Follow me on Twitter RSS FEED

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!

Posted in

இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது.
கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தேறின.
Courtesy: தூதுஒன்லைன்

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில்

Posted in

பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் உட்பட்ட ஆறு பேர், இன்று காலை விபத்திற்குள்ளான நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முந்தல் பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

காத்தான்குடியில் ஹர்த்தால்: இயல்பு நிலை பாதிப்பு !

Posted in

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து காத்தான்குடி பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.ஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் வர்த்தக நிலையங்கள் ஹோட்டல்கள் அரசஅலுவலகங்கள் வங்கிகள் சந்தைகள் தனியார் நிறுவனங்கள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.
இன்று ஜும்ஆ தொழுகையின்பின் அமெரிக்க எதிர்ப்பு கண்டன பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளதுடன் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் யூத நசாராக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சதித்திட்டங்கள் தொடர்பாக இன்றைய ஜும்ஆ பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா இமாம்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளது.

முஸ்லிம் விரோத வீடியோ :யூ டியூப்க்கு புதிய நெருக்கடி

Posted in

யூ டியூப் இணையத் தளமானது சவூதி அரேபியாவில் மன்னர் அப்துல்லாவின் தலையீட்டை தொடர்ந்து இஸ்லாமிய விரோத திரைப்படத்தை  சவூதி அரபியாவில் நீக்கியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் இணைய தளமான யூ டியூப் குறித்த திரைப்படத்தை நீக்காத விடத்து அவ்விணையத்தளம் சவூதி அரேபியாவில் முற்றாக முடக்கப்படும் என்று சவூதி அரசால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே யூ டியூப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கூகிள் நிறுவனமானது இந்த திரைப்படம் யூ டியூபில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற அமெரிக்க வெள்ளை மாளிகையின் கோரிக்கையை நிராகரித்த அதேவேளை எகிப்து, லிபியா, இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இந்த படத்தின் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. அத்துடன் இந்த திரைப்படம் சட்ட விரோதமானதாக கருதப்படும் நாடுகளில் முற்றாக இந்த திரைப்படத்தை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.
சவுதி அரபிய மன்னர் அப்துல்லா, தனது உத்தியோக பூர்வ அறிவிப்பு ஒன்றில், குறித்த திரைப்படம் சவூதி அரேபியாவில் நீக்கப்படாதவிடத்து யூ டியூப் இணையம் சவூதியில் முற்றாக தடை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
மேலும், சவூதி அரேபியாவின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழிநுட்ப ஆணையம் சவூதி பொது மக்களையும் சவூதியில் உள்ள வெளிநாட்டினரையும் குறித்த படத்தின் இணையத்தள வெளியீடுகள் காணப்படுமிடத்து அது பற்றி தமக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நபிகள் நாயகம் மற்றும் எமது இஸ்லாம் மார்க்கத்தின்  மீது சேறு பூசும் எந்த நடவடிக்கையையும் தடுப்பது உண்மையான எமது மார்க்கம் எம்மீது விதித்துள்ள கடமையாகும் என்று சவூதி தேசிய பத்திரிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த திரைப்படம் யூ டியூபில் இருந்து நீக்கப்பட வேண்டுமென ரஷ்ய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஷ்ய நீதிமன்றம் ஒன்று தற்போது குறித்த திரைப்படம் தீவிரமானது என பாகுப்டுத்தப்பாடல் வேண்டுமா என ஆராய்ந்து வருகின்றது. இந்த ஆய்வுகளில் தீவிரமானது என்று முடிவு செய்யப்படுமிடத்து யூ டியூப் இணைய தளம் ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்படும் என்பது குறிப்பிட தக்கது.
இதே வேளை நவம்பர் முதலாம் திகதி அமுலில் வர இருக்கும் சர்ச்சைக்குரிய புதிய சட்ட மூலத்தின் பிரகாரம் இணைய தள உள்ளடக்கங்கள் சிறுவர்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்ற தலையீடுகள் இன்றி வெளியிட்ட சேவை வழங்குனரினால் இயக்கப்படும் சகல தளங்களும் ரஷ்யாவில் தடுக்கப்படும்.
“இது ஒரு நகைச்சுவை போல் தோன்றுகின்றது இந்த திரைப்படம் மூலம் யூ டியூப் இணையம் ரஷ்யாவில் முற்றாக தடுக்கப்படும் வாய்ப்புள்ளது” என ரஷ்ய தொடர்பாடல் அமைச்சர் நிகோலாய் நிகிபோரோவ் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் மூலம் திரைப்படத்தை நீக்க யூ டியூப் மறுக்கும் பட்சத்தில் இதன் இயக்கம் முடக்கப்படும்.
இதேவளை சுயாதீன உரிமைகளுக்கான குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜிம் கில்லோக் இவ்வாறான ஒரு தடை ஒரு தீவிரமான நியாயமற்ற பதிலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.   இது ஒரு அதீத வித்தியாசமான ஒரு விடயம்  ஒரு தனி மனிதன் முழு அமெரிக்காவின் அரசாக அரசியல் காரணங்களுக்காக சித்தரிக்கப்பட்டுள்ளார். இது ஏன் ஏற்படுகின்றது மற்றும் இது நியாமானதா என்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என BBC க்கு தெரித்தார்.
ஒரு யூ டியூப் பிரதிநிதி BBC க்கு கருத்து தெரிவிக்கையில் எல்லோரும் மகிழ்வாக இருக்கக் கூடிய மற்றும் மக்கள் தமது வித்தியாசமான கருத்துக்களை வெளியிடக்கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாங்கள்  கடுமையாக உழைப்பதாக தெரிவித்தார். இது ஒரு சவாலான ஒரு விடயம் ஏனெனில் ஒரு நாட்டில் அனுமதிக்கப்படும் ஒரு விடயம் மற்ற இடங்களில் தவறானதாக இருக்கின்றது.
இந்த காணொளி எமது இணையத்தில் பரந்து பட்ட அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளி எமது தெளிவான வரையறைகளுக்கு உட்பட்டது. எனினும் இந்த காணொளி சட்ட விரோதமானதாக காணப்படும் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தடுக்கப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் உள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு அங்கும் தடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கூகுள் பணிப்பாளர் ரசேல் வேட்ஸ்டோன்னின் கூற்றுப்படி இணையத்தளத்தில் ‘எதை எழுத வேண்டும் அல்லது எதை எழுதக்கூடாது’ என்பதை மத்தியஸ்தம் செய்யும் வேலையை கூகுள் செய்வதில்லை.
என்றாலும் உள்நாட்டு கலாசார மற்றும் தேவைகளின் நிமித்தம் எமது உற்பத்திகளை நாம் வடிவமைக்க முயற்சித்தாலும் உலக அரங்கில் அவைகளின் தேவை மிக வேகமாக மற்றம் அடையக் கூடியதாக உள்ளது. சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நாம் கையாள முயற்ச்சிக்கும் போது மிகப் பெரிய சவால்களை எமது நிறுவனம்  எதிர்நோக்க வேண்டி இருக்கிறது என்றும் கூறினார்.
இதேவேளை கூகுள் செப்டெம்பர் 20ஆம் திகதி வெளியிட்ட பிரத்தியேக அறிக்கையில் இந்த திரைப்படம் சட்ட விரோதமானதாக கருதப்படும் நாடுகளில் முற்றாக இந்த திரைப்படத்தை நிறுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.

