இனங்களுக்கிடையே
சுமுகமான நல்லுறுவு ஏற்பட்டு சகல இன மக்களும்
சமாதானத்துடன் வாழும் சூழல் நிலைத்து
நிற்கவேண்டுமென, இந்த தியாகத் திருநாளில்
முஸ்லிம்கள் ஏக இறைவனைப் பிராத்திக்க
வேண்டும் என்று ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ்
விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பாகங்களில்
வாழும் முஸ்லிம்கள் தியாகத் திருநாளை, தியாக
உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து புனித மக்கமா நகரில்
நமது சகோதரர்கள் ஒன்றுகூடி அழுது, தொழுது அல்லாஹ்விடம்
பிரார்த்தித்து வருகின்றனர். நமக்கு அந்த பாக்கியம்
இன்றைய நாளில் கிடைக்காவிடினும் இப்ராஹிம்
நபி, அவரது அருமை மகன்
இஸ்மாயில் நபியின் தியாக உணர்வுகளை
நினைத்துக் கண்ணீர் மல்கி நிற்கின்றோம்.
இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி பல இன, மத மக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு ஏனையவர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை, பாதிப்புகளை தங்களது சொந்த நலன்களுக்காகவும் அபிலாசைகளுக்காகவும் பலரும் சுயநலமாக இன்று பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் இறைவனின் கட்டளையை ஏற்று தனது சொந்த விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி சமூக மாற்றங்களுக்காக மாபெரும் தியாகங்களை நிகழ்த்திக்காட்டிய ஒரு குடும்பத்தின் வரலாற்றையே இஸ்லாம் இந்த தியாகத்திருநாளின் வாயிலாக நமக்கு கற்றுத்தந்துள்ளது. உலகில் வாழும் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், சந்தோசமகவும் வாழ்வதற்கு இந்த திருநாள் வழிவகுக்க வேண்டுமென இறைவனை பிரார்திப்போம். இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் விடுதுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.