Follow me on Twitter RSS FEED

இனவாதத்துக்குத் துணை போகும் தனியார் தமிழ் ஊடகத்தைப் புறக்கணிப்போம்

Posted in
எம்.ஐ.லெப்பைத்தம்பி
இலங்கையின் முதலாவது தனியார் தமிழ் ஊடகமாக தமிழ் பேசும் மக்களின் குரலாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் ஊடகம் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தைத் தூண்டுவதிலும் அதற்குத்துணை போவதிலும் முன்னிலை வகித்து வருகின்றது. சமாதானம், சகவாழ்வு, இனவொற்றுமையை விரும்பும் அனைவரும் குறித்த ஊடகத்தைப் புறக்கணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயாமாகின்றது. 

இலங்கையில் திகன மற்றும் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற இனவாதச்செயற்பாடுகள் சொத்தழிப்புக்கள், தாக்குதல்களை மூடி மறைத்ததுடன், அது தொடர்பிலான செய்திகள், தகவல்கள் இருட்டிப்புச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், கிழக்கில் இரு இனங்களுக்கிடையிலும் இன முரண்பாட்டத்தைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு துணை போனதுடன், ஆளுநர் நியமனத்தை எதிர்த்து ஹர்த்தால் என்ற பெயரில் ஒரு சிலரால் விடுக்கப்பட்ட அழைப்பை பெரிது படுத்திக்காட்டி ஹர்த்தால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகக் கூக்குரலிட்டதுடன், ஹர்த்தாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முறியடிக்கும் நோக்கிலும் தமிழ் உறவுகளின் தைப்பொங்கலைக் கருத்திற்கொண்டும் முஸ்லிம் பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தமை மூடி மறைத்ததுடன், வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் தொழுகைக்காக கடைகள் மூடப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு என்ற செய்தியையும் வெளியிட்டு தமது இனக்குரோதத்தை குறித்த ஊடகம் வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு இலங்கை முழுவதும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கெதிராகவும் செயற்படும் குறித்த ஊடகத்தை முற்றாகப் புறக்கணித்து தமது எதிர்ப்பை சகல தரப்பினரும் வெளிக்காட்ட வேண்டும். அதிகப்படியான தமிழ் பேசும் முஸ்லிம் நேயர்களைக் கொண்டியங்குவதுடன், முஸ்லிம் வர்த்தகர்களின் அதிகப்படியான விளம்பரங்களைப் பெற்று பெரும் வருமானம் ஈட்டி வரும் குறித்த ஊடகத்தை புறக்கணிப்பதுடன், அதன் வளர்ச்சிக்கு துணை போவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த வாரம் ஒரு அரச அதிகாரியால் நிவாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட செய்தியை முற்றாக தவிர்ந்ததுடன், அதே நேரத்தில் ஒரு மாற்று இனத்தைச் சேர்ந்த ஒருவராக குறித்த முஸ்லிம் நபர் இருந்திருந்தால், பல முறை பிரேக்கிங் நியூஸ் போட்டு முஸ்லிம் பயங்கரவாதமாக முத்திரை குத்தி இருக்கும். பாதிக்கப்பட்டவர் ஒரு முஸ்லிம் நபர் என்பதாலும், அந்த மனித்தன்மையற்று நடந்து கொண்டவர் இந்து என்பதாலும் முற்றாக மூடி மறைக்கும் வழமையான செயற்பாட்டை கடைப்பிடித்தது குறித்த ஊடகம். 

இனவாதத்திற்கு துணை போகும் குறித்த ஊடகம் ஒருபடி மேலே சென்று, தமது செய்தியாளர்களாகச் செயற்பட்ட முஸ்லிம் ஊடகவியாளர்கள் அதிமானோரை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தியுள்ளதுடன், அதற்கான சரியான காரணங்களை இதுவரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இதுகால வரை செயற்பட்டு வந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்குப் பதிலாக தமிழ் பேசக்கூடிய இந்து இனத்தைச்சேர்ந்த அதிலும் குறிப்பாக, இனவாதத்துக்கு துணை போகும் அல்லது இனவாதம் பேசுவோரை ஹீரோக்களாகச் சித்தரிக்கும் அவ்வாறான செய்திகளுக்கு முன்னுரிமை வழங்குவோரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த காலங்களில் பிரதேச செய்தியாளர்களாக செயற்பட்டு வந்த அனைத்து முஸ்லிம் செய்தியாளர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களும் எம்மிடமுள்ளன. 

இவ்வாறு இனக்குரோத மனோ நிலையில், தமிழ் பேசும் மக்களின் ஊடகம் என பெயர்போட்டுக் கொண்டு ஒரு இனத்துக்கு சார்பாக அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராகவும் இனவாதத்துக்கு ஆதரவாகவும் செயற்படும் குறித்த ஊடகத்தை மென்மேலும் வளர்க்கத்தான் வேண்டுமா? இனி மேலும் குறித்த ஊடகத்தை வளர்ப்பதில் துணை போவதையும் வர்த்தக விளம்பரங்கள் என்ற போர்வையில் எமது பொருளாதாரத்தை வழங்கி அதனை வளர்ப்பதையும் முற்றாகத்தவிர்ந்து கொள்ள வேண்டுமென்பதுடன், அதன் விளம்பரங்களை முஸ்லிம் பிரதேசங்களில் காட்சிப்படுத்துவதையோ நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குதல், இடங்களை வழங்குவதையோ நாம் தவிர்ந்து கொள்வோம். 

அத்துடன், நம் பிரதேச நிகழ்வுகளுக்கு அழைக்கின்ற போது, குறித்த ஊடகத்தின் செய்தியாளர்களைத் தவிர்ந்து கொள்வதுடன், புனித ரமழான் காலங்களில் மட்டும் இன நல்லுறவு பேசிக்கொண்டு இப்தார் ஏற்பாடு, ரமழான் நற்சிந்தனை, ஸஹர் நிகழ்ச்சி என பள்ளிவாயல்களில் பதாதைகளை தொங்க விட்டுக்கொண்டு தங்களது ஊடக விளம்பரத்துக்கு பயன்படுத்துவதை பள்ளிவாயல்கள் முற்றாகத்தடை செய்வதுடன், தவிர்ந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். குறித்த ஊடகத்தை முற்றாகப் புறக்கணிப்போம்.

0 comments: