Posted in
ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்நாள் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான பதாகையொன்று கண்ணில் பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.
"இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.
ஜனாதிபதியுடன் சென்ற பரிவாரங்கள் தாம் தங்கியிருந்த ஹோட்டலின் யன்னல் வழியாக இந்தப் பதாகையைப் பார்த்தனர் எனவும் அந்த இணையதளம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதியுடன் சென்றிருந்த பாதுகாப்புப் பிரிவினர் ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள இலங்கை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்தப் பதாகையை அகற்ற வழி இல்லையா எனக் கேட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்தப் பதாகையுடனான குட்டி விமானம் நீண்ட நேரம் வானத்தில் சுற்றிக் கொண்டிருந்ததாக நியூயோர்க்கிலுள்ள இலங்கையர்கள் தெரிவித்தனர்.