அமீர் அலிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கின்றார் கமலா ரணதுங்க

Posted in

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான சட்டத்தரணி அமீர் அலியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கமலா ரணதுங்க இன்னும் ஒரு சில தினங்களில் அப்பதவியை ராஜினாமா செய்வார் என்று அறியப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் அமிர் அலி, கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவரை முதலமைச்சராக நியமிக்குமாறு தலா மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் என்பவற்றின் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியூதீனும் அமைச்சர் அதாவுல்லாவும் ஜனாதிபதியிடம் கூட்டாக வலியுறுத்திய போதிலும் அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலமாக எதிர்த்ததால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சுப் பதவிகள் வழங்க நேரிட்டதால், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸிற்கோ எவ்வித அமைச்சுப் பதவியையும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அமீர் அலியை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து பிரதி அமைச்சர் பதவியொன்றை வழங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் அமீர் அலியை தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்கவை ராஜினாமா செய்யுமாறு கேட்கப்பட்டதற்கு அமைவாக அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி அதனை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தியாகம் செய்யும் கமலா ரணதுங்கவுக்கு தூதுவர் பதவியொன்றை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரிய வருகிறது.
அதேவேளை கமலா ரணதுங்க தற்போது சிறிது நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஓட்டமாவடியில் இன்று பூரண கர்த்தால்

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கும் அமேரிக்காவிற்கும் எதிராக கர்த்தால் மற்றும் எதிர்ப்பு பேரணிக்கு ஏற்கனவே பள்ளிவாயல்கள் மூலம் கூட்டாக விடுக்கப்பட்ட அழைப்பின் படி ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் இன்று 21.09.2012ந் திகதி பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்கள் அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், வங்கிகள் மற்றும் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கொழும்பு பிரதான வீதி உற்பட ஏனைய வீதிகளும் வெறிச்சோடிக் கிடப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. 

அத்தோடு இன்று ஜும்ஆத் தொழுகையின் பின் பல பள்ளிவாயல்களிலிருந்து புறப்பட்டு வர இருக்கின்ற பேரணியில் கலந்து கொள்ளும் அனைத்து முஸ்லிம்களும் ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் ஒன்றுகூடி அமேரிக்க எதிர்ப்பை வெளிக்காட்ட இருக்கின்றனர். 

இவை தொடர்பான அனைத்துச் செய்திகளும் எமது செய்தித் தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். 

ஹச் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 22வது வாடிக்கையாளர் சேவை நிலையம் மட்டக்களப்பில்...

Posted in

உலகத் தரம் வாய்ந்த 500 தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ஹச் நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் தனது தொலைத் தொடர்பு சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 22வது வாடிக்கையாளர் சேவை நிலையத்தை, மட்டு-திருமலை பிரதான வீதியில், கோப்-இன் விடுதிக்கு முன்பாக இல. 487 திருமலை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரியில் நேற்று திறந்து வைத்தது.
இதன் போது, ஹச் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அனட் பிரகாஸ், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக சேவைகளை ஆரம்பித்தனர்.
இந்நிகழ்வில் ஹச் நிறுவனத்தின் சிரேஷ்ட வாடிக்கையாளர் சேவைப்பிரிவு முகாமையாளர் வானதி வில்சன், எம்.எஸ்.எம். சலீம், மட்டக்களப்பு பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி ஸி.ஐ. அசோப பெரேரா, ஹச் நிறுவனத்தின் மட்டு கிளை முகாமையாளர், பொலிஸ், இரானுவ அதிகாரிகள், ஹச் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது மக்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த ஹச் தொலைத் தொடர்பு நிறுவனம் 1200க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்ளை நிறுவியுள்ளதோடு, இலங்கையில் குறிப்பாக பிரதான நகரங்களான கொழும்பு, மஹரகம, நுகேகொட, கண்டி, யாழ்ப்பானம், அக்கரைப்பற்று, பொலனறுவை, றத்னபுர, ஹம்பஹா, புத்தளம், திருகோணாமலை, களுத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் தனது வாடிக்கையாளர் சேவை நிலையங்களை நிறுவியுள்ளது.
இங்கு திறந்துவைக்கப்பட்ட ஹச் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில், தலைநகரில் பெறும் அனைத்து சேவைகளையும், சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு ஹச் 3ஜி டொங்குளும் அறிமுகம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடல், டயலோக், பார்வதி எயாட்டெல், சண்டல், லங்கா பெல்;, ஹச் ஆகிய தொலைத் தொடர்பு வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூரில் மக்கள் வீதி மறியல் போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிதம்

Posted in
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இரு பிரதான வீதிகளை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதன் காரணமாக பயணிகள், வாகன சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இதன் காரணமாக மட்டக்களப்பு - அம்பாறை மற்றும் அம்பாறை - கல்முனை போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

நிந்தவூர் அட்டப்பள்ளம் வீதி மற்றும் நிந்தவூர் கூட்டுறவுச் சங்க வீதிகளை இடைமறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முகமது நபி அவர்களை களங்கப்படுத்தி வீடியோ வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி தொடக்கம் இடம்பெற்று வருகிறது. 

எனினும் அம்பாறையில் நாளைய தினமே வீதிமறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது எனவும் நிந்தவூரைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 

வீதிமறியல் இடம்பெற்றுள்ள இடத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு முஸ்லிம் பிரதேசங்களில் நாளை பூரண கர்த்தால்…

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருவதுடன் இலங்கையின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாளை 21.09.2012ந் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களான ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் பூரண கர்த்தாலுடன் கூடிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது. 
இந்த கர்த்தால் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கலந்து கொள்ளுமாறு ஒவ்வொரு பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்புவிடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை குறித்த பிரதேசத்திலுள்ள அரச,  அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, அமைதியான முறையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வம்பர்கள் செய்யும் எந்தவொரு ஈனச் செயலையும் முஸ்லீம் உம்மத் பொறுத்துக் கொள்ளாது-அமீர் அலி

Posted in

பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களை உலகலாவிய முஸ்லீம் உம்மத் தனது உயிலும் மேலாக நேசிக்கிறது என்பதையும் அவர்கள் பெயரால் வம்பர்கள் செய்யும் எந்தவொரு ஈனச் செயலையும் அது பொறுத்துக் கொள்ளாது என்பதையும் நாம் உலகத்திற்கு உணர்த்தியாக வேண்டியிருக்கிறது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நபிகள் நாயகத்தை அவமதிக்கின்ற வகையில் சித்தரித்து அமெரிக்காவில் வெளியான படத்திற்கு எதிராக வெளியிட்ட அறிக்கையிலயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அவ் அறிக்கையில் அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.
மேற்குலகு தனது சுயநலத்துக்காக நடத்தும் கேவலமான செயற்பாடுகளை மறைப்பதற்கும் முஸ்லீம் உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்கும் அவ்வப்போது இவ்வாறான அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
ஒட்டு மொத்த முஸ்லீம்களின் கவனத்தையும் ஒரு பக்கம் திருப்பி விட்டு எங்காவது ஒரு முஸ்லீம் தேசத்துக்குள் மூக்கை நுழைப்பதற்கும் அத்துமீறுவதற்கும் அடாவடி நிகழ்த்துவதற்கும் முயற்சித்து வருகின்றது.அல்லது அவ்வாறு செய்தவற்றை மக்கள் மனங்களில் இருந்து மறக்கடிக்கச் செய்ய இவ்வாறான செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் எதைச் செய்த போதும் அவற்றில் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேற்குலகம் யூத ‘லொபி’யும் தமது செல்வாக்கை உலகில் இழந்து வருகின்றன ஏன் என்ற வினாக்களோடு சொந்த நாடுகளிலிருந்தே மக்கள் தெருவுக்கு வந்து கேள்வி கேட்கத் துணிந்து விட்டனர்.இந்தத் தோல்விகளைத் திசை திருப்பவும் உலகளவில் முஸ்லீம்களின் மீது அவதூறும் அவமானமும் ஏற்படுத்தி அதன் மூலம் தமது செயல்களை நியாயப்படுத்த முனைகின்றனர்.
அல்லாஹ்வின் உதவியால் அவ்வாறான அவர்களது செயற்பாடுகள் வெற்றி பெறாது என்பதை முஸ்லீம் உலகு தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதன் மூலம் உணர்த்தி வருகின்றது. நபிகளார் மீதோ இஸ்லாத்தின் மீதோ அவதூறு மேற்கொள்ளும் எல்லா வேளைகளிலும் நாமும் நமது எதிர்ப்பைஎல்லா வழிகளிலும் வெளிக்காட்டுவது நமது கடமையாகும்.
இந்தப் பிரமாண்ட எதிர்பலையில் பங்கு கொள்ளும் அனைவர் மீதும் அல்லாஹ் தனது அருளைச் சொரியட்டும் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியது-சந்திரகாந்தன்

Posted in

கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் ,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் ஐ நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்கின்றார்.
இதனை விட விருப்பு வாக்குகளில் மிகக் கூடுதலான வாக்குககளை முதலமைச்சர் பதவிக்குரியவர் பெற்றிருக்க வேண்டும். அல்லது தமது கட்சி ஆகக் குறைந்தது 3 ஆசனங்களாவது பெற்றிருக்க வேண்டும் .
அதில் ஒன்று கூட சாத்தியப்படாததன் காரணமாகவே தங்களால் முதலமைச்சர் பதவியை பெற முடியாது போனதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஏற்கனவே முதலமைச்சர் பதவி வகித்து பல பணிகளை முன்னெடுத்த தான் பின்னர் அமைச்சர்கள் வாரியத்தில் இருப்பது என்பது நடை முறைக்கு சாத்தியமற்றது. அது மட்டுமல்ல அமைச்சர்கள் ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்க்திலும் சில சங்கடங்கள் இருந்தன. இதன் காரணமாகவேதான் அமைச்சர் பதவி வகிக்க  விரும்பவில்லை என சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.
அமைச்சர்கள் வாரியத்தில் இம்முறை தான் இடம் பெறாத காரணத்தினால்  தமிழர்கள் எவரும் இடம் பெறக் கூடிய வாயப்புகள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட அவர் தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார்.
மாகாண சபை உறுப்பினர் பதவியுடன் ஜனாதிபதியின் ஆலோசகர் பதவி மூலம் தன்னால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மேலும் குறிப்பிட்டார்.

ஹூனைஸ் பாருக் அவர்கள் பாராளுமன்றத்தில ஆற்றிய உரையின் தொகுப்பு

Posted in

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில ஆற்றிய உரையின் தொகுப்பு
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம்.
கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது உயிரினும் மேலாக மதிக்கப்படுகின்ற நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறப்பட்டிருக்கின்ற அல்லது புனைந்துரைக்கப்பட்ட அந்தத் திரைப்படம் தொடர்பாக இந்த நாட்டில் வசிக்கின்ற 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சார்பாக இந்த  சபையில் முதலில் நான் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதனால் முஸ்லிம்கள் இன்று கவலையடைந்திருக்கின்றார்கள். அதனோடு தொடர்புபட்டவர்களுக்கெதிராக அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தச் சபையினூடாக  கேட்டுக்கொள்கின்றேன்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக சகோதரர் நஜீப் ஏ. மஜீத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவருக்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென நான் நினைக்கின்றேன். அந்த வகையில் இலங்கையில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக உறுதிப் பிரமாணம் செய்த நஜீப் ஏ. மஜீத் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அவர் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, எமது கட்சி சார்பாகவும் நான் அவருக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது. உண்மையில் எமது அரசாங்கத்தைப்பொறுத்தமட்டில் நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்களல்லர், தேர்தலுக்கு முகங்கொடுப்பதில் நாங்கள் பின்வாங்கக்கூடியவர்களுமல்லர். இன்று எனக்கு முன்பு உரையாற்றிய உறுப்பினர் அவர்கள், அவசரஅவசரமாக மூன்று மாகாணங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறினார். அவ்வாறு தேர்தலை நடத்திய எமது அரசாங்கத்துக்கு வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதமல்ல, அதற்கு முன்னர் நடத்துவதற்கும் முடியும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால், அங்குள்ள சூழ்நிலைகளை கவனத்திற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மருதையன்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம் கூறவில்லை. தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை அங்கு இல்லாததன் காரணமாக குறிப்பிட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை இடைநிறுத்தக்கோரி அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். நீதிமன்றமும் அதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வடக்கில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையில் எவ்வாறு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது?
வடக்கின் மீள்குடியேற்றத்தை எடுத்துக்கொண்டால், முல்லைத்தீவு மாவட்டத்தில் முற்று முழுதாக மீள்குடியேற்றம் நடந்து முடியவில்லை. அதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை எடுத்துக்கொண்டால் அங்கும் இதே நிலைதான் காணப்படுகின்றது. சுமார் 22 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றமும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
Sir, “Sunday Observer” of 5th August, 2012 states, I quote:
“About 82 percent of them are living as refugees in Puttalam…”
புத்தளத்திலுள்ள முஸ்லிம்கள் வடமாகாணத்தில் மீள்குடியேறுவதற்காகப் பதிவுசெய்திருந்தாலுங்கூட இன்னமும் உடல் ரீதியாக மீள்குடியேற முடியாத நிலையில் இருக்கின்றார்கள். அங்கு குடியேறவிருக்கும் மக்களுக்கு காணிப்பிரச்சினை உள்ளது. உதாரணமாக எனது குடும்பத்தை எடுத்துக்கொண்டால், 1990ஆம் ஆண்டில் நாங்கள் எமது தந்தையுடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வெளியேற்றப்பட்டோம். ஆனால் இன்று எமது குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் விவாகம் செய்து  7 குடும்பங்களாக இருக்கின்றோம். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தையும் எடுத்துக்கொண்டால், அவ்வக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் வளர்ந்து இன்று 4, 5, 7, 8  குடும்பங்களாகப் பெருகியிருக்கின்றார்கள்.  ஆகவே, அத்தனை குடும்பங்களும் வாழ்வதற்குரிய காணி, வீடு போன்ற வசதிகள்  இன்று வரையில் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு எந்தத் தரப்பினராலோ செய்து கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றமை  கவலைக்குரிய விடயமாகும்.
இச்சபையிலே ஐக்கிய தேசியக் கட்சியினர்  இந்த விடயங்களைப்பற்றிப் பேசாமல் வடமாகாணத்திலே தேர்தலை நடத்துவதைப்பற்றி  மட்டும் பேசுகின்றார்கள்.  இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஓர் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவந்ததைப்போன்று, அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களைக் கெளரவமாக மீள்குடியமர்த்துவதற்கு அல்லது அவர்களுடைய இருப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்று ஒரு  பிரேரணையைக் கொண்டு  வந்திருந்தால் அது உண்மையிலே நாம் சந்தோஷப்படக்கூடிய, வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும்.
ஆனால், வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் அனேகமானோர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத நிலையிலுள்ளார்கள். “Sunday Observer” பத்திரிகையிலே     82  percent of them has still not been resettled physically எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோன்று இடம் பெயர்ந்த தமிழ் சகோதரர்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.
ஆகவே, இத்தகைய நிலையில் அங்கு தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்றுதான் கூறவேண்டும். இதற்கு ஒப்பாக நீதிமன்றமே “வடமாகாணத்தில்  புதுக்குடியிருப்பு மற்றும் மருதையன்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது” எனத்  தீர்ப்பளித்திருக்கின்றது. ஆகவே,எந்தவகையிலும் 2013 February மாதம் வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதுசாத்தியமற்றதாகும் என்பதே எனது கருத்தாகும்.
ஆகவே, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான உதவிகளைச் செய்யும்படி சர்வதேசத்துக்கும் உதவி வழங்கும் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுக்கவேண்டுமென நான் அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மிகவும் கண்ணியமாகவும் நேர்மையாகவும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் மீள்குடியேறியுள்ள  முஸ்லிம் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தும் விடயத்திலே எமது நாட்டுக்கு வருகின்ற சர்வதேச நிறுவனங்கள் மிகுந்த பாரபட்சம் காட்டுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில்  வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதனால், சர்வதேசத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்  விடயத்தில் ஆளுங்கட்சியை விட ஐக்கிய தேசியக் கட்சிக்கே பாரிய பங்கு இருக்கின்றது.  எனவே, அக்கட்சியினர் முஸ்லிம் மக்களின் கெளரவமான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு சர்வதேசத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் எனவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் வேண்டுகின்றேன்.
அதேவேளை,  வடமாகாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு காணிப்பிரச்சினை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. அங்குள்ள வன இலாகாத் திணைக்களத்தினர் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு மிகுந்த குறுக்கீடாக இருக்கின்றார்கள்.  எனவே, ஒரு விசேட வேலைத்திட்டத்தின்கீழ் அம் மக்களுக்குக் காணிகளை வழங்குவதிலும் மீள்குடியேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கி, அதனைச்   சரிவரச் செய்துவிட்டு வடமாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே  கேட்டு,  நான் விடைபெற்றுக்கொள்கின்றேன்.  நன்றி.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி அதிரடி மாற்றம்

Posted in


சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நமது நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 

ஆனால் தூதரகம் தாக்கப்பட்டதில்லை. ஆனால் அமைதியான நகரம் என்று பெயரெடுத்த சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரிடம் தனது கண்டனத்தை அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசும், தமிழக அரசுக்கு தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. தொடர் போராட்டம் காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது.

அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதி அளித்த தும், அங்கு துணை கமிஷனர் புகழேந்தி தலைமையில் குறைந்த போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததுதான், தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்தில் இல்லை. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தாக்குதலுக்கு பின்னரே உயர் அதிகாரிகள் அங்கு வந்தனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக உள்ள எஸ்.கே.டோக்ரா, லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாகவும், அந்தப் பதவியில் இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜார்ஜ், சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய கமிஷனராக ஜார்ஜ் இன்று காலை பதவி ஏற்கிறார்.

அமெரிக்க திரைப்பட வீடியோ: பொய்க் காரணத்தை கூறும் Google

Posted in

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்க திரைப்படத்தின் வீடியோவை Google ன் நிறுவனமான Youtube நீக்க மறுத்து வருகின்றது. ஒபாமா கெஞ்சியும் நீக்க முடியாது என Google நேரடியாக சொல்லி விட்டது.
நீக்க முடியாது என்பதற்கு கூகுள் சொன்ன காரணம் ”அந்த வீடியோ Youtube community guideline க்கு உட்பட்டே உள்ளது” எனவே அதை நீக்க முடியாது.
உடனே ஒபாமாவும் வாய முடிட்டாரு.. ஆனால் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த வீடியோ Youtube ன் community guideline க்கு எதிராகவே உள்ளது.
இதோ Youtube ன் community guideline:
Don’t Cross the Line என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள 6 வது விதி:
We encourage free speech and defend everyone’s right to express unpopular points of view. But we don’t permit hate speech (speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity).
வேறுக்கத்தக்க பேச்சு – ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கண்ட விதியில் கூறப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு வெறுக்க தக்க பேச்சாக ஒரு மதத்தை அவமதித்து தாக்கி தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோ மேற் கண்ட விதி முறைப்படி நீக்க பட வேண்டும்.
ஆனால் கூகுள் அது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கி்ன்றது எனக் கூறி அதை நீக்க மறுப்பதோடு பலரையும் பார்க்க தூண்டும் படி முகப்பிலேயே இன்னமும் வைத்துள்ளது. (இந்த செய்தி வெளியிடும் வரை)
——-
குறிப்பு – முகப்பில் ஒருவன் பெயரில் இருந்த வீடியோவை இந்தியாவில் மட்டும் தற்போது  நீக்கியுள்ள Youtube அந்த வீடியோவின் படத்தை இன்னமும் முகப்பிலேயே தான் வைத்துள்ளது. அதை கிளிக் செய்தால் நீக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வருகின்றது.  மேலும் பல பெயர்களில் அந்த வீடியோ Youtube ல் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்திய நேரப்படி  இன்று (18-92012) மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டு Youtube home page ன் screen shot தொடர்ந்து 4 நாட்களாக home page ல் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.
————
ஆக கூகுள் என்ன நினைக்கின்றது?: ”இந்த வீடியோ எந்த மதத்தையும் தாக்கவில்லை அதில் சொல்லப்பட்டுள்ளவைகள் உண்மையானவைகள் தான்”
வீடியோ விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கின்றது எனக்கு கூறி உலக நாடுகளை கூகுள் ஏமாற்றி வருகின்றது.
நமக்கு தெரிந்த இந்த செய்தி ஒபாமாவுக்கும்  தெரியாமலா இருக்கும் ? ஆக ஒபாவும் கூகுளோடு சேர்ந்து நாடகமாடுகின்றார் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோவை Google ம் அமெரிக்க அரசும் பொய்க் காணரத்தை கூறி இன்னமும் நீக்காமல் வைத்திருப்பதின் பின்னனி என்ன ?
வேறு என்னவாக இருக்கு முடியும் ? எல்லா நாடுகளிலும் அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகின்றது.
அதை தடுக்க இஸ்லாத்தை பின் பற்றும் முஸ்லிம்கள்  மீதும் இஸ்லாத்தின் மீதும் அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு வழி , அவர்களை கொபமடையச் செய்து வன்முறைகளுக்கு தூண்டி விடுவது.  அதற்கு இந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாத்தின் பால் வருபவர்கள், முஸ்லிம்களை பார்த்து வருவதில்லை, மாறாக தூய இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகள் பிடித்தே வருகின்றனர் என்பது இந்த சதி காரர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்ஆன்: 61 :08 )

யூ டியூப் பாவனையை பகிஷ்கரிக்குமாறு உலகளவில் வேண்டுகோள்!!!!!!

Posted in

முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து அமேரிக்கர்களாலும் யூதர்களாலும் உருவாக்கப்பட்ட திரைப்படம் யூ டியூப் இணையத்தினூடாக உலகளவில் பரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த வீடியோ காட்சிகளை யூ டியூப் இணைத்தளத்திலிருந்து விடுவிக்கக் கோரி உலகளவில் எதிர்ப்பு நடைவடிக்கையொன்றை மேற்கொள்ள உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் அமைப்புக்கள் தயாராகியுள்ளன. இதற்கமைவாக எதிர்வரும் 20, 21, 22ம் திகதிகளில் யூ டியூப் இணையத்தளத்தினை பாவிப்பதிலிருந்து உலகெங்கிலுமுள்ள 22 மில்லியன் முஸ்லிம் இணைய பாவனையாளர்கள் தவிர்ந்து கொள்ளவுள்ளனர். இது ஒரு உலக சாதனையான எதிர்ப்பு நடவடிக்கையாகும். 
இந்த 03 நாட்கள் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் யூ டியூப் இணையத் தள பாவனையைத் தவிர்ப்பதன் மூலம் குறித்த நிறுவனத்திற்கு பாரியளவில் நஷ்டமேற்படும் என்பதோடு அந்த அசிங்கமான வீடியோ காட்சிகளை விடுவிக்க பாரியதோர் அழுத்தத்தினையும் கொடுக்க முடியும். 
ஆகவே நீங்களும் முஸ்லிமாக இருந்தால் அல்லது இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பளிப்பவராக இருந்தால் சர்வதேச முஸ்லிம்களோடு இணைந்து குறித்த 03 நாட்கள் யூ டியூப் பாவனையைத் தவிர்ந்து உலகளாவிய எதிர்ப்பை வெளிக்காட்டவும். 

Please inform and invite all Muslims to boycott Youtube on 20, 21 & 22 of September 2012 to record protest for film against Islam. 22 million internet users of Muslims can realize them to remove this video from Youtube and can show the world that we love our Prophet Mohammed S.A.W.W. Please forward this message to all Muslims. (Sources : Universal Muslims)

முஸ்லிம் காங்கிரஸின் முடிவு குறித்து உயர்பீட உறுப்பினர்கள் பலர் அதிருப்தி

Posted in

 

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறு கை யில், அரசியல் தீர்மானங்களை மேற்கொள்கை யில் அண்மைக்காலமாக ஸ்ரீ லங்கா முஸ் லிம் காங்கிரஸுக்குள் முரண்பட்ட செய ற்பா டு களே ௭ழுந்துள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அப்பிரதேச முஸ் லிம் மக்களின் விருப்பமானது அரசுடன் இணை ந்து செயற்படுவது அல்ல. 

மாறாக தனி த்துவமான முஸ்லிம் கட்சியொன்றின் முதல மைச்சரை நியமிப்பதேயாகும். இதன் அடிப்படையிலேயே பிரசா ரங்க ளை யும் முன்னெடுத்தோம். கிழக்கு மாகாண முஸ் லிம் மக்கள் மரச்சின்னத்தை நம்பி வாக் க ளித்தனர். 

ஆனால் தற்போது ௭வ்வகையான பய னும் அற்ற நிலையில் வெறும் பதவி களு க் காக அரசுடன் இணைந்து கிழக்கு மாகா ண த்தில் செயற்பட மு.கா. முடிவு செய் துள்ள மை யா னது பலரது ௭திர்ப்பையும் தாண்டி ௭டுக்க ப்ப ட்ட தீர்மானமாகும். இதனால் தலைமைப்பீடத்துடன் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் தீர்க்கமான முடி வு களை ௭டுக்க வேண்டிய நிலையில் பல ரும் உள்ளனர் ௭ன்றார்.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்ப த ற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத் துக்கு ஆதரவு வழங்க முன்வந்தமை தொடர் பில் கட்சியின் உயர்பீட உறுப் பி னர் கள் பலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். 

தன் னி ச் சையாக செயற்படும் தலை மைத் துவ த் தினால் கட்சியின் ௭திர்காலமும், முஸ்லிம் சமூக ௭திர்பார்ப்புகளும் கேள்வி க்குறியா கி வி ட் டுள்ளன ௭ன்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸின் உயர்பீட சிரேஷ்ட உறுப்பினர் ஒரு வர் தெரிவித்தார். 


SLMC பற்றி விமர்சிக்க ஆசாத் சாலிக்கு அருகதை கிடையாது-ஏ.எம்.ஜெமீல்

Posted in

முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணும் நோக்குடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தீர்க்க தரிசனத்துடன் மேற்கொள்ளும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு ஆசாத் சாலிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவருமான ஆசாத் சாலி முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் விமர்சனங்களை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
‘நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்றிருப்பதன் காரணமாக கிழக்கில் நல்லாட்சி ஒன்றை அமைக்கும் கடிவாளம் முஸ்லிம் காங்கிரசின் கரங்களில் கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் தூரநோக்குடனான தீர்மானம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறுகிய சிந்தனைகளுக்கு அப்பால் பரந்த மனப்பாங்குடன் நீண்ட கால அடிப்படையில் யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் போது கட்சியின் முன்னெடுப்புகள் யாவும் சிறப்பாக அமைந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட பல கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை எமது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று நான் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இனப்பிரச்சினை தீர்வொன்றின் போது கிழக்கில் முஸ்லிம் மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வந்துள்ளார். ஆனால் இன்று இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் முழுக் கிழக்கு மாகாணமும் ஒரு முஸ்லிம் மாகாணமாக பரிணமிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆசனத்தில் அமர்த்தியிருப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இந்த சாதனையை நிலை நாட்டி இருக்கிறது. ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது ஆளும் தரப்பில் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் முஸ்லிம் முதலமைச்சர் என்பது அதாவுல்லாஇ றிசாத் பதியுதீன் போன்றோரின் வெறும் கோஷங்களுடன் புஷ்வானமாகி போன வரலாற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போது இந்த மாற்றுத் தலைமைகள் நிபந்தனைகள் எதுவுமின்றி சமூகத்திற்கு துரோகமிழைத்து விட்டு அரசுக்கு முற்றாக சோரம் போன சோக நிகழ்வானது ஒரு கறை படிந்த வரலாறாகும்.
இம்முறை கூட எமது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் கடிவாளத்தை கையில் எடுத்திருக்கா விட்டால் இந்த மாற்றுத் தலைமைகள் அதே வரலாற்றுத் துரோகத்தை இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்திருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
ஆனால் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற விடயத்தில் விடாப்பிடியாக நின்று அதனை வெற்றி கொண்டிருகிறார். அத்துடன் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் அரசிடம் தீர்வு கோரி அவற்றுக்கான உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நீண்ட கால அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் எழுத்து மூலமான ஒப்பந்தமொன்றையும் செய்து கொண்டே அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எமது தலைமைத்துவம் உடன்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூக நிர்வாக விடயங்கள் குறித்த அதிகாரங்கள் தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டு அவற்றை குறுகிய காலத்தினுள் அமுல் நடத்துவதற்கான உத்தரவாதங்களும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
ஆனால் யதார்த்தங்கள் – சாத்தியப்பாடுகள் குறித்து சற்றும் சிந்திக்காமல் முதலமைச்சர் பதவி ஒன்றுக்காக மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே ஆசாத் சாலி எழுப்பும் கோஷமாகும். ஆனால் அரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு தாம் விரும்பிய ஒரு முஸ்லிமை நியமித்துக் கொண்டு இரண்டு பலம் பொருந்திய மாகாண அமைச்சுகளை பெறும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும்.
இவற்றை விட கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஒட்டு மொத்தமான இருப்பு, பாதுகாப்பு என்பவற்றுக்கான உத்தரவாதங்களும், அவர்களது கல்வி, கலாசார, சமய, அரசியல், சமூக, பொருளாதார, பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நிவாரணங்களும், மத்திய அரசின் தயவின்றி பெற முடியாத யதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
எனினும் ஆசாத் சாலி இவற்றை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் எழுந்தமானமாக – ஒரு பக்க சார்பாக நின்று கட்சியையும் தலைமைத்துவத்தையும் கண்மூடித்தனமாக விமர்சித்திருப்பதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். உண்மையில் கட்சியில் எந்தவொரு அதிகாரபூர்வமான அந்தஸ்த்தையும் வகிக்காத நண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோ உயர்பீட உறுப்பினர்களோ அடிமட்ட போராளிகளோ தலைமைத்துவம் மீது கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாத நிலையில் எமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வந்த நண்பர் ஆசாத் சாலி வீண் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் புரளிகளையும் கிளப்பி விட்டு கட்சிக்கெதிரான சக்திகளுக்கு தீனி போட முற்பட்டிருப்பதானது அவர் ஏதோ ஒரு சக்தியின் முகவராக செயற்படுகிறார் என்பதையே புலப்படுத்துகிறது. அந்த சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவரது கருத்துகள் வெளிப்படுகின்றன என்றே நாம் உணர்கின்றோம்.
எவ்வாறாயினும் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு இவ்வாறு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு எமது கட்சிக்கு எதிராக சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி நபர்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம். அது எத்தகைய பெரும் சக்தியின் சதியாக இருந்த போதிலும் அதனை முறியடித்து முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான இந்த கட்சியை தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு போராளிகள் என்றும் தயாராகவே இருக்கின்றனர் என்பதை ஆசாத் சாலிக்கும் அவரை இயக்குகின்ற சக்திகளுக்கும் இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் ஆணித் தரமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம் – ஸ்தம்பித்தது சென்னை

Posted in

இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து கூட்டுப் போராட்டத்தை சென்னையில் இன்று நடத்தின. இதனால் செனனை அண்ணா சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை இப்படி ஒரு போராட்டத்தை அண்ணா சாலை கண்டதில்லை என்பதால் சென்னையே சில மணி நேரம் ஆடிப் போய் விட்டது.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் நேற்று 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் அமெரிக்க துணை தூதரகம்  3 நாட்களுக்கு மூடப்பட்டது. மேலும், தூதரகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டது.  மேலும் அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு அண்ணா சாலை தர்கா அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்ணா சாலையில் இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டதில்லை.  மேலும் போராட்டத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் மாலை 3 மணி முதலே போக்குவரத்துக்கு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அண்ணா சாலை முழுவதும் இஸ்லாமியர்கள் கொடிகளை ஏந்தியபடி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே அமெரிக்க தேசியக் கொடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் அண்ணா சாலை தர்கா அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அமெரிக்காவுக்கு எதிராக கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
உலக மக்கள் அனைவருக்கும் உன்னத தத்துவங்களை போதித்த இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் இந்த திரைப்படம் இஸ்லாமியர்களின் மத உணர்வை  புண்படுத்தியிருப்பதால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இந்தியா தனது கண்டனத்தை பதிவுச் செய்ய வேண்டும் எனவும்  அவர்கள் வற்புறுத்தினர்.
20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு குவிந்ததால் அண்ணா சாலை வரலாறு காணாத அளவுக்கு ஸ்தம்பித்தது.
இப்போராட்டத்தால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, அண்ணாசாலை ஆகிய தென்சென்னை பகுதிகள் ஸ்தம்பித்துப் போயிருந்தன. மேலும்  மத்திய சென்னை பகுதிகளான எழும்பூர், சிந்ததாரிப் பேட்டை வழியே பேருந்துகள் திருப்பிவிடப்பட்டதால் அந்தப் பக்கமும் வாகனங்களால் நிலைகுலைந்து போனது. சென்னையில் பல மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.(தூதுஒன்லைன்)

அமீர் அலிக்கு பிரதி அமைச்சர் பதவி?

Posted in

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதோடு அவருக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தகவலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உறுதிப்படுத்தினார்.
கிழக்கின் முதலமைச்சராக தமது கட்சிகள் சார்பில் அமீர் அலி நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவரான அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருந்தனர்.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பலத்த எதிர்ப்பு காரணமாக நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை அமீர் அலிக்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி கூட ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சர் றிசாத் ஜனாதிபதி மஹிந்தவுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தையில் அமீர் அலியை தேசிய பட்டியல் மூலம் எம்.பி.யாக நியமித்து பிரதி அமைச்சர் பதவி ஒன்றை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
இதன் நிமித்தம் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை அமீர் அலி ராஜினாமா செய்வார் என்றும் வை.எல்.எஸ்.ஹமீட் குறிப்பிட்டார்.

ஓட்டமாவடியில் அமேரிக்க எதிர்ப்புப் பேரணி! அணிதிரண்டு வாருங்கள்!!

