Follow me on Twitter RSS FEED

INTERNATIONAL NEWS

Posted in
ஹொண்டுராஸ் நாட்டில் சிறிய ரக விமானம் திருட்டு!


ஹொண்டுராஸ் நாட்டின் ' லா மெஸா' சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று விடியற்காலை 3.00 மணியளவில் சிறியரக விமானமொன்று திருடப்பட்டுள்ளது. 

ஆயுதம் தாங்கிய 5 பேரைக்கொண்ட குழுவொன்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். 

திருடப்பட்ட இவ்விமானமானது ஹொண்டுராஸ் அதிகாரிகளால் கடந்தவருடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகும். 

இதனை அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தேசித்திருந்தது. 

விமானத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹொண்டுராஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒஸ்கார் அல்வாரெஸ், இது நன்கு திட்டமிடப்பட்டதும் கைதேர்ந்ததுமான ஒரு திருட்டுச் சம்பவம் என வர்ணித்துள்ளார். 

இது தொடர்பாக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்



உலக அழகியாக அலெக்சாண்டிரியா மில்ஸ் தெரிவு


 


2010ம் ஆண்டிற்கான உலக அழகியாக அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா மில்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2010ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, சீனாவின் சான்யா நகரில் இடம்பெற்றது.இந்தப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதான அலெக்சாண்டிரியா மில்ஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது இடத்தை போட்ஸ்வானாவைச் சேர்ந்த எம்மா வாரசும், மூன்றாவது இடத்தை வெனிசுலாவைச் சேர்ந்த அட்ரியானா வாசினியும் பெற்றனர்.உலகம் முழுவதிலும் இருந்து 119 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றமை இங்கு குறிப்பிடத்தகக்தாகும்.



இங்கிலாந்து விஞ்ஞானிக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு


சோதனை குழாய் முறையில் செயற்கையாக கருவுறும் முறையை கண்டறிந்த இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு, ரூ.7-1/2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

சர்வதேச அளவில் கலை, அறிவியல், அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழிலதிபர் நினைவாக, கடந்த 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2010) நோபல் பரிசு பெறுவோர் பற்றிய விபரங்களை நோபல் அறக்கட்டளை வெளியிட தொடங்கி இருக்கிறது.

முதலில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. சோதனைக் குழாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையை உலகுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் எட்வர்ட்சுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. தற்போது, 85 வயதாகும் ராபர்ட் எட்வர்ட்சுக்கு ரூ.7-1/2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.

இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

செயற்கை முறையில் கருவுறும் முறையை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1968 ஆம் ஆண்டு ராபர்ட் எட்வர்ட்ஸ் இறங்கினார். ஆனால், மத அமைப்புகள், கிறிஸ்தவ தேவாலயங்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஆராய்ச்சிக்கு தேவையான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை. எனினும், தனியார் அளித்த உதவியுடன் தனது ஆராய்ச்சியை தொடங்கினார்.

அதன் விளைவாக, 1978-ம் ஆண்டு ஜுலை 25-ந் தேதி அன்று உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுண் பிறந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதிலும் 40 லட்சம் சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்துள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் 10 சதவீத மக்கள் குழந்தை இல்லாமல் ஏங்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு ராபர்ட் எட்வர்சின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

மனித உடலில் இருந்து கருமுட்டையை வெளியே எடுத்து செயற்கை கருவூட்டும் சோதனையில் ராபர்ட்டுடன் இணைந்து பணியாற்றியவர், டாக்டர் ஸ்டெப்டோ. அவர்களுடைய சோதனை வெற்றி பெற்றதும் 1980-ம் ஆண்டில் `சோதனைக் குழாய் குழந்தை மருத்துவமனை`யை கேம்பிரிட்ஜ் நகரில் தொடங்கினார்கள். அதன் பிறகு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்தன.

இந்தநிலையில், 1988-ம் ஆண்டில் ஸ்டெப்டோ இறந்து விட்டார். எனினும், செயற்கை கருவூட்டல் முறையை உலகம் முழுவதும் ராபர்ட் பரப்பினார். மேலை நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் 2 சதவீதம் பேர், சோதனைக் குழாய் குழந்தைகள் தான். ராபர்ட் எட்வர்ட்சின் இந்த சேவையை பாராட்டி நோபல் பரிசு வழங்குவதாக நோபல் கமிட்டி உறுப்பினர் கோரான் ஹசன் தெரிவித்தார்.

ராபர்ட் எட்வர்ட்சுக்கு 85 வயதாவதால் உடல் நலமின்றி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே, பெரும்பாலும் அவர் வெளியில் வருவது கிடையாது. எனவே, நோபல் பரிசு கிடைத்தது பற்றி ராபர்ட் எட்வர்ட்சிடம் கருத்து கேட்க முடியவில்லை.





தீவிரவாத ஆதரவை நிறுத்தினாலே பாகிஸ்தானுடன் பேச்சு : நிருபமா


இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்துக்கு ஆதரவு தருவது நிறுத்தப்படுமானால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு இந்த வாரம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நிருபமா ராவ் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தூதரகம் வழியாக இந்தியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி நேற்று தெரிவித்திருந்தார்.
அதுகுறித்து நிருபமா ராவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்தான் என்றாலும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டோம் என உறுதி அளித்திருந்ததை பாகிஸ்தான் முதலில் நிறைவேற்ற வேண்டும் என நிருபமா ராவ் தெரிவித்தார்.



இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது
இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது
இந்தோனேசியா, உத்தியோகபூர்வமாக இந்தோனேசிய குடியரசு, சுமார் 18,000 தீவுகளாலான தென் கிழக்காசிய நாடாகும். இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியின் இந்தியா என பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப்பொருள்படும் நியோஸ் (nesos)என்ற பதங்களில் இணைப்பாகும். இதன் எல்லைகளாக பப்புவா நியூகினியா,கிழக்குத் திமோர், மலேசியா என்பற்றால் எல்லைப் படுத்தப் பட்டுள்ளது. இது உலகிலேயே முஸ்லிம் மக்கள் தொகை கூடிய நாடாகும்.
இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இப்பிரதேசம் சீனாவுக்கான வணிப பாதையில் அமைந்திருப்பதால் வாசனைத்திரவிய வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பிரதேசத்தை நோக்கி வளச்சியடைந்த இந்து இராச்சியங்கள், இந்து மற்றும் பௌத்த மதங்களைஇப்பகுதிகளுக்கு கொண்டு வந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இப்பிரதேசம் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலணித்துவ பிரதேசமாக காணப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியாவானது 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1953 இல் அங்கீகரித்தது.