாராட்டுப்பெரும் இளம் கலைஞர்கள், விஷேட கௌரவ விருது என்பன வழங்கப்பட்டதுடன் கலாசார விழாவை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மூத்த கலைஞர்களாக பல்துரை சார்ந்த விருது யூ அஹமட்டுக்கு வழங்கியதுடன் இலக்கியத்திற்கான விருது ஏ.அப்துல் மஜீதுக்கு வழங்கியதுடன் கிராமிய வைத்தியத்திற்கான விருது எல்.அப்துல் காதருக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இளம் கலைஞர்களுக்கான விருது ஜிப்ரிஹாஸனுக்கு சிறுகதைக்கான விருதும், யூ.எல்.ஸல்மானுல் ஹரீசுக்கு கவிதைக்கான விருதும், பீ.ரீ.பாத்திமா அஸ்பாவுக்கு ஓவியத்திற்கான விருதும் எம்.எம்.அஸ்லத்திற்கு அறிவிப்பாளருக்கான விருதும், ஐ.எல்.அப்துல் நாசருக்கு மரக் கைவினைக்கான விருதும் வழங்கப்பட்டதுடன் விஷேட கௌரவ விருது வாழைச்சேனை நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபு கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் எம்.ஏ.றஹ்மதுல்லாஹ்வுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் இளம் ஓவியர்கலாளான எம்.சமீம் மற்றும் உசனார் நிமாஸ்; ஆகியோரால் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்முஸம்மிலின் உருவம் ஐந்து நிமிடத்தில் வரைந்து சபையோரின் பாராட்டினையும் பெற்றனர்.

பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.அப்துல் கபூர், கே.எல்.அஸ்மி, எம்.பி.எம்.தையூப், எம்.ஐ.எம்.இம்தியாஸ், கோறளைப்பற்று மேற்கு கோட்ட கல்வி பணிப்பாளர் .எஸ்.கே.றஹ்மான், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான், சாட்டோ இணைய தளத்தின் பணிப்பாளர் வை.எல்.மன்சுர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.



















“கல்குடாவில் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்” - ஏ.எல்.எம். சதாம்

Posted in
கல்குடா ACMC இளைஞர் அணியின் அன்பளிப்புடன் இளம்பிறை விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு இன்று 08.12.2018ம் திகதி 04.30 மணியளவில் மீராவோடையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் அமைப்பாளர் ஏ.எல்.எம். சதாம் அவர்கள் கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் போதைவஸ்து பாவனை இளைஞர்களிடத்தில் அதிகரித்து வருவதனையும், இளைஞர்கள் போதைவஸ்தின் பக்கம் எவ்வாறு ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும் அதனை தடுத்து நிறுத்த இதுவரை முறையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இன்றைய இளைஞர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்தார்.

அத்தோடு சமூகத்திலுள்ள சகல மட்டத்தினரும் பாகுபாடின்றி ஒன்றுபட்டு ஒரு கட்டமைப்பின் கீழ் போதைவஸ்து பரவலுக்கெதிராக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இல்லாதுபோனால் எமது ஊர் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தானதொன்றாக மாறி முஸ்லிம் சமூகத்திற்கே பெரியதொரு சவாலாக அமைந்துவிடும் என்றும் மேலும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்தியர் அல்தாப் அலி அவர்களும், முன்னாள் மீன்பிடி நீரியல்வள, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எஸ்.எம். றிஸ்மின் (ஆசிரியர்) அவர்களும், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட் அவர்களும், செம்மண்ணோடை பிரதேச சபை வேட்பாளர் ஹக்கீம் ஆசிரியர் அவர்களும் இன்னும் சில அதிதிகளும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  


பட உதவி  நுசைக் அஹமட்