Follow me on Twitter RSS FEED

இனவாதத்திற்கு எதிரான அனைவரும் நாளைய ஹர்த்தாலை முறியடிக்க வேண்டும் - CASDRO தலைவர் அன்வர் நௌசாத்

Posted in

மேலும் அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து குறிப்பிட்ட சில தமிழ் இனவாதக் குழுக்களினால் நாளை 11.01.2019ம் திகதி கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

இருந்தாலும் இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நிலைப்பாடு என்று நாம் ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது. காலம் காலமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபம் காணும் ஒரு சிலரின் நடவடிக்கைகளின் பின்னணியே இதுவாகும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவித் தமிழ் மக்களே ஆகும். 

இனவாத செயற்பாடுகளினால் 30 வருடகால யுத்த இழப்புக்களைப் பாரியளவில் சந்தித்த உண்மையான தமிழ் சமூகம் ஒருபோதும் இன்னொரு சிறுபான்மை மீது திட்டமிட்ட அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட முனையாது. இது கடந்த காலங்களில் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக ஒன்றாக வாழும் சகோதர இனத்தின் மீதான இனவாத செயற்பாடுகளைத் திணிக்கின்ற ஒரு சிலரின் முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை.

தமிழ் தரப்பின் அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும் முஸ்லிம் தரப்பு ஆதரவளித்து வந்துள்ளதுடன் பக்கபலமாக நின்றுள்ளதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்த இனவாத செயற்பாட்டை வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படும் கடைநிலையிலுள்ளவர்களே முன்னெடுக்கின்றார்கள் என்பது நாம்அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக இருக்கும்போது மௌனித்திருந்தவர்கள் ஒன்றாக வாழும் சகோதர இனத்திலிருந்து அதுவும் நமது கிழக்கு மண்ணிலிருந்து பரிச்சயமான ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படும்போது அதனை வாய்ப்பாகக் கருதி இழந்த உரிமைகளை மீளப் பெருவதற்கான சந்தர்ப்பமாகப் பார்க்காது எதிர்த்து நின்று இனவாத செயற்பாடுகளை மேற்கொள்வது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். 

அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பொறுப்புள்ள உயர் நிருவாகப் பதவியான ஆளுனர் எனும் இடத்திற்கு இந்த மாகாணத்திலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவாகச் சேவையாற்ற பதவியமர்த்தப்பட்டுள்ள ஒரு உயர் அரசாங்க அதிகாரியே தவிர குறிப்பிட்ட ஒரு குழுவிற்கோ ஒரு இனத்திற்கோ மட்டும் சேவையாற்ற பதவியிலமர்த்தப்பட்டவர் அல்ல என்பதனையும் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே உண்மையான நிலைப்பாட்டை அனைத்து இன மக்களும் தெளிவாகப் புரிந்து ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

ANWAR NAWSHARD
President
CASDRO  

0 comments: