Follow me on Twitter RSS FEED

கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளருக்கு பணித்தடை

Posted in
வாகரையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவருக்கு காயமேற்படுத்தியதன் பின்னர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படும் கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வு உத்தியோகத்தருக்கு  பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்
suspension-of-workவாகரையில் துவிச்சக்கரவண்டியில் சென்ற இருவரை விபத்திற்குள்ளாக்கியமை, அரச வாகனத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை, வகைகூறத்தக்க உத்தியோகத்தரின் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை நடாத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.(lankadeepa)

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கான பேரித்தம் பழம் விநியோகம்

Posted in

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பனிப்பாளர் அஷ்- ஷெய்ஹ் எம்.எச். எம். சமீல் அவர்களின் பனிப்புறைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு விநியோகிப்பதற்காக பேரித்தம் பழங்கள் இன்று கிழக்கு பிராந்திய பொருப்பாளர் ஜுனைட் நளீமியினால் மாவட்ட சம்மேளனங்களிடம் கையழிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விரவில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ள.

பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ்: எச்சரிக்கும் மைக்ரோசொப்ட்

Posted in

பேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

823fb‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.
தற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Firefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.
அதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.
இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.

தப்பியோடிய புலி சந்தேகநபருக்கு வலைவீச்சு

Posted in
வெசாக் காலத்தில் தப்பியோடிய தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தேடிவருகின்றனர். குறித்த சந்தேகநபர் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கிலிருந்து கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தப்பியோடியுள்ளார். சந்தேக நபரான பாலசுப்ரமணியம் ஜடேஷன் என்பவரே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக அறிவித்துள்ள புலனாய்வு பிரிவினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக சிறைத்தண்டனையும் அனுபவித்து வந்துள்ளார் என்றும் அறிவித்துள்ளனர். வெசாக் வலயத்தில் மாத்தறை சிறையினால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் கூடுகளை சோடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட குறித்த சந்தேநபரே சிறைக்காவலர்களிடமிருந்து தப்பித்துள்ளார். குறித்த சந்தேகநபருடன் மற்றுமொரு சிறைக்கைதியும் தப்பியுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்த்திருத்த மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர் வவுனியா- நெடுங்கேணியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பற்றிய தகவல்களை 011-2451634,011-2451636 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

பிள்ளையாரடியில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை

Posted in
மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரினார்கள். குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக காவல்துறை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொதுத் தொல்லை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினர். காவல் துறையின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ், சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Sri Lanka has a chance to defeat majoritarian extremism of the JHU-NFF-BBS politically

Posted in
Yugoslavia was a sister country of Sri Lanka; a fellow founder of the Non Aligned Movement in that country’s capital Belgrade in 1961. Yugoslavia no longer exists. The breakup of that country resulted from a chain reaction that commenced with the dramatic change of the Yugoslav Constitution promulgated by the sagacious socialist Marshal Tito and the drastic reduction of the powers of the autonomous province of Kosovo followed by the dissolution of the Kosovo assembly in 1990. Sri Lanka must not proceed down the same path which leads over a precipice.

The country stands at a crossroads. A parliamentary victory for the JHU bill will complete the negative process which commenced with Sinhala Only in 1956 and the distortion in 1972 of the laudable shift to a Republic with mono-linguistic and mono-religious hegemony. If ’56 and ’72 were paving stones for the Tamil Eelam project, the passage of the JHU bill to abolish the 13th amendment will complete the process of the legitimisation of secessionism.
A victory for the JHU will also cast a pall over the Commonwealth Heads of Government Meeting and guarantee Sri Lanka’s defeat at the UN Human Rights Council in March 2014. It will embarrass our allies Russia and China and drive South Africa and much of the Non-Aligned Movement away from us. It will irreversibly discredit and radically isolate the country and the Sinhalese, regionally and internationally. In short, in terms of Sri Lanka’s national interest, it will be the single most self-destructive act this parliament could perform.
Conversely, a defeat of the JHU bill will enable Sri Lanka to put the stigma of majoritarian extremism behind it. Such a victory will be the necessary complement of the military victory of May 18th 2009 and the diplomatic victory of May 27-28, 2009. Having militarily defeated the secessionist minoritarian fascism of the LTTE, Sri Lanka has a chance to defeat majoritarian extremism of the JHU-NFF-BBS politically.
In the run-up to the parliamentary battle, is a dual debate in Sri Lankan politics. The Sinhala polity is divided between on the one hand, those who wish to abolish the 13th amendment or delete land and police powers from it and on the other, those who see fit to proceed, however reluctantly, with elections to the Northern Provincial Council without attempting any drastic truncation of the powers devolved upon it. The Tamil polity is divided between, on the one hand, those who are keen to contest the Northern PC election and regard the 13th amendment as worthy of defence, and on the other, those who regard the 13th amendment as hardly worth the paper it is written on.
What is missing in the picture is any drawing together and mutual reinforcement between the moderates or pragmatists on both sides of the ethnic divide who defend, however reluctantly, the provincial council and the prospect of elections to it in September.
What is also missing is the engagement of the intelligentsia, especially civil society intelligentsia, in either supporting the Sinhala moderates in this important battle or in building a bridge between the Sinhala and Tamil moderates in defence of the existing system of devolution of power to the provinces.
The lack of a structured dialogue between the Sinhala and Tamil parliamentary moderates across Government and Opposition lines, deprives each other of vital support and partnership.
That, taken together with the absence of engagement in the ongoing battle by the intelligentsia prevents the construction or reconstitution of a zone of moderate opinion in polity and society.
The battle over the 13th amendment provides an enormous opportunity in the battle of ideas, because the arguments adduced in favour of abolition or gutting are symptomatic of the most retrogressive notions within our society ranging from the conservative to the militarist, the neoconservative to the racist. Grappling with and combating these ideas provides a fine opportunity for asserting the values of reason, democracy and pluralism.
Why then isn’t the battle being joined? The answer is political and ideological sectarianism. There are important precedents. When SWRD Bandaranaike was striving to defend the pact with Chelvanayakam, the powerful, union-based left was absent from the fray. Had it thrown its weight behind SWRD, the history of this country may have been significantly different and better.
Contemporary sectarianism takes two forms. The first is that the 13th amendment doesn’t deserve defending because the Tamil people need and deserve something considerably beyond it. The second is that the hole is on Mahinda Rajapaksa’s side of the boat, or that he is patently insincere and merely playing ‘good cop’ to the far right’s ‘bad cop’.
The first argument is easily dispensed with. The TNA should contest the election even if the council is gutted of most of its powers, just as one should not abandon even the skeleton of a house that is one’s patrimony simply because someone has made off with its roof.
The second argument, even if true is irrelevant. The opportunity for a politico-ideological battle against neo-conservatism, racism and ethno-religious fascism is far too important to be contingent upon a reading of Mahinda Rajapaksa’s politics, let alone speculation about his psyche.
Resistance against the JHU’s counter-reform bill provides the only opportunity that has arisen in years, for the SLFP parliamentary group to defeat the parties of the extremist fringe which have ideologically dominated the UPFA administration and distorted its discourse.
If however, the bad guys win, the centre of gravity of Sri Lankan politics and society will shift still further to the right. It may even impact upon the choice of candidacy. If the neo-con project with its totalitarian notion of national security succeeds, the present dispensation will appear in a roseate afterglow as an era of tolerance and democracy.
The battle to defeat the JHU-NFF-BBS attack on provincial devolution is thus utterly decisive. Against such a backdrop, only an aficionado of black humour would appreciate as I do, an invitation I received in the mail for a conclave at which the best and the brightest of Sri Lanka’s cosmopolitan intelligentsia are scheduled to discuss and debate such exquisite irrelevancies as “The Past in the Future: the ethical future of the archive in the Dotcom age”, “Ethical Reconstruction: Primitive Accumulation in the Apparel Sector?”, “Philanthrocapitalism, Philanthronationalism: the ethics of corporate gifts in post-conflict Sri Lanka” and “On Heterophobic and Heterophilic Casteism and anti-Casteism”. Where the topic is relevant, such as “Diplomacy at the UN Human Rights Council”, the sole designated presenter is Yolanda Foster of Amnesty International (which exclusivity is no fault of either Ms Foster or AI).
No Gramscian ‘organic intellectual’ stuff or words for a Modern Prince, here. If these are the good guys and gals and this is their discourse, no wonder the bad guys are way ahead: they have the advantage of being organic and sounding ‘national popular’.

வாருங்கள்! உங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச் செல்கின்றோம்…

Posted in

உலக முஸ்லிம்களின் முதல் ஹிப்லா சரித்திரம் கொண்ட பள்ளிவாயல் இன்றுவரை அந்த பள்ளிவாயல் காபிர்களின் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கä அதற்கான போராட்டங்களும் தொடர்கின்றன…. அதுதான் மஸ்ஜிதுல் அக்ஸா….
இந்த பள்ளிவாயல் உள்புறம் சென்று பார்வையிட உலக முஸ்லிம்களில் ஒரு சிலருக்கே வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. சியோனிஸ அக்கிரமிப்பாளர்கள் இந்த பள்ளிவாயல் வளாகத்தில் நுழைய அந்த நாட்டில் பிறந்தவர்களையே தற்போது அனுமதிக்கின்றார்கள் இல்லை…. 

இந்த பள்ளிவாயலை எமது மரணத்திற்கு முன்னர் ஒரு தடவையாவது நேரில் சென்று பார்த்துவிட வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிம்களின் மனதிலும் இருக்கும் பொதுவான எண்ணம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு இடமளிக்கவில்லை. 

இந்த கவலையை உணர்ந்த நம் சகோதரர்கள் உங்களை மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் இந்த லிங் ஊடாக அழைத்துச் செல்கின்றனர்….
வாருங்கள்! மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் செல்வோம்……





'வழக்கில் மஹிந்தவை விடுவித்திருக்காவிடின் அவர் ஜனாதிபதியாகியிருக்க மாட்டார்'

Posted in
ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவை விடுவிக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திராவிடின், மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். 
சுனாமி நிதிக் கையாடல் என்ற குற்றச்சாட்டிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை தனது தலைமையிலான நீதியரசர் குழாம் விடுவிக்காது விட்டிருப்பின் மஹிந்த ராஜபக்ஷவினால்  2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

மஹிந்த ராஜபக்ஷ மக்களின் உரிமைகளை பாதுகாப்பாரென எதிர்பார்த்தே நாம் இதனைச் செய்தோம். ஆனால் அது தற்போது நடப்பதில்லை.

ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டுவந்தமைக்கு நான் பொறுப்பென பலரும் முறையிடுகின்றனர். நான் இதை ஒப்புக்கொள்கின்றேன். 

அவரை நாம் விடுதலை செய்ததால் தான்; ஜனாதிபதி ராஜபக்ஷவினால் பிழையான காரியங்களை செய்ய முடிகின்றது. 

2004 டிசெம்பர் 26ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி பேரழிவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இலங்கை பெருமளவான நிதியுதவிகளை பெற்றது. அச்சமயத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாடு சென்றிருந்ததால் பிரதமர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடை நிதிகளுக்கு பொறுப்பாக இருந்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாஷிம், இவர் சுனாமி நிதியத்திலிருந்து பணத்தை தனியார் கணக்கொன்றுக்கு மாற்றுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்தார். ராஜபக்ஷ நம்பிக்கை மோசடி, பொது நிதிக் கையாடல் ஆகிய குற்றங்களை செய்வதாக கபிர் ஹாஷிம் குற்றஞ்சாட்டினார். இதைத் தொடர்ந்து பொலிஸ் இவருக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (சுசித ஆர்.பெர்னாண்டோ)

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!

Posted in

இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.
கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தேறின.
Courtesy: தூதுஒன்லைன்

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில்

Posted in

பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் உட்பட்ட ஆறு பேர், இன்று காலை விபத்திற்குள்ளான நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முந்தல் பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

காத்தான்குடியில் ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு !

Posted in

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து காத்தான்குடி பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.ஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் ஹோட்டல்கள் அரசஅலுவலகங்கள் வங்கிகள் சந்தைகள் தனியார் நிறுவனங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.
இன்று ஜும்ஆ தொழுகையின்பின் அமெரிக்க எதிர்ப்பு கண்டன பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளதுடன் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் யூத நசாராக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சதித்திட்டங்கள் தொடர்பாக இன்றைய ஜும்ஆ பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா இமாம்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.

