Posted in
M.T.M. Haither Ali
கோறளைப்பற்று
மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள
மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக்
குழுக் கூட்டம் வைத்திய பொறுப்பதிகாரி
வைத்தியர் எச்.எம்.எம்.
முஸ்தபா தலைமையில் 2018.08.18ஆம் திகதி - சனிக்கிழமை
நடைபெற்றது.
இவ்வைத்தியசாலையில் தற்போதுள்ள நோயாளர் விடுதி பல
குறைபாடுகளுடன் காணப்படுவதனால் இதனை நிவர்த்தி செய்யும்
வகையில் சகல வசதிகளையும் கொண்ட
மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை
புதிதாக அமைத்துக் கொள்வதற்கு பல சிரமங்களுக்கு மத்தியில்
பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வெற்றிகண்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.
முஸ்தபா பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அத்துடன் முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்காக, சுகாதார
பிரதி அமைச்சர் கௌரவ. பைசல் காசிமினால்
பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டமைக்கு வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழுவினாரால்
பிரதி அமைச்சர் நன்றி கூறப்பட்டார். இக்கூட்டத்தின்போது
கட்டிடத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகளை
ஆரம்பிப்பது தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மற்றும் கட்டிட திணைக்கள பிரதம
பொறியியலாளர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன்,
வைத்தியசாலையில் நிலவும் ஆளணி தொடர்பான
விடயங்களை பெற்றுக்கொள்வதற்காக புதியதொரு தரவுகள் அடங்கிய ஆவணப்படுத்தலுடன்
இதற்கு பொறுப்பான அதிகாரிகளை சந்தித்து, அவர்களினூடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும், இதற்கு முன்னர் அபிவிருத்திக்
குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இவ்வைத்தியசாலைக்கு மேலும் இரு வைத்தியர்களையும்,
மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர் (MLT) மற்றும் புதிய அம்பியுலன்ஸ்
வண்டி என்பன பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதனை துரிதகதியில் பெறுவதற்கான
முன்னெடுப்புக்களும் நடைபெற்று வருகின்றது. சுகாதார பிரதி அமைச்சர்
கௌரவ. பைசல் காசிமினால் இவ்வைத்தியசாலைக்கு
ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து மில்லியன் ரூபாவுக்கான
கடிதத்தினை அபிவிருத்திக் குழுவினர் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர்
எச்.எம்.எம். முஸ்தபாவிடம்
உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.