Posted in
மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்புக்களுள் ஒன்றான OBA'98இனால் இன்று 24.01.2018ம்கு திகதி குளிர்சாதனப் பெட்டியொன்று பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் OBA'98 சார்பாக அதன் தலைவர் ஏ.பி.எம். றிஸ்வின், ஆலோசகர் டொக்டர். எம்.எச்.எம். ஜெஸீர், முன்னாள் தலைவர் கே.எல்.எம். இர்சாத், செயலாளர் எம்.ஐ. நுபைல், பொருளாளர் ஏ.எம். பைஷர் மற்றும் நிருவாக உறுப்பினர்களான எம். மன்சூர், ஏ. அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு குளிர்சாதனப் பெட்டியை அன்பளிப்பாக கைளித்திருந்தனர்.
பாடசாலை சார்பாக மதிப்பிற்குரிய அதிபர் எம்.ஏ. ஹலீம் இஷ்ஹாக் அவர்களும் பாடசாலை முகாமைத்துவக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டு அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அத்தோடு பிரதான பழைய மாணவர் அமைப்பை ஒன்றுசேர்ப்பதிலும் அதனூடாக இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கும் ஏனைய பழைய மாணவர் அமைப்புக்களோடு சேர்ந்து பாரிய பங்காற்றியவர்கள் OBA'98 அமைப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
© ODDAMAVADI NEWS