Posted in
இதன் முதல் கட்டமாகவே இந்தியா, வடக்கு, கிழக்குக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்து அங்குள்ள மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்வேறுகட்ட சுற்றுலாத்துறை முதலீடுகளை இந்தியா இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அண்மையில் கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிவிபத்து சம்பவத்தை அடுத்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இலங்கை தொடர்பாக கவனம் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சீனாவை வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி பணிகளில் இருந்து தவிர்க்கும் வகையிலேயே இந்தியாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் ஊக்குவிப்புகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.