Posted in
ரயில் சட்டமூலத்திற்கு அமைய, ரயில் பாதை புனரமைப்பவர்கள் மற்றும் ரயில் அதிகாரிகளுக்கு மாத்திரமே ரயில் பாதைகளில் நடந்து செல்ல முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில் பாதைகளில் சாதாரண மக்கள் நடமாடுவது சட்டத்திற்கு முரணானதென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரயில் சட்டத்தை கடைபிடிக்காததன் காரணமாகவே கடந்த காலங்களில் பல பொது மக்கள் ரயிலில் மோதி உயிரிழந்ததாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரயில் கடவைகளில் சாரதிகளின் கவனயீனம் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக திணைக்களம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் பொது மக்களும் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ரயில்வே திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.