Posted in
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு (CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இந்த நிதியத்திற்கு (SAVE THE CHILDREN) சேவ் த சில்ரன் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாகவும் ஏனைய தன்னார்வ தொண்டர் அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் இதற்கான நிதியை மேலும் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இது தொடர்பாக தமது அமைச்சினால் அமைச்சரவையில் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெறவிருப்பதாகவும் அவர் கூறுகின்றார். சேவ் த சில்ட்ரன் வழங்கியுள்ள நிதி வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் 500 முன் பள்ளி ஆசிரியைகள் மாதாந்தம் ரூபா 2000 ஊக்குவிப்பு கொடுப்பனவை பெறவிருக்கின்றார்கள்.
ஏனைய பாடசாலை முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கட்டம் கட்டமாகவே இத்திட்டம் விஸ்தரிக்கப்படவிருக்கின்றது.அதற்கான நிதியைப் பெறுவதங்கான முயற்சிகளிலும் அமைச்சு ஈடுபட்டுள்ளது." என்றும் குறிப்பிட்டார் மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ். இலங்கையில் 5 வயதிற்கும் 10 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களின் கல்வி தொடர்பா ககவணம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றி அண்மையில் சேவ் த் சில்ட்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டி காட்டியுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட துணை அமைச்சர் "கல்வி அமைச்சுடன் இணைந்து இதற்கான திட்மொன்றை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.