0
“பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அபரிமிதமானது” – மட்டு. மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர்.
Posted in
பிறைந்துறைச்சேனை பறக்கத் பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டு விழாவும் “மகுடம் சூட்டும் விழா” எனும் தலைப்பில் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணி தொடக்கம் பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர் அவர்கள் “பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அபரிமிதமானது” என்று தனது உரையில் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் “இங்கு நான்கு வகையான தரப்பினர் வருகை தந்திருக்கின்றோம். 1. தந்தைமார்கள் 2. தாய்மார்கள் 3. இந்த நிகழ்வின் கதாநாயகர்களும் இப்பிரதேசத்தின் முத்துக்களுமான பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்மைக்காக கௌரவிக்கப்படவிருப்பவர்கள் 4. மேடையில் வீற்றிருக்கும் அதிதிகள். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தரப்பினரும் தத்தமது கடமைகளை அல்லாஹ்வுக்குப் பயந்து சரியான சமூகக் கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்போமாக இருந்தால் இன்றைய சமூகப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்” என்றும் தெரிவித்தார்.
மேற்படி கௌரவிப்பு நிகழ்விற்கு ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பொறுப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரி. றிஸ்வி (மஜீதி) அவர்களும், ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவன உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான எம்.ஏ.சி. நியாஸ் (ஹாஜியார்) அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலைய உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா வாழைச்சேனை விகாராதிபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.