முஸ்லிம் விரோத வீடியோ :யூ டியூப்க்கு புதிய நெருக்கடி

Posted in

யூ டியூப் இணையத் தளமானது சவூதி அரேபியாவில் மன்னர் அப்துல்லாவின் தலையீட்டை தொடர்ந்து இஸ்லாமிய விரோத திரைப்படத்தை  சவூதி அரபியாவில் நீக்கியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் இணைய தளமான யூ டியூப் குறித்த திரைப்படத்தை நீக்காத விடத்து அவ்விணையத்தளம் சவூதி அரேபியாவில் முற்றாக முடக்கப்படும் என்று சவூதி அரசால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே யூ டியூப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கூகிள் நிறுவனமானது இந்த திரைப்படம் யூ டியூபில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற அமெரிக்க வெள்ளை மாளிகையின் கோரிக்கையை நிராகரித்த அதேவேளை எகிப்து, லிபியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த படத்தின் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் சட்ட விரோதமானதாக கருதப்படும் நாடுகளில் முற்றாக இந்த திரைப்படத்தை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.
சவுதி அரபிய மன்னர் அப்துல்லா, தனது உத்தியோக பூர்வ அறிவிப்பு ஒன்றில், குறித்த திரைப்படம் சவூதி அரேபியாவில் நீக்கப்படாதவிடத்து யூ டியூப் இணையம் சவூதியில் முற்றாக தடை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும், சவூதி அரேபியாவின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆணையம் சவூதி பொது மக்களையும் சவூதியில் உள்ள வெளிநாட்டினரையும் குறித்த படத்தின் இணையத்தள வெளியீடுகள் காணப்படுமிடத்து அது பற்றி தமக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் மற்றும் எமது இஸ்லாம் மார்க்கத்தின்  மீது சேறு பூசும் எந்த நடவடிக்கையையும் தடுப்பது உண்மையான எமது மார்க்கம் எம்மீது விதித்துள்ள கடமையாகும் என்று சவூதி தேசிய பத்திரிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த திரைப்படம் யூ டியூபில் இருந்து நீக்கப்பட வேண்டுமென ரஷ்ய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்ய நீதிமன்றம் ஒன்று தற்போது குறித்த திரைப்படம் தீவிரமானது என பாகுப்டுத்தப்பாடல் வேண்டுமா என ஆராய்ந்து வருகின்றது. இந்த ஆய்வுகளில் தீவிரமானது என்று முடிவு செய்யப்படுமிடத்து யூ டியூப் இணைய தளம் ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது.
இதே வேளை நவம்பர் முதலாம் திகதி அமுலில் வர இருக்கும் சர்ச்சைக்குரிய புதிய சட்ட மூலத்தின் பிரகாரம் இணைய தள உள்ளடக்கங்கள் சிறுவர்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்ற தலையீடுகள் இன்றி வெளியிட்ட சேவை வழங்குனரினால் இயக்கப்படும் சகல தளங்களும் ரஷ்யாவில் தடுக்கப்படும்.
“இது ஒரு நகைச்சுவை போல் தோன்றுகின்றது இந்த திரைப்படம் மூலம் யூ டியூப் இணையம் ரஷ்யாவில் முற்றாக தடுக்கப்படும் வாய்ப்புள்ளது” என ரஷ்ய தொடர்பாடல் அமைச்சர் நிகோலாய் நிகிபோரோவ் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் மூலம் திரைப்படத்தை நீக்க யூ டியூப் மறுக்கும் பட்சத்தில் இதன் இயக்கம் முடக்கப்படும்.
இதேவளை சுயாதீன உரிமைகளுக்கான குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜிம் கில்லோக் இவ்வாறான ஒரு தடை ஒரு தீவிரமான நியாயமற்ற பதிலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.   இது ஒரு அதீத வித்தியாசமான ஒரு விடயம்  ஒரு தனி மனிதன் முழு அமெரிக்காவின் அரசாக அரசியல் காரணங்களுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளார். இது ஏன் ஏற்படுகின்றது மற்றும் இது நியாமானதா என்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என BBC க்கு தெரித்தார்.
ஒரு யூ டியூப் பிரதிநிதி BBC க்கு கருத்து தெரிவிக்கையில் எல்லோரும் மகிழ்வாக இருக்கக் கூடிய மற்றும் மக்கள் தமது வித்தியாசமான கருத்துக்களை வெளியிடக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாங்கள்  கடுமையாக உழைப்பதாக தெரிவித்தார். இது ஒரு சவாலான ஒரு விடயம் ஏனெனில் ஒரு நாட்டில் அனுமதிக்கப்படும் ஒரு விடயம் மற்ற இடங்களில் தவறானதாக இருக்கின்றது.
இந்த காணொளி எமது இணையத்தில் பரந்து பட்ட அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளி எமது தெளிவான வரையறைகளுக்கு உட்பட்டது. எனினும் இந்த காணொளி சட்ட விரோதமானதாக காணப்படும் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தடுக்கப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் உள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்கும் தடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கூகுள் பணிப்பாளர் ரசேல் வேட்ஸ்டோன்னின் கூற்றுப்படி இணையத்தளத்தில் ‘எதை எழுத வேண்டும் அல்லது எதை எழுதக்கூடாது’ என்பதை மத்தியஸ்தம் செய்யும் வேலையை கூகுள் செய்வதில்லை.
என்றாலும் உள்நாட்டு கலாசார மற்றும் தேவைகளின் நிமித்தம் எமது உற்பத்திகளை நாம் வடிவமைக்க முயற்சித்தாலும் உலக அரங்கில் அவைகளின் தேவை மிக வேகமாக மற்றம் அடையக் கூடியதாக உள்ளது. சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நாம் கையாள முயற்ச்சிக்கும் போது மிகப் பெரிய சவால்களை எமது நிறுவனம்  எதிர்நோக்க வேண்டி இருக்கிறது என்றும் கூறினார்.
இதேவேளை கூகுள் செப்டெம்பர் 20ஆம் திகதி வெளியிட்ட பிரத்தியேக அறிக்கையில் இந்த திரைப்படம் சட்ட விரோதமானதாக கருதப்படும் நாடுகளில் முற்றாக இந்த திரைப்படத்தை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.

அமீர் அலிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கின்றார் கமலா ரணதுங்க

Posted in

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான சட்டத்தரணி அமீர் அலியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க இன்னும் ஒரு சில தினங்களில் அப்பதவியை ராஜினாமா செய்வார் என்று அறியப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் அமிர் அலி, கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவரை முதலமைச்சராக நியமிக்குமாறு தலா மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என்பவற்றின் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் அமைச்சர் அதாவுல்லாவும் ஜனாதிபதியிடம் கூட்டாக வலியுறுத்திய போதிலும் அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலமாக எதிர்த்ததால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகள் வழங்க நேரிட்டதால், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸிற்கோ எவ்வித அமைச்சுப் பதவியையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து பிரதி அமைச்சர் பதவியொன்றை வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் அமீர் அலியை தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்கவை ராஜினாமா செய்யுமாறு கேட்கப்பட்டதற்கு அமைவாக அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அதனை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தியாகம் செய்யும் கமலா ரணதுங்கவுக்கு தூதுவர் பதவியொன்றை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரிய வருகிறது.
அதேவேளை கமலா ரணதுங்க தற்போது சிறிது நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓட்டமாவடியில் இன்று பூரண கர்த்தால்

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கும் அமேரிக்காவிற்கும் எதிராக கர்த்தால் மற்றும் எதிர்ப்பு பேரணிக்கு ஏற்கனவே பள்ளிவாயல்கள் மூலம் கூட்டாக விடுக்கப்பட்ட அழைப்பின் படி ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் இன்று 21.09.2012ந் திகதி பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்கள் அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், வங்கிகள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு பிரதான வீதி உற்பட ஏனைய வீதிகளும் வெறிச்சோடிக் கிடப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. 

அத்தோடு இன்று ஜும்ஆத் தொழுகையின் பின் பல பள்ளிவாயல்களிலிருந்து புறப்பட்டு வர இருக்கின்ற பேரணியில் கலந்து கொள்ளும் அனைத்து முஸ்லிம்களும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஒன்றுகூடி அமேரிக்க எதிர்ப்பை வெளிக்காட்ட இருக்கின்றனர். 

இவை தொடர்பான அனைத்துச் செய்திகளும் எமது செய்தித் தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். 

ஹச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 22வது வாடிக்கையாளர் சேவை நிலையம் மட்டக்களப்பில்...

Posted in

உலகத் தரம் வாய்ந்த 500 தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஹச் நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் தனது தொலைத் தொடர்பு சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 22வது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை, மட்டு-திருமலை பிரதான வீதியில், கோப்-இன் விடுதிக்கு முன்பாக இல. 487 திருமலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் நேற்று திறந்து வைத்தது.
இதன் போது, ஹச் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அனட் பிரகாஸ், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக சேவைகளை ஆரம்பித்தனர்.
இந்நிகழ்வில் ஹச் நிறுவனத்தின் சிரேஷ்ட வாடிக்கையாளர் சேவைப்பிரிவு முகாமையாளர் வானதி வில்சன், எம்.எஸ்.எம். சலீம், மட்டக்களப்பு பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஸி.ஐ. அசோப பெரேரா, ஹச் நிறுவனத்தின் மட்டு கிளை முகாமையாளர், பொலிஸ், இரானுவ அதிகாரிகள், ஹச் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது மக்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஹச் தொலைத் தொடர்பு நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்ளை நிறுவியுள்ளதோடு, இலங்கையில் குறிப்பாக பிரதான நகரங்களான கொழும்பு, மஹரகம, நுகேகொட, கண்டி, யாழ்ப்பானம், அக்கரைப்பற்று, பொலனறுவை, றத்னபுர, ஹம்பஹா, புத்தளம், திருகோணாமலை, களுத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தனது வாடிக்கையாளர் சேவை நிலையங்களை நிறுவியுள்ளது.
இங்கு திறந்துவைக்கப்பட்ட ஹச் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில், தலைநகரில் பெறும் அனைத்து சேவைகளையும், சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு ஹச் 3ஜி டொங்குளும் அறிமுகம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடல், டயலோக், பார்வதி எயாட்டெல், சண்டல், லங்கா பெல்;, ஹச் ஆகிய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூரில் மக்கள் வீதி மறியல் போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிதம்

Posted in
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இரு பிரதான வீதிகளை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதன் காரணமாக பயணிகள், வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இதன் காரணமாக மட்டக்களப்பு - அம்பாறை மற்றும் அம்பாறை - கல்முனை போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

நிந்தவூர் அட்டப்பள்ளம் வீதி மற்றும் நிந்தவூர் கூட்டுறவுச் சங்க வீதிகளை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முகமது நபி அவர்களை களங்கப்படுத்தி வீடியோ வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி தொடக்கம் இடம்பெற்று வருகிறது. 

எனினும் அம்பாறையில் நாளைய தினமே வீதிமறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது எனவும் நிந்தவூரைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 

வீதிமறியல் இடம்பெற்றுள்ள இடத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு முஸ்லிம் பிரதேசங்களில் நாளை பூரண கர்த்தால்…

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதுடன் இலங்கையின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாளை 21.09.2012ந் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களான ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் பூரண கர்த்தாலுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது. 
இந்த கர்த்தால் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை குறித்த பிரதேசத்திலுள்ள அரச,  அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வம்பர்கள் செய்யும் எந்தவொரு ஈனச் செயலையும் முஸ்லீம் உம்மத் பொறுத்துக் கொள்ளாது-அமீர் அலி

Posted in

பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களை உலகலாவிய முஸ்லீம் உம்மத் தனது உயிலும் மேலாக நேசிக்கிறது என்பதையும் அவர்கள் பெயரால் வம்பர்கள் செய்யும் எந்தவொரு ஈனச் செயலையும் அது பொறுத்துக் கொள்ளாது என்பதையும் நாம் உலகத்திற்கு உணர்த்தியாக வேண்டியிருக்கிறது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தை அவமதிக்கின்ற வகையில் சித்தரித்து அமெரிக்காவில் வெளியான படத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையிலயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.
மேற்குலகு தனது சுயநலத்துக்காக நடத்தும் கேவலமான செயற்பாடுகளை மறைப்பதற்கும் முஸ்லீம் உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் அவ்வப்போது இவ்வாறான அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
ஒட்டு மொத்த முஸ்லீம்களின் கவனத்தையும் ஒரு பக்கம் திருப்பி விட்டு எங்காவது ஒரு முஸ்லீம் தேசத்துக்குள் மூக்கை நுழைப்பதற்கும் அத்துமீறுவதற்கும் அடாவடி நிகழ்த்துவதற்கும் முயற்சித்து வருகின்றது.அல்லது அவ்வாறு செய்தவற்றை மக்கள் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்ய இவ்வாறான செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் எதைச் செய்த போதும் அவற்றில் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேற்குலகம் யூத ‘லொபி’யும் தமது செல்வாக்கை உலகில் இழந்து வருகின்றன ஏன் என்ற வினாக்களோடு சொந்த நாடுகளிலிருந்தே மக்கள் தெருவுக்கு வந்து கேள்வி கேட்கத் துணிந்து விட்டனர்.இந்தத் தோல்விகளைத் திசை திருப்பவும் உலகளவில் முஸ்லீம்களின் மீது அவதூறும் அவமானமும் ஏற்படுத்தி அதன் மூலம் தமது செயல்களை நியாயப்படுத்த முனைகின்றனர்.
அல்லாஹ்வின் உதவியால் அவ்வாறான அவர்களது செயற்பாடுகள் வெற்றி பெறாது என்பதை முஸ்லீம் உலகு தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதன் மூலம் உணர்த்தி வருகின்றது. நபிகளார் மீதோ இஸ்லாத்தின் மீதோ அவதூறு மேற்கொள்ளும் எல்லா வேளைகளிலும் நாமும் நமது எதிர்ப்பைஎல்லா வழிகளிலும் வெளிக்காட்டுவது நமது கடமையாகும்.
இந்தப் பிரமாண்ட எதிர்பலையில் பங்கு கொள்ளும் அனைவர் மீதும் அல்லாஹ் தனது அருளைச் சொரியட்டும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியது-சந்திரகாந்தன்

Posted in

கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் ,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் ஐ நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றார்.
இதனை விட விருப்பு வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குககளை முதலமைச்சர் பதவிக்குரியவர் பெற்றிருக்க வேண்டும். அல்லது தமது கட்சி ஆகக் குறைந்தது 3 ஆசனங்களாவது பெற்றிருக்க வேண்டும் .
அதில் ஒன்று கூட சாத்தியப்படாததன் காரணமாகவே தங்களால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது போனதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்து பல பணிகளை முன்னெடுத்த தான் பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது. அது மட்டுமல்ல அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்க்திலும் சில சங்கடங்கள் இருந்தன. இதன் காரணமாகவேதான் அமைச்சர் பதவி வகிக்க  விரும்பவில்லை என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.
அமைச்சர்கள் வாரியத்தில் இம்முறை தான் இடம் பெறாத காரணத்தினால்  தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.
மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம் தன்னால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பிட்டார்.

ஹூனைஸ் பாருக் அவர்கள் பாராளுமன்றத்தில ஆற்றிய உரையின் தொகுப்பு

Posted in

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில ஆற்றிய உரையின் தொகுப்பு
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்.
கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது உயிரினும் மேலாக மதிக்கப்படுகின்ற நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறப்பட்டிருக்கின்ற அல்லது புனைந்துரைக்கப்பட்ட அந்தத் திரைப்படம் தொடர்பாக இந்த நாட்டில் வசிக்கின்ற 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சார்பாக இந்த  சபையில் முதலில் நான் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதனால் முஸ்லிம்கள் இன்று கவலையடைந்திருக்கின்றார்கள். அதனோடு தொடர்புபட்டவர்களுக்கெதிராக அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தச் சபையினூடாக  கேட்டுக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சகோதரர் நஜீப் ஏ. மஜீத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவருக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென நான் நினைக்கின்றேன். அந்த வகையில் இலங்கையில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக உறுதிப் பிரமாணம் செய்த நஜீப் ஏ. மஜீத் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, எமது கட்சி சார்பாகவும் நான் அவருக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது. உண்மையில் எமது அரசாங்கத்தைப்பொறுத்தமட்டில் நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்களல்லர், தேர்தலுக்கு முகங்கொடுப்பதில் நாங்கள் பின்வாங்கக்கூடியவர்களுமல்லர். இன்று எனக்கு முன்பு உரையாற்றிய உறுப்பினர் அவர்கள், அவசரஅவசரமாக மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறினார். அவ்வாறு தேர்தலை நடத்திய எமது அரசாங்கத்துக்கு வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதமல்ல, அதற்கு முன்னர் நடத்துவதற்கும் முடியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால், அங்குள்ள சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மருதையன்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம் கூறவில்லை. தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை அங்கு இல்லாததன் காரணமாக குறிப்பிட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்தக்கோரி அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் அதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வடக்கில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையில் எவ்வாறு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது?
வடக்கின் மீள்குடியேற்றத்தை எடுத்துக்கொண்டால், முல்லைத்தீவு மாவட்டத்தில் முற்று முழுதாக மீள்குடியேற்றம் நடந்து முடியவில்லை. அதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் இதே நிலைதான் காணப்படுகின்றது. சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றமும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
Sir, “Sunday Observer” of 5th August, 2012 states, I quote:
“About 82 percent of them are living as refugees in Puttalam…”
புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் வடமாகாணத்தில் மீள்குடியேறுவதற்காகப் பதிவுசெய்திருந்தாலுங்கூட இன்னமும் உடல் ரீதியாக மீள்குடியேற முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அங்கு குடியேறவிருக்கும் மக்களுக்கு காணிப்பிரச்சினை உள்ளது. உதாரணமாக எனது குடும்பத்தை எடுத்துக்கொண்டால், 1990ஆம் ஆண்டில் நாங்கள் எமது தந்தையுடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வெளியேற்றப்பட்டோம். ஆனால் இன்று எமது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் விவாகம் செய்து  7 குடும்பங்களாக இருக்கின்றோம். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தையும் எடுத்துக்கொண்டால், அவ்வக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் வளர்ந்து இன்று 4, 5, 7, 8  குடும்பங்களாகப் பெருகியிருக்கின்றார்கள்.  ஆகவே, அத்தனை குடும்பங்களும் வாழ்வதற்குரிய காணி, வீடு போன்ற வசதிகள்  இன்று வரையில் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு எந்தத் தரப்பினராலோ செய்து கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றமை  கவலைக்குரிய விடயமாகும்.
இச்சபையிலே ஐக்கிய தேசியக் கட்சியினர்  இந்த விடயங்களைப்பற்றிப் பேசாமல் வடமாகாணத்திலே தேர்தலை நடத்துவதைப்பற்றி  மட்டும் பேசுகின்றார்கள்.  இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஓர் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவந்ததைப்போன்று, அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைக் கெளரவமாக மீள்குடியமர்த்துவதற்கு அல்லது அவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்று ஒரு  பிரேரணையைக் கொண்டு  வந்திருந்தால் அது உண்மையிலே நாம் சந்தோஷப்படக்கூடிய, வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும்.
ஆனால், வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் அனேகமானோர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத நிலையிலுள்ளார்கள். “Sunday Observer” பத்திரிகையிலே     82  percent of them has still not been resettled physically எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோன்று இடம் பெயர்ந்த தமிழ் சகோதரர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
ஆகவே, இத்தகைய நிலையில் அங்கு தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்றுதான் கூறவேண்டும். இதற்கு ஒப்பாக நீதிமன்றமே “வடமாகாணத்தில்  புதுக்குடியிருப்பு மற்றும் மருதையன்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது” எனத்  தீர்ப்பளித்திருக்கின்றது. ஆகவே,எந்தவகையிலும் 2013 February மாதம் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதுசாத்தியமற்றதாகும் என்பதே எனது கருத்தாகும்.
ஆகவே, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான உதவிகளைச் செய்யும்படி சர்வதேசத்துக்கும் உதவி வழங்கும் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுக்கவேண்டுமென நான் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் மீள்குடியேறியுள்ள  முஸ்லிம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் விடயத்திலே எமது நாட்டுக்கு வருகின்ற சர்வதேச நிறுவனங்கள் மிகுந்த பாரபட்சம் காட்டுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில்  வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதனால், சர்வதேசத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்  விடயத்தில் ஆளுங்கட்சியை விட ஐக்கிய தேசியக் கட்சிக்கே பாரிய பங்கு இருக்கின்றது.  எனவே, அக்கட்சியினர் முஸ்லிம் மக்களின் கெளரவமான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு சர்வதேசத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் எனவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் வேண்டுகின்றேன்.
அதேவேளை,  வடமாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு காணிப்பிரச்சினை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. அங்குள்ள வன இலாகாத் திணைக்களத்தினர் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு மிகுந்த குறுக்கீடாக இருக்கின்றார்கள்.  எனவே, ஒரு விசேட வேலைத்திட்டத்தின்கீழ் அம் மக்களுக்குக் காணிகளை வழங்குவதிலும் மீள்குடியேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கி, அதனைச்   சரிவரச் செய்துவிட்டு வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே  கேட்டு,  நான் விடைபெற்றுக்கொள்கின்றேன்.  நன்றி.