Posted in
ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறுக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தளை பகுதியில் வசிக்கும் ஆனந்தன் மோஹனதாஸ் என்ற நபர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சரத் பொன்சேகா வாக்காளராக பதியப்படவில்லை எனவும், அதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருக்க அவருக்குத் தகுதி இல்லை எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி, குறித்த மனு சட்ட திட்டங்களுக்கு அமைய நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்பட முடியாத ஒன்றென எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதன்படி மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மனுவை வாபஸ் பெறத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை ரத்து செய்தது.
எனினும் தேவைப்படின் மனுதாரர் இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதியை நாட முடியுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.