0
ஓய்வு பெற்றுச் செல்லும் மீராவோடை உப தபாலகத்தின் உப தபாலதிபரும், தரமுயர்த்தப்பட இருக்கும் தபாலகமும்
Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-
மட்டக்களப்பு
மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர்
பிரிவில் அமைந்துள்ள மீராவோடை உப தபாலகத்தின் உப
தபாலதிபராக கடமையாற்றி வந்த சம்சுதீன் அப்துல்
ஹமீது (இஸ்மாயில்) 2018.08.11ஆம்திகதி - சனிக்கிழமையுடன் தனது 23 வருடகால சேவைக்காலத்தினை
நிறைவு செய்து ஓய்வு பெற்றார்.
தனது
23 வருடகால உப தபாலதிபர் சேவைக்காலத்தில்
தனது பணியினை திறன்பட ஆற்றியதுடன்,
நாளாந்தம் இவ் தபாலகத்தில் சேவையினை
பெற்றுக் கொள்வதற்காக வருகைதரும் பொதுமக்களுக்கு தன்னால் முடியுமான வகையில்
நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் நீதியாகவும்,
நேர்மையாகவும், சேவைகளை வழங்கிய ஒருவராகும்.
ஒரு
நபர் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பலித்து தனது கடமையினை நீதியாகவும்,
நேர்மையாகவும், செயற்படுத்தும்போது சிலருக்கு அவரின் செயற்பாடுகள் பிடிக்காமல்
இருக்கலாம் அதற்கு அவர் பொறுப்பாகமுடியாது
என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறான
நிலை எவருக்கும் தோன்றி இருந்தால் தனது
சேவைக் காலத்திலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் இத்தருணத்தில் எவருக்கேனும் தீங்கிழைக்கப்பட்டிருந்தால் அதனை நாம் மன்னிப்பது
நமது பெறுந்தன்மையாகும்.
தனது
சேவையின் முதல் நியமனத்தினை 1990.03.24ஆம் திகதி
தற்காலிக நியமனத்துடன் சேவையினை ஆரம்பித்து கடமையாற்றிய நிலையில் 1995.07.24ஆம்திகதி நிரந்தர நியமனத்தில் அமர்த்தப்பட்டு
அன்று தொடக்கம் தனது இறுதி சேவைக்
காலமான 2018.08.11ஆம்திகதி வரை உப தபாலதிபராக
கடமையாற்றியுள்ளதுடன், தனது பணியினூடாக மக்களுக்கான
சேவையினை திறன்பட செய்து இன்று
அச்சேவையிலிருந்து பிரியாவிடையும் பெற்றுள்ளார்.
மீராவோடை
உப தபாலகமானது 1953.04.16ஆம் திகதி மீராவோடை
பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆரம்பிக்கப்பட்ட அன்று தொடக்கம் இன்றுவரை
தரமுயர்த்தப்படாத நிலையில் உப தபாலகமாகவே காணப்படுகின்றது.
மீராவோடை
உப தபாலகத்தை தபாலகமாக தரமுயர்த்த வேண்டுமென்ற எண்ணமும், ஆசையும் கல்குடாத் தொகுதியின்
முதல் முஸ்லிம் மக்கள் பிரதிநிதியான மர்ஹூம்
முன்னாள் பிரதியமைச்சர் முகைதீன் அப்துல் காதர் அவர்களின்
கனவாகவும் இருந்துள்ளது.
அத்துடன்,
இந்த உப தபாலகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து
இதற்கானதொரு நிரந்தர கட்டிடம் இல்லாத
நிலையில் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கிவந்த நிலையில் அதற்கானதொரு காணி கொள்வனவு செய்யப்பட்டு,
நிரந்தர கட்டிடம் அமையப் பெற்று தபாலகமாக
தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற எண்ணம் தற்போது ஓய்வுபெற்றுச்
சென்றுள்ள உப தபாலதிபர் சம்சுதீன்
அப்துல் ஹமீது அவர்களின் கனவாகவும்,
ஆசையாகவும் இருந்தது.
இதற்காக
அவர் பல்வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டு அவைகளில் அவர் தோற்றுப்போனார். அவரின்
ஆசைகளில் ஒன்றான இந்த உப
தபாலகம் தன்னுடைய சேவைக்காலத்தில் தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாத நிலையில்
இன்று ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
அத்துடன்,
மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலுக்குச்
சொந்தமான காணியில் ஒரு சிறு பகுதியினை
பெற்று பொதுமக்களின் நன்மைகருதி உப தபாலகத்திற்கான நிரந்தர
கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு உப
தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது மற்றும்
இப்பிரதேச மக்கள் ஆகியோரால் அப்போதைய
ஜூம்ஆப் பள்ளிவாயலின் தலைவராக இருந்த அல்ஹாஜ்.
எஸ்.ஐ. அஹமது முகைதீன்
(மகுமூது ஹாஜியார்) அவர்களின் தலைமையிலுள்ள நிருவாகத்தினரிடம் இட ஒதுக்கீடு கோரிக்கை
ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
அதன்
பயனாக பொதுமகக்ளின் தேவையினையும், அவர்களுக்கான சேவையினையும் உணர்ந்து கொண்ட பள்ளிவாயல் நிருவாகத்தினர்
நிரந்தர கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக பள்ளிவாயல்
காணியிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தினை
உப தபாலக கட்டிடம் அமையப்பெறுவதற்கு
நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
அதன்
பிற்பாடு, அப்போது தபால், தபால்
தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சராக
இருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும், தற்போதைய நகர திட்டமிடல் நீர்
வழங்கல் அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம்
அவர்களினால் தனது தபால் அமைச்சினூடாக
ரூபா. எண்பத்தியேழு இலட்சம் (8700000/-) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
பள்ளிவாயலினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் சகல நவீன வசதிகளையும்
கொண்ட வகையில் மீராவோடை உப
தபாலகத்திற்கான கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு நிறைவுற்ற சந்தர்ப்பத்தில் நீதி அமைச்சராக இருந்த
ரவூப் ஹக்கீம் அவர்களினால் 2011.11.11ஆம்திகதி உத்தியோகபூர்வமாக
திறந்தும் வைக்கப்பட்டது.
அதன்பிற்பாடு
தனது மாகாண சபை ஆட்சிக்
காலத்தின்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016ஆம்
ஆண்டு மீராவோடை உப தபாலகத்திற்கு விஜயமொன்றினை
மேற்கொண்டபோது இன்று ஓய்வுபெற்றுச் சென்றுள்ள
உப தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது அவர்களினால்
தன்னாள் முன்னெடுக்கப்பட்ட விடயங்களையும், அதில் ஏற்பட்ட தடைகளையும்,
அதனால் தரமுயர்த்தப்படாமல் புரக்கணிக்கப்பட்டு வருவதனையும் சுட்டிக்காட்டி இவ் உப தபாலகத்தினை
தபாலகமாக தரமுயர்த்தி தருமாறு அச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள்
ஒன்றினை முன்வைத்திருந்தார்.
இதனை
கருத்திற்கொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
இதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இதனை தரமுயர்த்துவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதாவும்
தெரிவித்திருந்தார்.
அத்தோடு
இவ் உப தபாலகத்தினால் சுற்றிவர
நன்மையடையும் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக அமைப்புக்கள் என
45 நிறுவனங்களிடம் இவ் உப தபாலகத்தினை
தபாலகமாக தரமுயர்த்தி தருமாறு வழங்கப்பட்ட சிபாரிசு
கடிதங்கள் அடங்கிய ஆவணங்கள் 2016.10ஆம்
மாதம் முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம்
கையளிக்கப்பட்டது.
அதன்
தொடர் முயற்சியின் பயனாக மட்டு மாவட்ட
பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகருடன் முன்னாள்
மாகாண சபை உறுப்பினர் நேரில்சென்று
கலந்துரையாடி இவ் உப தபாலகம்
தபாலகமாக தரமுயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தினை உணரச் செய்து தயாரிக்கப்பட்ட
ஆவணங்களையும் கையளித்திருந்தார்.
மாகாண
சபை உறுப்பினரினால் கையளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட பெரும்பாக அஞ்சல்
அத்தியட்சகர் அதிகாரிகள் மட்டத்தில் நிருவாக ரீதியில் இவ்
உப தபாலகத்தினை தபாலகமாக தரமுயர்த்துவதற்குரிய மேலதிக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டு
சகல சிபாரிசுகளுடனும் தபால், தபால் தொலைத்தொடர்பு
சேவைகள் அமைச்சுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்
பிற்பாடு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
பொறியியலாளர் ஷிப்லி பாறுக் திருகோணமலை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மக்ரூப் ஊடாக
தபால், தபால் தொலைத்தொடர்பு சேவைகள்
மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்
கௌரவ. எம்.எச்.ஏ.
ஹலீம் அவர்களை கொழும்பிலுள்ள அவரின்
அமைச்சில் நேரடியாக சந்தித்து மீராவோடை உப தபாலகத்தை தபாலகமாக
தரமுயர்த்துவது தொடர்பாக கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது
அமைச்சர் தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டில் தரமுயர்த்துவதற்காக பல உப தபாலகங்கள்
காணப்படுவதாகவும், இவற்றினை தரமுயர்த்துவதால் இவற்றுக்கான வருடாந்த நிதி ஒதுக்கீடுகள், ஆளணி
மற்றும் வளப் பற்றாக்குறை சார்ந்த
தேவைப்பாடுகள் காணப்படும் என்பதனையும் சுட்டிக்காட்டியதுடன், மீராவோடை உப தபாலகம் மக்களுக்கான
தேவையும், சேவையும் அதிகமாக காணப்படுவதாகவும் அதன்
விரிவாக்கத்தையும் தரமுயர்த்த வேண்டிய தேவைப்பாட்டினையும் உணர்ந்துகொண்டார்.
மேலும்,
தன்னுடைய காலத்தில் நாட்டிலுள்ள உப தபாலகங்களை தரமுயர்த்துவதற்குரிய
செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறும்போது அவற்றில்
துரிதகதியில் மீராவோடை உப தபாலகத்தினை தபாலகமாக
தரமுயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு தரமுயர்த்தி
தருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம்
அமைச்சர் வாக்குறுதியளித்தார்.
இவ்வாறு
அனைத்து விதமான நடவடிக்கைகளும் பூர்த்தி
செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் மீராவோடை உப தபாலகம் தபாலகமாக
தரமுயர்த்தப்படும்போது இதற்காக மிகவும் பல
சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு ஆரம்ப வித்திட்டு இறுதியில்
அமைச்சரவையின் அனுமதியுடன் தரமுயர்த்தப்படும்போது இதன் முழு உரிமமும்
உரித்துடையவர்களாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மட்டக்களப்பு
மாவட்ட பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் மற்றும்
ஒய்வுபெற்றுச் செல்லும் மீராவோடை உப தபாலகத்தின் உப
தபாலதிபர் சம்சுதீன் அப்துல் ஹமீது ஆகியோரே
என்றும் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்களாகும்.
இந்த
உப தபாலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும்
வயோதிபர்களின் நன்மைகருதி சில தளபாடங்களை பெற்றுக்கொடுத்த
அல்-கிம்மா சமூக சேவைகள்
நிறுவனம், இறால் பன்ணையாளர் சங்கம்
மற்றும் வரவேற்பு கூரை திருத்த பனிக்காக
நிதி உதவி செய்த பொறியியலாளர்
ஷிப்லி பாறுக் ஆகியோரும் இவ்விடத்தில்
நினைவுகூறப்பட வேண்டியவர்களாகும்.