Posted in
முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து திரைப்படமொன்றை அமேரிக்கர்களும் யூதர்களும் சேர்ந்து வெளியிட்டுள்ளமையை வன்மையாகக் கண்டித்து உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி வரும் நிலையில் எமது ஓட்டமாவடி முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21.09.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடியிலிருந்து ஆரம்பித்து நடைபெறவிருக்கும் இந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணியில் பிரதேசத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கட்டாயம் பங்குபெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

சர்ச்சைக்குரிய 'Innocence of Muslims' திரைப்படத்தின் காணொளிகளை நீக்கமறுத்த கூகுள்

Posted in
பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள 'Innocence of Muslims' என்ற திரைப்படத்தின் காணொளிகளை யூ டியூப்பில் இருந்து காணோளியை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.

இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
 

இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அந்நாடுகளில் யூ டியூப் வீடியோ காட்சிகள் தடை செய்யப்பட்டன. பின்னர் அந்த வீடியோ காட்சிகளை இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலும் தடை செய்திருக்கிறோம்.

தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காட்சிகள் எமது நிறுவன நிபந்தனைகளுக்குட்பட்டதுதான் என்று கூறியுள்ளது.

ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!

Posted in

ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.
 
 இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப்  (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை  மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன.
 
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன.
 
இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது.
 
இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன.
 
ஈரான் மீது இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இப்பாதையை ஈரான் தடைசெய்யலாம என்ற அச்சம் உலகநாடுகள் பலவற்றுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இதன் எதிரொலியாகவே உலகநாடுகள் பலவற்றின் படைகள் அப்பகுதியில் நிலைகொள்ளத்தொடங்கியுள்ளன. அவை அங்கு கூட்டாகப் போர் ஒத்திகைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிகின்றது.
 
 
ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது.
 
இதேவேளை ஈரான் அடுத்தமாதம் வரலாறு காணாத மிகப்பெரிய போர் ஒத்திகை நடவடிக்கையொன்றை நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.
 
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.
 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Posted in
நபிகள் நாயகத்தை அவதூறாக சித்திரித்து தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். லிபியாவில் தூதரக அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 

ஏமனில் நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இது போன்று சூடான், துனிசியா உட்பட பல நாடுகளில் அமெரிக்கத் தூதரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் பங்குள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரங்கள் மீது மேலும் தீவிர தாக்குதல்கள் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக அரோபிய தீபகற்பத்தில் தாக்குதல் நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு உத்தர விட்டுள்ளனர். 

எனவே, அந்த நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி சூடான் மற்றும் துனிசியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. 

சூடானில் உள்ள கார்போம் நகரில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. அங்கு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, அங்கிருக்கும் ஊழியர்களைக் காப்பாற்ற சிறப்பு அதிரடிப்படையைப் பாதுகாப்புக்கு அனுப்பும்படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை சூடான் நிராகரித்தது. எனவே அங்கிருந்து தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற அமெரிக்கா உத்தர விட்டுள்ளது. இதே போன்று ஏமன் அருகேயுள்ள துனிசியாவில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

ஜனாதிபதியின இந்திய விஜயத்தை எதிர்த்து தீக்குளித்த நபர் மரணம்

Posted in
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விஜய்ராஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார்.

பின்னர் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

வாழ்த்துக்கள்!!!

Posted in
இலங்கையில் முதன்முதலாக முஸ்லிம் முதலமைச்சராக தெரிவாகியுள்ள நஜீப் ஏ மஜீத் அவர்களுக்கு எமது ஓட்டமாவடி செய்திச் சேவையின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இந்திய இராணுவ ரகசியங்களுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது!

Posted in

இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற தமீம் என்ற நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
இலங்கைக்கு செல்ல முயன்ற தமீம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் தமீமிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடி இருப்பதாக க்யூ பிரிவு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் தமீமை பொலிசார் கண்காணித்து சுற்றி வளைத்தனர். அப்போது இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய சிடியுடன் இலங்கைக்கு செல்ல தமீம் முயற்சித்தது தெரியவந்தது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் சிடியை கொடுக்க சென்றதாகவும் பொலிசில் தமீம் கூறியுள்ளார்.
இதையடுத்து தமீம் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் துதலாம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே தமீமை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

Congratulations For 1st Muslim Chief Minister in History

Posted in
We Oddamavadi news, warmly congratulating the Newly elected Chief Minister to Eastern Province  Mr. Najeeb Al Majeed. HE IS THE FIRST MUSLIM CHIEF MINISTER IN SRI LANKAN POLITICAL HISTORY. 

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Posted in

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்ததத்தை தொடர்ந்தே  இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினராகிறார்???????

Posted in
இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டி இட்டு வெற்றி பெற்று பலராலும் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமீர் அலி அவர்கள் பாராளுமன்றஉறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பான செய்தித் தொகுப்பு விரைவில்………………

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார்?

Posted in

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடனேயே நஜீப் ஏ மஜீத் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக அறிய முடிகின்றது.
முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சுக்கள் இரண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் மற்றைய அமைச்சுக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கும், விமல வீர திஸாநாயக்கவுக்கும் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிக்கும் பிரதி தவிசாளர் பதவி தேசிய காங்கிரசுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்தமொன்று நாளை கைச்சாத்தாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மேலதிக மாவட்டமாக அங்கீகரிப்பதெனவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச மொன்று தனியான பிரதேச சபையாகவும் திருகோணமலை மாவாட்டத்தில் பிரதேச சபையொன்று தனியான  பிரதேச சபையாகவும் அங்கீகரிப்பது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக அந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த ஒப்பந்தம் நாளை காலை (18.9.2012) தயாரிக்கப்பட்டு மாலை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்று மாலை அரசாங்க பிரதி நிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் இது தொடர்பிலான பேச்சவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, மற்றும் சசில் பிறேம் ஜயந்த, டளஸ் அழகப்பெரும, அநுறபிரியதர்சன யாப்பா, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மேற்படி விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட தாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை செவ்வாய்க்கிழமை (18.9.2012) காலை புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகள் மற்றும் அரசாங்க தரப்பு பிரதிகள் சந்திக்கும் சந்திப்பொன்றும் நடை பெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.