Follow me on Twitter RSS FEED

யாருக்கு ஆதரவென்பதை தீர்மானிக்கும் மு.கா.வின் விசேட கூட்டம் இன்று

Posted in
கிழக்கு மாகாணசபை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பையா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையா ஆதரிக்கும் என்பதை தீர்மானிப்பதற்கான விசேட கூட்டத்துக்கு வருமாறு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான தனது ஏழு அங்கத்தவர்களையும் அழைத்துள்ளது. 

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன. 

ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமும் இன்று கலந்துகொண்டார். 

கூட்டத்தில் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பியபோதும் தான் எதுவும் பேசவில்லை என அவர் கூறினார். அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார். 

இதேசமயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹஸன் அலியை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தூதுக்குழுவை ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. 

11 ஆசனங்களைப் பெற்றுள்ள இந்த கட்சி முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது. 

இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கிலுள்ள மூன்று பெரிய சமுதாயங்களின் பிரதிநிதிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் சபையை நியமிக்க தயாராக இருப்பதாக கூறினார். 

நாம் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துப்போக தயாராகவுள்ளோம். அமைச்சர்களை நியமிக்கும் போது சிங்களம் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். 

0 comments: