Posted in
இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் சமூக வலைத்தள பாதுகாப்பும், இணையத்தள துஷ்பிரயோகமும் எனும் தொணிப் பொருளில் இளைஞர்களுக்கான செயலமர்வு இன்று 2018.12.30
ஞாயிற்றுக்கிழமை மட்/ செம்மணோடை அல்- ஹம்றா வித்தியாலயத்தில் இளைஞர் சேவை கள உத்தியோகத்தர் திரு.எஸ். அருளானந்தம் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
பயிற்சி செயலமர்வின் வளவாளர்களாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் நிலைய உத்தியோகத்தர் ஜனாப். ஏ.ஏம் ஹனிபா அவர்களும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் IS
A (IT) ஆலோசகர் ஜனாப்.MBT.கான் அவர்களும் பங்கேற்று இருந்தனர்.
கோறளைப்பற்று மத்திபிரதேச செயலாளர் பிரிவுகளில்உள்ள இளைஞர் கழக அங்கத்தவர்கள் செயலமர்வில் கலந்து கொன்டனர் இணையத்தளத்தின் தவறான தொழில் நுட்ப பாவனை, இணையத்தள துஷ்பிரயோகம், கணணி குற்றங்கள் - சைபர் கிரைம் போன்ற தலைப்புக்களில் இளைஞர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் பங்குபற்றுனர்களுக்கு சிறந்த சமூக ஊடக வலையமைப்புக்காக அணிதிரழ்வோம் எனும் கையேடும் வழங்கிவைக்கப்பட்டது.