By Oddamavadi News
Posted in
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது சேறு பூசும் வகையிலான பதாகைகளை அச்சிட உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.