Follow me on Twitter RSS FEED

தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகளே: நிரூபிக்கிறது யாழ். நூலகச் சம்பவம்: சுரேஸ் பா.உ. விசனம்

Posted in
 யாழ். நூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் படித்த, நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகள்தான் என்பதனை அரசாஙகம் நிரூபித்து விட்டது. எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் யாழ் நூலகத்துக்குள் நுழைந்த தென்னிலங்கைச் சிங்களச் சுற்றுலாப் பயணிகள் அறிவித்தலை மீறி நூலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த புத்தக ராக்கைகளை கீழே தள்ளிவிட்டுப் புத்தகங்களையும் வீசிய சம்பவம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் புதுவித கருத்தொன்று இன்று தோன்றியுள்ளது. தாங்கள் எங்கும் செல்லலாம் எதனையும் செய்யலாம். யாரும் ஏன் எதற்கு என்று எதனையும் கேட்க முடியாது. தாம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கு இலங்கை அரசின் படைத்தரப்பு பாதுகாப்புத் தரவேண்டுமென்ற எண்ணத்திலேயே. இவர்கள் இன்று உள்ளனர். விரும்பத்தகாத குறிப்பிட்ட சம்பவத்தை ஆராயும்போது கூட இதுவே புலப்படுகிறது.
யாழ் நூலகமென்பது கற்றலுக்கானதொரு இடம். அங்கு செல்பவர்கள் அமைதியான முறையில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அங்கு ஒரு நிகழ்வு நடக்குமானால் அதனைக் குழப்புவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்தோ அல்லது வெள்ளை மாளிகையிலிருந்தோ எவரும் வரமுடியும். ஆனால், நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானதே. ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகிறேன் என்னை உள்ளே அனுமதியுங்கள் என்று ஒருவர் கேட்டால் அவரை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. ஆனால், அவருக்கு அடிபணிந்து இராணுவம் பொலிஸாரும் செயற்படுவது கண்டித்தக்க விடயம்.
அநுராதபுரத்துக்கும் பொலநறுவைக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் சென்று இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா? அவ்வாறு நடந்து கொண்டால் நிலை என்னவாகும்? இங்குள்ள காணிகளில் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தோம் என்று கூறினால் அது கிடைக்குமா, இதனை அரசாங்கம்தான் ஏற்றுக் கொள்ளுமா?
யாழ். ரயில்வே நிலையத்தில் சுமார் 150 சிங்கள மக்கள் தங்கியுள்ளனர். தாம் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் இங்கு வாழ்ந்ததாக இவர்கள் கூறுகின்றனர். இருந்திருக்கலாம்.
நாம் இல்லையென்று மறுக்கவில்லை. இப்போது அவர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொழும்பிலிருந்து அமைச்சர் வந்து அவர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கொழும்பிலிருந்து அவர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஆனால், இருபது முப்பது வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் பல்லாயிரக்கணக்கான தமிழ்மகக்ள் இன்னும் அகதி முகாம்களிலேயே உள்ளனர். அவர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு இந்த நாட்டில் அமைச்சர்களும் இல்லை. அதிகாரிகளும் இல்லை.
இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் தூர், சம்பூர் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களையாவது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் அக்கறை இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
ஆனால், பெரும்பான்மைச் சமூகத்துக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஒன்றுக்குப் பத்து மடங்கான உதவிகளும் ஒத்தாசைகளும் பாதுகாப்புகளும் வழங்கப்படுகின்றன.
ஆனால், தமிழ் மக்கள் என்றால் அவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நோக்கப்படுகின்றனர். பயறுத்தி அவர்களை அடக்கும் முயற்சிகளே இடம் பெறுகின்றன.
வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் செய்யும் சிங்கள மக்கள் இந்த மனோபாவத்தைக் கைவிட வேண்டும். அதனையும் மீறி இவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைளில் ஈடுபட்டால் அவர்கள் தண்டிக்கப்பட்டவேண்டும். இதனை விட்டு விட்டு அவர்களைப் பாதுகாப்பதும் கௌரவிப்பதும் ஓர் அநாகரிகமான செயல்.
இதேவேளை, அரசாங்கம் கூறும் இன நல்லிணக்கம் என்பது கிட்டவே நெருங்கி வர முடியாத ஒன்று என்பதும் இந்தச் சம்பவங்கள் மூலம் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்

மட்டக்களப்பில் தமிழ் கிராமசேவை உத்தியோகத்தர் மீது பொலிசார் தாக்குதல்

Posted in
நேற்றைய தினம் (30.10.2010) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராமத்தில் கிராமசேவையாளராக கடமையாற்றுகின்ற திரு.ஜெகநாதன் என்பவர் தனது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு சிவில் உடையில் வந்த  பொலிஸ் உத்தியோகத்தர் சுபைகிர் தர்பிக் நாகூர் இஸ்மாயில் என்பவரா கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அத்துடன், கிராமசேவையாளரிடமிருந்த காணி சம்பந்தமான ஆவணங்களும் கிழித்தெறியப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான கிராம சேவையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கிராமசேவையாளர் மேலும் தெரிவிக்கையில்,
தனது பிரிவுக்குட்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அண்மைக் காலங்களில் முஸ்லிம்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாகவும் இதற்கு எதிராக தான் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே தான் இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் தான் இவ்வாறு தாக்கப்பட்டது சம்பந்தமாக தனது மேலதிகாரிகளிடமும் மற்றும் பொலிஸ் நிலையத்திலும் தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு கிராமசேவையாளர் தாக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த கண்டன அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதாவது.

நேற்றைய தினம் (30.10.2010) ஜெகநாதன் என்ற கிராமசேவையாளர் தாக்கப்பட்டதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும். தான் இது சம்பந்தமாக அரசாங்க அதிபரிடம் அறிவித்துள்ளதாகவும் மேலும் இவ்வாறான அரசாங்க அதிகாரிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிராமசேவையாளரைத் தாக்கிய குறித்த அந்த பொலிஸ் அதிகாரி ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழிற் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி நிலையம் காத்தான்குடியில் திறப்பு

Posted in
கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தொழிற் பயிற்சி நிலையமொன்று நேற்று(30.10.2010) காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது.

இளைஞர் விவகார அமைச்சினது இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் ஏற்பாட்டில் அiமைக்கப்பட்டுள்ள இத்தொழிற் பயிற்சி நிலையத்தினை இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும திறந்து வைத்தார்.

இதை திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர் நவரத்தினராஜா, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தம்மிக ஹேவ பத்தின உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இத்தொழிற் பயிற்சி நியைத்தில் விஷேட மாக கணியவயில் அளவையில் டிப்ளோமா, கணணிப்பிரயோக உதவியாளர் பயிற்சி, ஆடை உற்பத்தி போன்ற தொழிற் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியின் பேரில் ஜம்பது மில்லியன் ரூபா செலவில் இப்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் மட்டக்களப்பு விஜயம்.

Posted in
மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி அஜித் நிவாட் மட்டக்களப்பு உன்னிச்சைப்பகுதிக்கு விஜயம் செய்தார்.போர்சூழல்.காரணமாக பாரியளவில் அழிவடைந்ந இப்பிரதேசத்தில் பல்வேறு வாழ்வாதாரத்திட்டங்களை அவர் ஆரம்பித்து வைத்தார்.

அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியினூடாக இப்பகுதியில் மீளக்குடியேறிய மக்களுககு கடனுதவியாக சுமார் 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.630க்கும் மேற்பட்டவர்கள் இக்கடனுதவியைப்பெற்றுக்கொண்டனர்.

புpரிதியமைச்சர் வினாயகமூர்ர்hத்தி முரளீதரன் உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின்போது வாழ்வாதார உதவியாக வளப்பிற்காக கால்நடைகளும் வழங்கப்பட்டன.யுத்தத்தினால் சேதமடைந்து திருத்தியமைக்கப்பட்ட வீடுகளும் உரியவர்களுக்கு மையளிக்கப்பட்டன.

இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது

Posted in
இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. அதன்போது அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்றத்துக்கான இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, 

தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயலகள் தொடர்பான விசாரணை குறித்த பேச்சுகள் உள்ளனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கிய அவர், இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான திறமைகள் விசேட பொறுப்புடமையாக மாறியுள்ளது என்னறார். 

இலங்கையின் எதிர்காலத்திற்கு அது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதேவேளை,ஒபாமாவின் மனித உரிமைகள் குறித்த விடயங்களில் ஏமாற்றமடைந்திருந்தாலும் தனது நிர்வாகத்தின் சிரேஷ்ட வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களான சமந்தா பவர் மற்றும் டேவிட் பிரஸ்மன் ஆகியோரை கொழும்புக்கு அனுப்பி இலங்கையர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்கும் ஆதரவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா வாழ் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் ஒபாமாவின் அடுத்த இருவருட கால பதவிக் காலத்தில் நெருங்கிய கவனம் செலுத்தப்படுவதற்கான அறிகுறி தென்படுவதாக உணர்கின்றனர் என பி.ஆர் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

புஷ் நிர்வாகம் தமது பக்கம் கவனம் செலுத்தாத காரணத்தால் இனியும் அத்தகைய உதவிகளை குடியரசுக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், 

இவ்வருடம் அமெரிக்க தமிழர்கள் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஒபாமா நிர்வாகத்தை ஆதரிப்பதற்கு காரணம் உண்டு. இலங்கையில் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு அது நடவடிக்கைகள் மேற்கொள்ளும். 

ஒபாமா நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்கள் சமீபத்தில் இலங்கை சென்று இலங்கை வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் பிரதேசங்களுக்கும் அவர்கள் சென்று குடிமக்களுடனும் தமிழ் தலைவர்களுடனும் உரையாடியுள்ளனர். இலங்கையை நோக்கி அமெரிக்காவின் கண்கள் திருப்பப்பட்டுள்ளதற்கான சாட்சியமாக ஒபாமாவின் நிர்வாகம் முனைப்புடன் நடந்து கொண்டுள்ளதால் நாம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் சக்திகளின் விசாரணைகளை ஏற்கமாட்டோம்: அமைச்சர் பீரிஸ்

Posted in
வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப் படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதõகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டாது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் நல்ல யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது. அதேவேளை, இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணை நடத்தவில்லை எனவும், தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது எனவும் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் இராஜதந்திர சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது., இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை.

பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து தாம் வலியுறுத்திய போதிலும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிலைப்பாட்டை தற்போது ஒப்பு நோக்குவது பொருத்தமாகாது.

நோர்வே அரசாங்கத்துடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது.சமாதான முனைப்புக்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது. பொருளாதார ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்பட்டது.இலங்கையின் நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் போதியளவு தெளிவுபடுத்தப்படவில்லை எதிர்காலத்தில் தூதுவராலயங்களின் ஊடாக அதிகளவு தெளிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் தெரிவித்தள்ளார்.

இராணுவத்தை விட்டு ஓடியவர் கைக்குண்டுடன் கைது

Posted in
இராணுவத்தை விட்டு ஓடியவர் கைக்குண்டுடன் கைது இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 20 வயது இளைஞன் ஒருவர் உள்நாட்டு தயாரிப்பிலான கைக்குண்டு ஒன்றுடம் பூகொடை ஹிலரியா பாம் மண்டலாவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பூகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பூகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழருக்காகக் குரல் கொடுத்தவர் ஒபாமா - மார்தட்டுகிறார் வைகோ

Posted in
தமிழருக்காகக் குரல் கொடுத்தவர் ஒபாமா - மார்தட்டுகிறார் வைகோஅமெரிக்க ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமைக்கு இந்திய இடதுசாரிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமையை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களாவன, 

இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு இந்தியா துரோகம் செய்தபோது அதனை இந்திய இடதுசாரிகள் கண்டித்தார்களா? இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் இன்னல்களை அனுபவித்தபோதும், அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த போதும் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டுமென பராக் ஒபாமா வலியுறுத்தினார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவத்துள்ளார். 

கருப்பு இனத்தில் இருந்து, வெள்ளை மாளிகை ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமாவை இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களும் கட்சி, மத எல்லைகளைக் கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசின் சதியை அம்பலப்படுத்துகிறார் சோமவன்ச

Posted in
அரசின் சதியை அம்பலப்படுத்துகிறார் சோமவன்சஅரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வியை அழிக்க சதித் திட்டங்களைத் தீட்டிவருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார். பல்கலைக்கழகக் கல்விக்கென அரசாங்கம் குறைந்தளவான நிதியையே ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதன் காரணமாக, பல்கலைக்கழகத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திசைத்திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் இன்று முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சோமவன்ச அமரசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் எஸ்.பி.திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக பதவிப் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதென சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் இவ்வாறான திட்டங்கள் குறித்து முன்வந்து கேள்வி எழுப்புமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளிடம் சோமவன்ச அமரசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளைமுதல் மாணவர்களுக்கு அயடின் சோதனை

Posted in
சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் உடலில் காணப்படுகின்ற அயடின் கொள்ளவை பரீட்சிப்பதற்கான வேலைத்திட்டமொன்று நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இதற்கேற்ப நாடளாவிய ரீதியில் கல்வி வலயங்கள் ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களிடத்தில் இந்தத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

அத்தோடு, இந்த மாணவர்கள் வீட்டில் பயன்படுத்துகின்ற உப்பு வகை குறித்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வின் போது மாணவர்களின் அயடின் பயன்பாடு குறைத்த தகவல்கள் திரட்டப்படவுள்ளன. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்காக 48 பொதுசுகாதார பரிசோதகர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதி மோசடியில் ஈடுபட்டப் பெண் அநுராதபுரத்தில் கைது

Posted in
நிதி மோசடியில் ஈடுபட்டப் பெண் அநுராதபுரத்தில் கைது வெளிநாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பெண் கோடிக் கணக்கில் நிதி மோசடி செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும் இந்தப் பெண்ணிடம் சாரதியாக கடமைப் புரிந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அநுராதபுரம் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட குறித்தப் பெண், ராகமையில் வசித்து நீண்ட காலமாக நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐரோப்பிய நாடுகளில் வேலைப் பெற்றுத் தருவதாகக் கூறி இந்தப் பெண் 40 பேரிடம் 6 லட்சத்துக்கு அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார். கைது செய்யப்பட்டப் பெண்ணிடமிருந்து 5 லட்சம் பெறுமதியான நகைகளும், ஒரு தொகைப் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் மனோவுடன் சந்திப்பு

Posted in
பல்கலைக்கழக மாணவர்கள் மனோவுடன் சந்திப்புஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடினர். 12 பேர் அடங்கிய மாணவர் தூதுக்குழுவினருடனர் இந்த இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். 

இந்த சந்திப்பு தொடர்பில் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீது அரசாங்கத்தினால் நடத்தப்படும் அடக்குமுறை, ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ண கைது செய்யப்பட்டமை, தற்சமயம் 30 மாணவர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளமை, சுமார் 200 பேர்வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் ஒன்றியத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு நேரடி விளக்கமளித்து ஆதரவு கோரும் கலந்துரையாடல் வரிசையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. 

இதன் போது மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தாவது, 

மாணவர்கள் மீதான அடக்குமுறைகளையும், உதுல் பிரேமரட்ண கைதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் மாணவர் அமைப்புகளுடனும், ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது. 

இந்த அரச அடக்குமுறை தமிழ் மாணவர்களையும், தமிழ் மக்களையும் பொருத்தவரையில் புதியவை அல்ல. இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில் கடந்த 5 வருடங்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். 

உங்களது புள்ளி விபரங்களில் இடம்பெற்றுள்ள எண்ணிக்கைகளைவிட பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் சிறைக்கூடங்களில் நீண்ட காலமாக வாடுகிறார்கள். இன்னும் பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். இதைவிட பெருந்தொகையான தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தத்தினால் சகல விதமான கல்வி வளங்களையும் இழந்துள்ளார்கள். 

எமது மாணவர்கள் துன்புறும்பொழுது தென்னிலங்கையில் இருந்து உங்களது அமைப்புகள் உட்பட அரசியல் கட்சிகள் மத்தியில் இருந்து எமது மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு குரல் எழும்பவில்லை. எமது மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எனது தலைமையில் இங்கே தென்னிலங்கையில் நடத்தப்பட்ட போராட்டங்கள் கொச்சைப்படுத்தப்பட்டன. 

இன்று உங்களுக்கு ஆதரவு வழங்கும் சில கட்சிகள் அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு என்னையும், எமது கட்சியையும் புலிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் வசைப்பாடினார்கள். ஆனால் இவற்றை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் இன்று உங்களை உதாசீனப்படுத்தவில்லை என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். 

கடந்த காலங்களில் சிங்கள தரப்பிலும், தமிழ் தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன. இவை நிவர்த்தி செய்யப்படவேண்டும். எமது கட்சியை பொருத்தவரையில் அன்றும், இன்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுகின்றோம். தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என தனித்தனி வழிகள் இன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

ஒட்டுமொத்தமான அடக்குமுறைக்கு எதிராக அனைத்து இனத்தவரும் இணைந்துகொள்ளும் ஒட்டுமொத்தமான போராட்டத்தில் எமது கட்சி இணைந்துகொண்டுள்ளது. அதேபோல் உங்களது போராட்டங்களில் தமிழ் மாணவர்களதும், தமிழ் மக்களினதும் உணர்வுகளையும் இணைத்துகொள்ளுங்கள். இதற்கு பாலமாக செயற்படுவதற்கு நாம் தயார். எனக் கூறியுள்ளார்.

வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தினை படையினர் வழங்குகின்றனர்

Posted in
வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தினை படையினர் வழங்குகின்றனர்படையினர் வெறுமனே சண்டையிடுபவர்களாக மட்டும் இல்லாது நாட்டின் சமூக பொருளாதார செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தின் பெரும் பகுதித் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் படையினர் இருந்து வருகின்றார்கள். 

மேற்கண்டவாறு யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க குறிப்பிட்டார். 

யாழ்ப்பாணம் நகரத்தில் அமைந்துள்ள பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஆதார வைத்தியசாலைகளுக்கு கட்டில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய படைகளின் கட்டளைத் தளபதி 

அவுஸ்திரேலியாவில் இயங்கும் லக்சலிய அறக்கட்டளை நிதியம் என்னுடன் கொழும்பில் வைத்து கதைத்தபோது குறிப்பிட்டார்கள் நாங்கள் கொழும்பில் பல்வேறு செயல் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இந்த வகையில் யாழ். மாவட்டத்திற்கும் மருத்துவ துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் அது சம்பந்தமான அறிக்கைகளை தரும்படி கேட்டு இருந்தார்கள். 

நான் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது அவர் இதன் தேவைகளை எனக்கு தந்ததன் அடிப்படையில் இன்று இந்த தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக உள்ளது. 

படையினரைப் பொறுத்த வரையில் பல்வேறு சமூகத்தேவைகளையும் நிறைவு செய்வதில் தம்மாலான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இந்த வகையில் மீள்குடியேற்றம் இடம் பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கிணறுகளை துப்புரவு செய்தும் பாடசாலைகளில் இடிபாடுகளை அகற்றியும் கட்டடங்களை நிர்மாணித்தும் செயல்பட்டு வருகின்றார்கள். 

மக்களின் அடிப்படைத் தேவையான வீடுகளைக் கூட தம்மாலான வசதிக்கு ஏற்ப கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணித்துக் கொடுத்தும் வருகின்றார்கள். நான் 1980 ஆம் ஆண்டு படையில் இணைந்து 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். அன்று இருந்த யாழ்ப்பாணத்தையும் இன்று இருக்கும் யாழ்ப்பாணத்தையும் மீள் நினைவுபடுத்தி பார்க்கின்றேன். யாழ்ப்பாணத்தின் கட்டளைத் தளபதியாக இன்று இருக்கும் நிலையில் என்னாலான உதவிகளை செய்ய முயற்சிக்கின்றேன் எனவும் தெரிவித்தார். 

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திரசிகிச்சை கட்டில்களும் 15 நோயாளர் கட்டில்களும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திர சிகிச்சை கட்டில்களும் 14 நோயாளர் கட்டில்களும் வழங்கப்பட்டன. 

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திர சிகிச்சைப் கட்டில்கள் வழங்கப்பட்டதுடன் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை கட்டிலும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ் வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பயிற்சி தாதிய அலுவலர்கள் உட்பட மற்றும் படைகளின் கட்டளைத்தளபதிகள் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

தாய்லாந்தில் 61 இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Posted in
தாய்லாந்தில் 61 இலங்கையர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, இலங்கைத் தமிழர்கள் 114 பேர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்களுள் தகுந்த ஆவணங்கள் உள்ளவர்கள் விடுக்கப்பட்டு தற்போது 61 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இலங்கையில் யுத்தம் முடிவின் பின்னர், இலங்கையை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற முற்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்லா பகுதியில், கடந்த வியாழக்கிழமை பொலிஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைத் தமிழர்கள் 114 பேர் பிடிபட்டனர். 

விஸா காலத்திற்குப் பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தது போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மரண தண்டனைக் கைதிகளின் எதிர்காலம்; ஆராய மூவர் கொண்ட குழு

Posted in
மரண தண்டனைக் கைதிகளின் எதிர்காலம்; ஆராய மூவர் கொண்ட குழுமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்ரர் யாபா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

மரண தண்டனைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர் இந்தக் குழுவை நியமித்துள்ளார். 

மரண தண்டனை 2002 ஆம் ஆண்டில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டதிலிருந்து பெருமளவு கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, சிறைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக அமைச்சர் குணசேகர நேற்று முன்தினம் இந்தக் குழுவை நியமித்ததாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோகர் எம். எஸ். சதீஸ்குமார் தெரிவித்தார். 

இதேவேளை, வழக்குகள் தொடரப்படாமலும், எதுவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலும், சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென சட்டத்தரணிகள் பத்து பேர் கொண்ட குழுவொன்றை அமைச்சர் குணசேகர நியமித்துள்ளார். 

இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுமென்றும் சதீஸ்குமார் கூறினார்.

கல்குடாவில் நாளை எட்டரை மணிநேர மின்வெட்டு

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் நாளை (31.10.2010)எட்டரை மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் தெரிவித்தார். 

இலங்கை மின்சார சபை பராமரிப்பு வேலைகளை மேற்கொள்ளவிருப்பதால் நாளை காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை கல்குடா பிரதேசத்தில் மின் வெட்டு இடம்பெறுமென அவர் அறிவித்துள்ளார்.

பராக் ஒபாமாவின் முன்னைய காலப்பகுதி ஏமாற்றம் தந்தது

Posted in
பராக் ஒபாமாவின் முன்னைய காலப்பகுதி ஏமாற்றம் தந்ததுஅமெரிக்க நிர்வாக சபையினுடைய வெளிநாட்டு கொள்கைகளுக்கான மூத்த ஆலோசகர்களான சமந்தா பவர் மற்றும் டேவிட் பிரஸ்மன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கையர்களுடன் கூடி ஆலோசிக்கவென கொழும்பிற்கு அனுப்பியிருந்ததாக குறிப்பிடும் பராக் ஒபாமாவிற்கான தமிழர் குழு பராக் ஒபாமாவினுடைய முன்னைய காலப்பகுதி ஏமாற்றமளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

ஆனாலும் இலங்கையிற்கு இரு மூத்த அதிகாரிகளை அனுப்பி இலங்கையர்களுடன் கூடி ஆலோசிக்க வைத்தமை, அமெரிக்க நாடு இலங்கை மீது கொண்டுள்ள அவதான பார்வையை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இதனால் இன்னும் இரு வருடங்களில் இலங்கையும் அரசும் அமெரிக்க அரசும் மிகவும் நெருக்கமானதாக அமையும் எனவும் பராக் ஒபாமாவிற்கான தமிழர் குழு தெரிவித்துள்ளது.

பிரிட்டன் - டுபாய் விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Posted in
பிரித்தானியா மற்றும் டுபாய் விமான நிலையங்களில் நேற்று வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவை நோக்கி பயணிக்கவிருந்த இரண்டு சரக்கு விமானங்களிலேயே இவ்வெடிகுண்டு பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

யேமன் நாட்டிலிருந்தே இவ்விரு விமானங்களும் புறப்பட்டுள்ளன.

அமெரிக்க சிக்காகோ நகருக்குச் செல்லும் இவ்விரு விமானங்களும் பிரித்தானியா மற்றும் டுபாயிலும் தரை இறங்கியுள்ளன.

பிரித்தானிய புலனாய்வு சேவையான எம்.ஐ6 இற்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவை இரண்டும் அச்சிடும் உபகரணத்தில் (பிரிண்டர்) உபயோகிக்கப்படும் ' பிரிண்டர் காட்ரிஜ் ' இல் வைத்து பொதி செய்யப்பட்டுள்ளன.

மேற்படி வெடிகுண்டுகள், அமெரிக்காவிலுள்ள யூத மத வழிபாட்டுத்தலங்களை குறி வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அல்-கொய்தா தீவிரவாதிகள் பலம் பொருந்திய முக்கிய நாடுகளில் ஒன்றாக யேமன் கருதப்படுகின்றது.

ரிஷான நபீக்கிற்காக இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் கடிதம்

Posted in
ரிஷான நபீக்கிற்காக இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் கடிதம்ரிஷான நபீக்கின் மரண தண்டனையை தவிர்க்க, அவருக்கு மன்னிப்பு வழங்கி உதவுமாறு, நபீக் கொலை செய்ததாக கூறப்படும் சிசுவின் பெற்றாருக்கு கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

ரிஷான நபீக்கிற்கு வேலை வழங்குனரின் மனைவி அவரது குழந்தைக்கு பால் வழங்குமாறு குழந்தையை வழங்கியுள்ளார் இதன் பின்னரே அவர் குழந்தையை கொன்றுள்ளார் என உயர் நீதிமன்றம் தெரிவித்து மரணதண்டனை வழங்கியது.

தனுன சார்பில் ஆஜராக சட்டத்தரணிக்கு அனுமதி

Posted in
தனுன சார்பில் ஆஜராக சட்டத்தரணிக்கு அனுமதிஹைகோப் நிதி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபரான தனுன திலகரட்ன வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதனால் அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராக அனுமதியளிக்குமாறு சட்டத்தரணி ஒருவர் கொழும்பு மேல் நீதிமன்றைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், அசேல ருக்கவ என்ற சட்டத்தரணி இவ்வாறு அனுமதி கோரியுள்ளார். நீதிமன்றில் ஆஜராகுமாறு தனுன திலகரட்னவிடம் இருந்து ஆலோசனை கிடைக்கப்பெற்றுள்ளதா என ஆராயுமாறு அரச தரப்பு சட்டத்தணி தமின் தொட்டவத்தை நீதிமன்றை கேட்டுக் கொண்டார். 

இதேவேளை, தனுன திலகரட்னவின் கையொப்பம் அடங்கிய ஆவணமொன்றினை சட்டத்தரணி அசேல ருக்கவ நீதிமன்றில் சமர்பித்துள்ளார். குறித்த ஆவணத்தை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ், தனுன திலகரட்ன சார்பில் ஆஜராக சட்டத்தரணி அசேல ருக்கவவிற்கு அனுமதி வழங்கினார். 

மேலும் தனுன சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஏதாவது தவறுகள் செய்ய முயற்சித்தால் மேன்முறையீட்டு நீதிமன்றின் மூலம் அவருக்கு தண்டனை வழங்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ் எச்சரித்துள்ளார்.

மாணவர்களை சீர்குலைப்பது எமது திட்டமல்ல

Posted in
நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழேயே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டதாக உயர்கல்விப் பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அரச சொத்துக்களுக்கு சேத விளைவித்தமை குற்றச்செயலே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் அவர் கைது செய்யப்பட்டது நியாயமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

உதுல் பிரேமரட்ன மீதான விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்படாவிடின் அவருக்கு விடுதலை கிடைக்குமென உயர்கல்விப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களை சீர்குலைப்பது அரசாங்கத்தின் திட்டம் அல்ல எனவும் அவர்களை நல்வழிப்படுத்துவதே அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் கைது

Posted in
தாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு; நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர் கைதுதாய்லாந்து பொலிஸார் நேற்றுமுன்தினம் மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர். 

மலேசிய - தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோங்ளா, ஹட்யை ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். 

அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது செய்தபோது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று தாய்லாந்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றார்கள்.

ஜே.வி.பி.யினர் மாணவர்களை போராளிகளாக மாற்ற முயலுகின்றனர்

Posted in
வாக்குப் பலத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றுமே சாத்தியமில்லை என்று உணர்ந்து கொண்டுள்ள ஜே.வி.பி.யினர், வன்முறை மூலம் அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதற்காக பல்கலைக்கழக மாணவர்களை ஜே.வி.பி.யினர் பயன்படுத்துவதாகவும் இது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து கூறியுள்ள அவர், எங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உயர் கல்வியை சீர்குலைத்து, அவர்களை மீண்டும் 1971ம் ஆண்டிலும், 1987-88-89 ஆம் ஆண்டுகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதம் தாங்கிய வன்முறை போராளிகளாக மாற்றி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி.யினர், இப்போது தீவிரமாக மேற்கொண்டுவரும் முயற்சிகளை, அரசாங்கம் மட்டுமன்றி, பொதுமக்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர், எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள். 

கடந்த காலத்தில் வன்முறைகளை கைவிட்டு, மீண்டும் ஜனநாயக அரசியலில் சேர்ந்து விடுவதைப் போன்று பாசாங்கு செய்து வந்த ஜே.வி.பி.யினர், தங்களுக்கு மக்களின் வாக்குப் பலத்தின் மூலம், அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது என்றுமே சாத்தியப்படாது என்ற உண்மையை உணந்திருக்கின்ற காரணத்தினால், வேறுவழியின்றி அப்பாவி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவிகளையும் அங்கு பட்டதாரி படிப்பை மேற்கொள்ளும் பெளத்த பிக்கு மாணவர்களையும், பகடைக் காய்களாக பயன்படுத்தி, தங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக வன்முறை களை கட்டவிழ்த்த வண்ணம் இருக்கிறார்கள். 

ஜே.வி.பி.யினரின் இந்த தீய எண்ணத்தை புரிந்துக் கொண்டுள்ள நாட்டு மக்கள், குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் இப்போது ஜே.வி.பிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்னும் மூன்று மாதங்களில் பல்கலைக்கழகங்களில் வன்முறைகளுக்கு தூப மிட்டுவரும் ஜே.வி.பி.யின் கைப்பொம்மைகளாக இருந்து வரும் ஒருசில மாணவத் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்தார். 

இதுவரை காலமும் பல்கலைக்கழக மாணவர்களே வன்முறைகளை சட்டத்தின் காவலர்களான பொலிஸார் மீதும், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மீதும் கட்டவிழ்த்து விட்டு பல்கலைக்கழகங்களை செயலிழக்கச் செய்து வந்தார்கள். 

ஆனால், இன்று இவர்களின் தான் தோன்றித் தனமான சட்டவிரோத செயற்பாடுகளை இனிமேலும் மெளனமாக இருந்து சகித்துக் கொள்ள முடியாத நிலையில் பொதுமக்களும் வன்முறையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வன்முறைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். 

இந்தியாவின் இடதுசாரி அமைப்புக்களை போன்று, இலங்கையில் ஜே.வி.பி. அமைப்பினர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தனக்கென செல்வாக்கு தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஊடாக பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று, உயர் கல்வி அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள 15 பிரதான பல்கலைக்கழகங்களில், ஆறு பல்கலைக்கழகங்களில் இன்று மாணவர் மத்தியில் அமைதியின்மையை ஜே.வி.பி.யினர் பின்னணியில் இருந்து தோற்றுவித்துள்ளனர். உபவேந்தர்கள் தாக்கப்படுகின்றனர். மாணவர்கள் தங்களுக்கிடையில் சண்டை போட்டு, இரத்தம் சிந்துகின்றனர். பரீட்சைகளை நடத்த முடியாத அளவிற்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன. பல்கலைக் கழகங்களின் சொத்துக்களும் உடமைகளும் பல்கலைக்கழக மாணவர்களினால் நாசமாக்கப்படுகின்றன. 

ஆகவே, ஜே.வி.பி.யினரும் வன்முறைகளில் ஈடுபடும் அக்கட்சியை ஆதரிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழகங்களில் வன்முறைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது நிச்சயம் அவர்களுக்குப் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று கொரிய மொழிப் பரீட்சை

Posted in
பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று கொரிய மொழிப் பரீட்சைஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கொரிய மொழி எழுத்துப் பரீட்சை எட்டாவது தடவையாகவும் இன்று நடத்தப்படுகிறது. இவ்வேளையில் சில விஷமிகள் பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதாக கூறி 25,000 ரூபா முதல் 40,000 ரூபாவரையில் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். 

மேலும் மோசடியினை தடுக்க இன்றைய தினம் 700 பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

காலை 8.30 மணி முதல் 11.45 மணிவரை நடைபெறும் இப்பரீட்சையின் போது கடமையிலீடுபட்டிருக்கும் பொலிஸாரும் கையடக்க தொலைபேசிகளை உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸாரும் காலை 7.30க்கே பரீட்சை நிலையங்களுக்கு கடமைக்கு வருவர். பரீட்சையின் போது மோசடியிலீடுபடும் நபர்களை கண்டுபிடிக்கும் பொலிஸாருக்கு பணியகம் பரிசுகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் ஆட்சியை இலங்கை அரசு பின்பற்றுகின்றது: மங்கல

Posted in
முன்னாள் சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார்.

இச்சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு இலட்சம் பேரைத்திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

இன்று கண்டியில் இடம் பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஒழுங்கு செய்த ஒரு கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

1933ஆம் ஆண்டு ஹிட்லருக்கு எதிராக மக்கள் எழும் போது ஹிட்லர் அரச அதிகாரங்களை கைப்பற்றினார். அது போல் இன்று இலங்கையிலும் நீதிச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு போன்ற பல்வேறு ஆணைக் குழுக்களை ஜனாதி பதி தனது கையில் எடுத்துள்ளார்.

அவ்வாறு எமது ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட தினம் தான் செப்டம்பர் 8ஆம் திகதி ஆகும். எனவே நவம்பர் 8ஆம் திகதிக்கு இரண்டுமாதம் பூர்தியாகின்றது. அன்றும் நாடலாவிய ரீதியில் ஒரு ஆர்பாட்டம் செய்யவுள்ளோம். அதே விதமாக எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி மூன்று மாதமாகிறது. இருப்பினும் டிசம்பர் 10ஆம் திகதி உலக மனித உரிமை தினமாகையால் அன்று எமது உரிமை மீறப் பட்ட தினத்தை நினைவு கூறுவதுடன் மாபெறும் போராட்டம் ஒன்றை நடத்தி சரத் பொன்சேக்காவை மீட்டெடுப்போம் என்றார்.

உதுல் இன்று நீதிமன்றிற்கு

Posted in
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உதுல் பிரேமரட்ன இன்று நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக நுகேகொடை பொலிஸ் பிரிவின் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். உதுல் பிரேமரட்ன தற்போது நுகேகொடை பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

உயர்கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் உதுல் பிரேமரட்ன இன்று கோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.