Follow me on Twitter RSS FEED

விபத்துக்களைத் தடுக்க கல்குடா செலஞ்சர்ஸ் RDA இணைந்து முன்மாதிரியான நடவடிக்கை

Posted in

நாவலடி – கொழும்பு பிரதான வீதியில் புனானை ஆர்வு 125/3 எனும் இடத்தில் வீதியின் குறுக்காக நீர் வழிந்தோடக் கூடிய இடம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முற்றாக சேதமடைந்து வீதியிலும் பாரிய குழி ஏற்பட்டிருந்தது. இதன் திருத்த வேலைகள் துரித கதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த இடத்தில் வீதி திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன என்ற அறிவித்தல் எச்சரிக்கை சமிக்ஞைகள் முறையாக இடப்பட்டிருந்தாலும் வேகமாக வாகனத்தை செலுத்தி வரும் சாரதிகளினால் ஒரு குறுகிய காலத்திற்குள் 05ற்கு மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டிருந்ததோடு ஒரு விபத்தினால் பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த 23 வயதுடைய கர்ப்பிணித் தாயும் மரணமடைந்திருந்தார்.

மேலும் இவ்விடத்தில் விபத்துக்கள் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்குடா செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முன்வந்து RDAயின் ஆலோசனைகளைப் பெற்றிருந்தனர். 

அந்தவகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்குப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் திரு. சசினந்தன், தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு. தயாபரன் ஆகியோரின் வழிகாட்டலில் குறித்த இடத்தினூடாக வாகனங்கள் மெதுவாகப் பயணிக்க அறிவுறுத்தும் சமிக்ஞைகள் அறிவுறுத்தல்களுடன் போக்குவரத்து பொலிசாரின் உருவ அமைப்பை ஒத்த பொம்மை ஒன்றையும் நிறுவ கல்குடா செலஞ்சர்ஸ் அணியினர் உபதலைவர். முஸ்தபா ஹாஜியின் தலைமையில் அவ்விடத்திற்கு நேற்றைய தினம் 26.12.2018ம் திகதி சென்றிருந்தனர். இதன் போது RDA மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். றிபான் குறித்த இடத்திற்கு வந்து வேலைகளை கண்காணித்திருந்தார். 

கல்குடா செலஞ்சர்ஸ் அணியின் இந்த செயற்பாடானது ஏனைய கழகங்கள் அமைப்புக்களுக்கு ஒரு முன் உதாரணமானதாகும் என்பதோடு மிகவும் பாராட்டத்தக்க ஒன்றும் ஆகும். அத்தோடு இவ்விடத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கிய RDAயையும் பாராட்டி ஆக வேண்டும்.






0 comments: