Follow me on Twitter RSS FEED

முஸ்லிம் விரோத வீடியோ :யூ டியூப்க்கு புதிய நெருக்கடி

Posted in

யூ டியூப் இணையத் தளமானது சவூதி அரேபியாவில் மன்னர் அப்துல்லாவின் தலையீட்டை தொடர்ந்து இஸ்லாமிய விரோத திரைப்படத்தை  சவூதி அரபியாவில் நீக்கியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் இணைய தளமான யூ டியூப் குறித்த திரைப்படத்தை நீக்காத விடத்து அவ்விணையத்தளம் சவூதி அரேபியாவில் முற்றாக முடக்கப்படும் என்று சவூதி அரசால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே யூ டியூப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கூகிள் நிறுவனமானது இந்த திரைப்படம் யூ டியூபில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற அமெரிக்க வெள்ளை மாளிகையின் கோரிக்கையை நிராகரித்த அதேவேளை எகிப்து, லிபியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த படத்தின் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் சட்ட விரோதமானதாக கருதப்படும் நாடுகளில் முற்றாக இந்த திரைப்படத்தை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.
சவுதி அரபிய மன்னர் அப்துல்லா, தனது உத்தியோக பூர்வ அறிவிப்பு ஒன்றில், குறித்த திரைப்படம் சவூதி அரேபியாவில் நீக்கப்படாதவிடத்து யூ டியூப் இணையம் சவூதியில் முற்றாக தடை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும், சவூதி அரேபியாவின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆணையம் சவூதி பொது மக்களையும் சவூதியில் உள்ள வெளிநாட்டினரையும் குறித்த படத்தின் இணையத்தள வெளியீடுகள் காணப்படுமிடத்து அது பற்றி தமக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் மற்றும் எமது இஸ்லாம் மார்க்கத்தின்  மீது சேறு பூசும் எந்த நடவடிக்கையையும் தடுப்பது உண்மையான எமது மார்க்கம் எம்மீது விதித்துள்ள கடமையாகும் என்று சவூதி தேசிய பத்திரிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த திரைப்படம் யூ டியூபில் இருந்து நீக்கப்பட வேண்டுமென ரஷ்ய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்ய நீதிமன்றம் ஒன்று தற்போது குறித்த திரைப்படம் தீவிரமானது என பாகுப்டுத்தப்பாடல் வேண்டுமா என ஆராய்ந்து வருகின்றது. இந்த ஆய்வுகளில் தீவிரமானது என்று முடிவு செய்யப்படுமிடத்து யூ டியூப் இணைய தளம் ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது.
இதே வேளை நவம்பர் முதலாம் திகதி அமுலில் வர இருக்கும் சர்ச்சைக்குரிய புதிய சட்ட மூலத்தின் பிரகாரம் இணைய தள உள்ளடக்கங்கள் சிறுவர்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்ற தலையீடுகள் இன்றி வெளியிட்ட சேவை வழங்குனரினால் இயக்கப்படும் சகல தளங்களும் ரஷ்யாவில் தடுக்கப்படும்.
“இது ஒரு நகைச்சுவை போல் தோன்றுகின்றது இந்த திரைப்படம் மூலம் யூ டியூப் இணையம் ரஷ்யாவில் முற்றாக தடுக்கப்படும் வாய்ப்புள்ளது” என ரஷ்ய தொடர்பாடல் அமைச்சர் நிகோலாய் நிகிபோரோவ் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் மூலம் திரைப்படத்தை நீக்க யூ டியூப் மறுக்கும் பட்சத்தில் இதன் இயக்கம் முடக்கப்படும்.
இதேவளை சுயாதீன உரிமைகளுக்கான குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜிம் கில்லோக் இவ்வாறான ஒரு தடை ஒரு தீவிரமான நியாயமற்ற பதிலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.   இது ஒரு அதீத வித்தியாசமான ஒரு விடயம்  ஒரு தனி மனிதன் முழு அமெரிக்காவின் அரசாக அரசியல் காரணங்களுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளார். இது ஏன் ஏற்படுகின்றது மற்றும் இது நியாமானதா என்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என BBC க்கு தெரித்தார்.
ஒரு யூ டியூப் பிரதிநிதி BBC க்கு கருத்து தெரிவிக்கையில் எல்லோரும் மகிழ்வாக இருக்கக் கூடிய மற்றும் மக்கள் தமது வித்தியாசமான கருத்துக்களை வெளியிடக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாங்கள்  கடுமையாக உழைப்பதாக தெரிவித்தார். இது ஒரு சவாலான ஒரு விடயம் ஏனெனில் ஒரு நாட்டில் அனுமதிக்கப்படும் ஒரு விடயம் மற்ற இடங்களில் தவறானதாக இருக்கின்றது.
இந்த காணொளி எமது இணையத்தில் பரந்து பட்ட அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளி எமது தெளிவான வரையறைகளுக்கு உட்பட்டது. எனினும் இந்த காணொளி சட்ட விரோதமானதாக காணப்படும் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தடுக்கப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் உள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்கும் தடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கூகுள் பணிப்பாளர் ரசேல் வேட்ஸ்டோன்னின் கூற்றுப்படி இணையத்தளத்தில் ‘எதை எழுத வேண்டும் அல்லது எதை எழுதக்கூடாது’ என்பதை மத்தியஸ்தம் செய்யும் வேலையை கூகுள் செய்வதில்லை.
என்றாலும் உள்நாட்டு கலாசார மற்றும் தேவைகளின் நிமித்தம் எமது உற்பத்திகளை நாம் வடிவமைக்க முயற்சித்தாலும் உலக அரங்கில் அவைகளின் தேவை மிக வேகமாக மற்றம் அடையக் கூடியதாக உள்ளது. சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நாம் கையாள முயற்ச்சிக்கும் போது மிகப் பெரிய சவால்களை எமது நிறுவனம்  எதிர்நோக்க வேண்டி இருக்கிறது என்றும் கூறினார்.
இதேவேளை கூகுள் செப்டெம்பர் 20ஆம் திகதி வெளியிட்ட பிரத்தியேக அறிக்கையில் இந்த திரைப்படம் சட்ட விரோதமானதாக கருதப்படும் நாடுகளில் முற்றாக இந்த திரைப்படத்தை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.

0 comments: