Follow me on Twitter RSS FEED

சர்வதேச மட்டத்தில் இலங்கையில் புதிய ஆய்வு நிலையம்

Posted in
சர்வதேச மட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய புதிய ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூட வசதிகள் இந்த நிலையத்தில் ஏற்படுத்தப்படுமெனத் தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையத்தில் நவீன தொழினுட்ப வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடமொன்றையும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச ஆய்வு நிலையத்திற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்காக நாசா நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுநிலையத்தை அமைப்பதற்கென 50 ஏக்கர் காணி ஹோமாகம பகுதியில் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளதாகவும் தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments: