Posted in
35 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இத்தபாற்கந்தோர் தற்போது மாஞ்சோலை ஆஸ்பத்திரி வீதியில் சிறிய இடமொன்றில் அமையப்பெற்றுள்ளது. அச்சிறிய இடம் தபாற்கந்தோருக்கோ அரசாங்கத்திற்கோ சொந்தமானது அல்ல. அதன் உரிமையாளர் வேறு. அதற்கோ வாடகை செலுத்த வேண்டியுள்ளது. வாடகையில் நான்கில் ஒரு பங்குதான் அரசினால் வழங்கப்படுகிறது மீதி தபாற்கந்தோருக்கு பொறுப்பானவரால் வழங்கப்படுகிறது.
இத் தபாற்கந்தோருக்கு ஒரு நாளைக்கு நூற்றிற்கு மேற்பட்ட பயனாளிகள் வருகை தருகின்றனர். 700 இற்கு மேற்பட்டவர்கள் மாதாந்த சம்பள தொகை பெறுகின்றனர். மழை காலங்களில் அலுவலக காகிதாதிகளுக்கு சேதங்கள் ஏற்படுகிறது.
இதை எந்த அரசியல்வாதியோ சமூக சேவை நிறுவனங்களோ கண்டுகொள்ளவில்லை.
மாஞ்சோலை மாதிரி கிராமமானது ஆரம்பிக்கப்படும்போது தபாற்கந்தோருக்கு ஒதுக்கப்பட்ட இடம் ,நிதி கூட ஒரு சிலரின் நடவடிக்கையால் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
இனியாவது இந்த அவலநிலை இல்லாமல் மாஞ்சோலை உபதபாற்கந்தோருக்கு சரியான இடமொன்றை பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகள் முன் வருவார்களா ?
சமூக சேவை நிறுவனங்களாவது கை கொடுக்குமா ?
சமூக சேவை நிறுவனங்களாவது கை கொடுக்குமா ?
தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தால் பல சேவைகள் தாருமாறாக இடம்பெற்று கொண்டிருக்கும் வேளையில் அதில் ஒன்றாக இதை செய்ய நம்மூர் அரசியல்வாதிகள் முன்வருவார்களா என பார்ப்போம்.
-Haris AS-
© ODDAMAVADI NEWS