Posted in
உலகத் தரம் வாய்ந்த 500 தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஹச் நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் தனது தொலைத் தொடர்பு சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 22வது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை, மட்டு-திருமலை பிரதான வீதியில், கோப்-இன் விடுதிக்கு முன்பாக இல. 487 திருமலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் நேற்று திறந்து வைத்தது.
இதன் போது, ஹச் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அனட் பிரகாஸ், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக சேவைகளை ஆரம்பித்தனர்.
இந்நிகழ்வில் ஹச் நிறுவனத்தின் சிரேஷ்ட வாடிக்கையாளர் சேவைப்பிரிவு முகாமையாளர் வானதி வில்சன், எம்.எஸ்.எம். சலீம், மட்டக்களப்பு பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஸி.ஐ. அசோப பெரேரா, ஹச் நிறுவனத்தின் மட்டு கிளை முகாமையாளர், பொலிஸ், இரானுவ அதிகாரிகள், ஹச் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது மக்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஹச் தொலைத் தொடர்பு நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்ளை நிறுவியுள்ளதோடு, இலங்கையில் குறிப்பாக பிரதான நகரங்களான கொழும்பு, மஹரகம, நுகேகொட, கண்டி, யாழ்ப்பானம், அக்கரைப்பற்று, பொலனறுவை, றத்னபுர, ஹம்பஹா, புத்தளம், திருகோணாமலை, களுத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தனது வாடிக்கையாளர் சேவை நிலையங்களை நிறுவியுள்ளது.
இங்கு திறந்துவைக்கப்பட்ட ஹச் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில், தலைநகரில் பெறும் அனைத்து சேவைகளையும், சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு ஹச் 3ஜி டொங்குளும் அறிமுகம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடல், டயலோக், பார்வதி எயாட்டெல், சண்டல், லங்கா பெல்;, ஹச் ஆகிய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.