Posted in
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள அமெரிக்க திரைப்படத்தின் வீடியோவை Google ன் நிறுவனமான Youtube நீக்க மறுத்து வருகின்றது. ஒபாமா கெஞ்சியும் நீக்க முடியாது என Google நேரடியாக சொல்லி விட்டது.
நீக்க முடியாது என்பதற்கு கூகுள் சொன்ன காரணம் ”அந்த வீடியோ Youtube community guideline க்கு உட்பட்டே உள்ளது” எனவே அதை நீக்க முடியாது.
உடனே ஒபாமாவும் வாய முடிட்டாரு.. ஆனால் ஆய்வு செய்து பார்த்ததில் அந்த வீடியோ Youtube ன் community guideline க்கு எதிராகவே உள்ளது.
இதோ Youtube ன் community guideline:
Don’t Cross the Line என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள 6 வது விதி:
We encourage free speech and defend everyone’s right to express unpopular points of view. But we don’t permit hate speech (speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity).
வேறுக்கத்தக்க பேச்சு – ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கண்ட விதியில் கூறப்பட்டுள்ளது.
உலக முஸ்லிம்கள் கொந்தளித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு வெறுக்க தக்க பேச்சாக ஒரு மதத்தை அவமதித்து தாக்கி தயாரிக்கப்பட்டுள்ள அந்த வீடியோ மேற் கண்ட விதி முறைப்படி நீக்க பட வேண்டும்.
ஆனால் கூகுள் அது விதிமுறைக்கு உட்பட்டே இருக்கி்ன்றது எனக் கூறி அதை நீக்க மறுப்பதோடு பலரையும் பார்க்க தூண்டும் படி முகப்பிலேயே இன்னமும் வைத்துள்ளது. (இந்த செய்தி வெளியிடும் வரை)
——-
குறிப்பு – முகப்பில் ஒருவன் பெயரில் இருந்த வீடியோவை இந்தியாவில் மட்டும் தற்போது நீக்கியுள்ள Youtube அந்த வீடியோவின் படத்தை இன்னமும் முகப்பிலேயே தான் வைத்துள்ளது. அதை கிளிக் செய்தால் நீக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வருகின்றது. மேலும் பல பெயர்களில் அந்த வீடியோ Youtube ல் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்திய நேரப்படி இன்று (18-92012) மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டு Youtube home page ன் screen shot தொடர்ந்து 4 நாட்களாக home page ல் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது.
————
ஆக கூகுள் என்ன நினைக்கின்றது?: ”இந்த வீடியோ எந்த மதத்தையும் தாக்கவில்லை அதில் சொல்லப்பட்டுள்ளவைகள் உண்மையானவைகள் தான்”
வீடியோ விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கின்றது எனக்கு கூறி உலக நாடுகளை கூகுள் ஏமாற்றி வருகின்றது.
நமக்கு தெரிந்த இந்த செய்தி ஒபாமாவுக்கும் தெரியாமலா இருக்கும் ? ஆக ஒபாவும் கூகுளோடு சேர்ந்து நாடகமாடுகின்றார் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வீடியோவை Google ம் அமெரிக்க அரசும் பொய்க் காணரத்தை கூறி இன்னமும் நீக்காமல் வைத்திருப்பதின் பின்னனி என்ன ?
வேறு என்னவாக இருக்கு முடியும் ? எல்லா நாடுகளிலும் அசுர வேகத்தில் இஸ்லாம் வளர்ந்து வருகின்றது.
அதை தடுக்க இஸ்லாத்தை பின் பற்றும் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் அவமதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு வழி , அவர்களை கொபமடையச் செய்து வன்முறைகளுக்கு தூண்டி விடுவது. அதற்கு இந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாத்தின் பால் வருபவர்கள், முஸ்லிம்களை பார்த்து வருவதில்லை, மாறாக தூய இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகள் பிடித்தே வருகின்றனர் என்பது இந்த சதி காரர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்ஆன்: 61 :08 )