Follow me on Twitter RSS FEED

இனமுரண்பாடும் உங்கள் எதிர்பார்ப்பும்... (Thilipkumaar Ganeshan's FB)

Posted in
எங்கள் முகநூல் நண்பன்  Thilipkumaar Ganeshan யின் முக நூல் ஆக்கம்.

இனமுரண்பாடும் உங்கள் எதிர்பார்ப்பும்...

சந்தைக்கு சோனி வரக்கூடாது என்று இந்தப்பக்கம் இருந்து சொல்வீர்கள், அந்தப்பக்கம் தமிழன் எங்கள்
ஊருக்கு தொழிலுக்கு வரக்கூடாது என்று சொல்வார்கள்.

ஒரு நாள் வன்முறையாக வெடிக்கும்
தொடர்ந்து பத்து நாட்கள் கலவரம் நடக்கும்12ம் நாள் பேச்சுவார்த்தை மறு நாள் பழையபடி நல்லுறவு ஒற்றுமை எல்லாம் ஏற்படுத்தப்படும். சுமுகமாக எல்லாம் வழமைக்கு திரும்பும்.


இடையில் நீங்கள் சண்டையிட்ட அந்த 10நாட்களில்
மீன் விற்கவும், ஓலைப்பெட்டி,பாய் விற்கவும் வரும் ஏழை முஸ்லீமும்
மேசன்,ஓடாவி என்று சோற்றுகாக கூலி வேலை செய்து பிழைக்கும் தமிழரும் செத்துப்போயிருப்பார்கள்.

விதவைப்பெண்களும் அனாதைக்குழந்தைகளும் உருவாக்கப்பட்டிருப்பார்கள்.கலவரம் ஒன்றை உருவாக்க ஓடித்திரியும்நீங்கள் அவர்களுக்கு சோறு கொடுப்பீர்களா?

அரைவயிறும் கால்வயிறுமாய்
பட்டினியோடும் வறுமையோடும் போராடி
பள்ளிக்கு சென்று படிக்கவும் வசதியில்லாமல் அடுத்தவர் கைகளை எதிர்பார்த்து அந்தக் குழந்தைகள் படாத பாடு படும்.

வருமானத்திற்கு வழியின்றி கணவனை இழந்து கிடைக்கின்ற தொழிலை செய்து வாழும் பெண் மீது பாலியல் சுரண்டலுக்காய்
உங்களில் ஒரு கூட்டம் திரியும்,
பின்பொருநாள்
அவள் வேசை என்று சொல்லிக்கொண்டு இலகுவாய் கடந்து செல்வீர்கள்.

உங்களை வைத்து அரசியல் செய்பவன் இனவாதத்தை காட்டி வென்றுவிட்டு தனது வேலையைப் பார்க்க போய் விடுவான்.
வன்முறையில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள்
வருடக்கணக்கில் நீதிமன்றும் போலீசுமாக இழுபட்டு திரிவார்கள்.

இவற்றுக்காவே இத்தனை பிரயத்தனம் செய்கிறீர்கள்.
ஏன் என்றால் இழப்புக்கள் உங்கள் குடும்பத்திற்கு இல்லை தானே..

BREAKING NEWS - தாக்குதல்களுக்குள்ளான ஓட்டமாவடி வர்த்தகர்

Posted in
இன்று காலை சந்திவெளி வாராந்த சந்தைக்கு வியாபாரத்திற்காகச் சென்ற ஓட்டமாவடி செம்மண்ணோடையைச் சேர்ந்த ஆதம்பாவா (வயது 55) தமிழ் இனவாதக் குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்யச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.


இதேவேளை ஏறாவூருக்கு சென்ற வாகனம் ஒன்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் சம்மேளனம் பதட்டத்தைத் தணிக்க முயற்சி எடுத்து வருகின்றது.


மேலும் செய்திகள் பதிவேற்றப்படும். 

BREAKING NEWS-சந்திவெளியில் முஸ்லிம் வியாபாரிகள் மீது சற்று முன்னர் தாக்குதல்

Posted in
இன்று காலை வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சந்திவெளி சென்றிருந்த முஸ்லிம் வியாபாரிகள் மீது தமிழ் இனவாதிக் குழுவொன்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் சந்திவெளியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரிய வருகிறது. 



இந்நிலையைத் தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிசார் சந்திவெளியில் குவிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் வியாபாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை. 

மேலதிக செய்திகள் பதிவேற்றப்படும். 

சந்திவெளி, சித்தாண்டிக்கு செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் அவதானம்!!!

Posted in
கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதவாறு வெளியேற்றப்பட்டதைப் போன்று நாளை செவ்வாய்க் கிழமை சந்திவெளி வாராந்தச் சந்தையிலும் எதிர்வரும் வியாழக்கிழமை சித்தாண்டி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகளை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.


சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த முஸ்லிம் விரோதப் போக்கில் எவ்வித சம்மந்தமில்லை என்பதோடு இதற்குப் பின்னணியாக இனங்களுக்கிடையில் குழப்பங்களை விளைவித்து அதன் மூலம் அரசியலில் பிரபல்யமடையத் துடிக்கும் ஒரு சில இனத் துவேசிகள் வேலைத் திட்டமே இவையாகும்.

ஆகவே மேற்படி பிரதேசங்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்குச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் மாத்திரமே உங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்படி இடங்களில் மேற்கொள்ளவும். இனமுறுகலொன்று ஏற்பட வாய்ப்பிருக்கும் தருணத்தில் அவ்விடங்களுக்குச் செல்வதை பெருமு்பாலும் தவிர்த்துக் கொள்வது வீணான பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காக்கும். 

மீராவோடை பாடசாலைக் காணி வழக்குத் தீர்ப்பு நாளை - இனமுறுகல் ஏற்படும் அபாயம்

Posted in
மீராவோடை பாடசாலைக் காணி சம்மந்தமான வழக்கு வாழைச்சேனை நீதவான்  நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நாளை 29.10.2017ம் திகதி அதற்கான தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மீராவோடை பாடசாலைக்குரிய காணியை ஒரு சில முஸ்லிம்கள் அத்துமீறி அபகரித்துள்ளதாக தமிழ்த் தரப்பிலும், அது தங்களது மூதாதையர்களின் காணி என முஸ்லிம்களின் தரப்பிலும் ஆதார ஆவணங்கள் காட்டப்பட்டு வருகின்றது. 


இவ்வாறான ஒரு அசாதரண நிலை குறித்த காணிக்கு அண்மையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் இடம்பெற்றிருந்த வேளை தமிழ்த் தரப்பு சார்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமங்கல தேரர் சம்பவ இடத்தில் ஆஜராகி முஸ்லிம்களின் காணி வேலிகளை உடைத்திருந்தார். இதனால் அங்கு பதட்ட நிலை அதிகரித்ததினால் பாரியளவில் பொலிசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக் கொண்டு வரப்பட்டு விடயம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பே நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஆட்டோத் தரிப்பிட முறுகல் நிலை, அதனைத் தொடர்ந்து இன்று 29.10.2017ம் திகதி இடம்பெற்ற கிரான் சம்பவம் இவ்வாறு தொடர்கையில் நாளை நீதிமன்றத் தீர்ப்பானது வெளிவரும் பட்சத்தில் அதுவும் ஒரு இனமுறுகல் நிலைமையை ஏற்படுத்தலாம் என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதேவேளை வாழைச்சேனை ஆட்டோத் தரிப்பிட பிரச்சினைக்கான தீர்ப்பும் நாளை நீதிமன்றத்தில் வெரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான தருணத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த காத்திருக்கும் இனவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் நடுநிலையாக உணர்ந்து இன்னுமொரு கசப்பான சம்பவம் மூலம் இரு சமூகங்களுக்குமிடையிலான உறவு பாதிப்படையா வண்ணம் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. 

பள்ளிவாயல் நிருவாகத் தேர்தலில் ஒன்லைன் கருத்துக் கணிப்பின் தாக்கம்

Posted in

கிரான் சந்தையில் வைத்து முஸ்லிம் வியாபாரிகளை தாக்க சதித்திட்டம்

Posted in
நாளை ஞாயிற்றுக்கிழமை கிரான் வாராந்த சந்தைக்கு வருகை தரவிருக்கும் முஸ்லிம் வியாபாரிகளை தாக்குவதற்கு  சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. 



அதன் பிரகாரம் இன்று மாலை முஸ்லிம் வியாபாரிகளை தாக்குவதற்குத் தூண்டும் பதாதைகள் கிரான் சந்தியில் தொங்கவிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகிறது. 

அத்தோடு நள்ளிரவில் கிரானை வந்தடையும் முஸ்லிம் வியாபாரிகளின் வாகனங்களைத் தாக்கவும் சதித் திட்டம் போடப்பட்டுள்ளது. 

நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் முன்பாக தமிழ், முஸ்லிம் ஆட்டோ தரிப்பிடப் பிரச்சினையின் போது ஏற்பட்ட வாக்குவாதமே இதற்குக் காரணம் என்றும் தெரிய வருகிறது. 

இவ்விடயம் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிய வந்ததையடுத்து இப்போது நள்ளிரவு தொடக்கம் பெருமளவான பொலிசார் கிரான் சந்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு இந்த தாக்குதல் சம்பவத்தை முன்நின்று நடத்த திட்டமிட்டவராகக் கருதப்படும் கிண்ணையடியைச் சேர்ந்த குணராசா குணசேகரன் என்பவரை வாழைச்சேனைப் பொலிசார் காலை 6 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். 

ஆகவே, தங்களுக்குத் தெரிந்து கிரானுக்கு வியாபாரத்திற்குச் செல்லும் முஸ்லிம் வியாபாரிகளை அங்கு செல்லாது தவிர்ந்து கொள்ள அறிவித்தல் விடுக்கவும். 

உரிய நேரத்தில் பாரிய வன்முறை ஒன்றை முறியடித்து நடவடிக்கை எடுத்த வாழைச்சேளை பொலிசார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினருக்கு பொதுமக்கள் சார்பாக நன்றிகள். 


FLASH NEWS - உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகள்

ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்பட்ட தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் பின்வருமாறு-










மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 1201

Posted in
பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 3151 இல் 1201 வாக்குகள் மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கென்னும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Posted in
ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலை பி.ப. 2.15 உடன் நிறைவுக்கு வந்த பின்னர் வாக்கென்னும் நடைவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை முந்திக் கொண்டு தருவதற்கு நாம் காத்திருக்கின்றோம்.



இலங்கையில் இனவாதம் தொடர்பாக விழிப்பூட்டும் ”மர்மன்”

Posted in
பல்லினங்கள் ஒற்றுமையாக வாழும் இலங்கையில் எவ்வாறு இனவாதம் தூண்டிவிடப்படுகின்றது என்பதனைத் தெளிவூட்டும் "FRCS Media" தயாரிப்பில் உருவாகியுள்ள ”மர்மன்” குறுந்திரைப் படத்தைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தி பார்வையிடவும்.



4 நிமிடத்திற்குற்பட்ட வசனங்களின்றி காட்சிகளை மாத்திரம் கட்சிதமாக உள்ளடக்கிய குறுந்திரைப்படமாக இது காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

ஓட்டமாவடி ஜமாத்தார்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவில்

Posted in
ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இன்று நடத்தப்படும் தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வருகை தந்து வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



இன்று காலை 09.00 மணி தொடக்கம் பகல் 02.00 மணிவரை இத்தேர்தல் இடம்பெறுகின்றது. பெரும்பாலும் இன்று பி.ப. 4.00 மணியின் பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முடிவுகள் கிடைத்தவுடன் எமது தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். 

ONLINE POLL RESULTS ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத் தேர்தல் - ஒன்லைன் முன்னோட்ட தேர்தல் முடிவுகள்

Posted in
ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தெரிவிற்கான தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் வாக்கு அபிப்பிராயத்தை முன்கூட்டி அறியும் வகையில் ஒன்லைன் வாக்கு கணக்கெடுப்பு இன்று 27.10.2017ம் திகதி 14.58மணி தொடக்கம் 22.03 மணிவரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆர்வமுள்ள பலர் குறுகிய நேரத்திற்குள் அதிக தொகை வாக்குகளை அளித்திருந்தனர். அந்த வகையில் 826 மொத்தமாக அளிக்கப்பட்டு 3 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும், 823 வாக்குகள் செல்லுபடியானதாகவும் கணிக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் அளிக்கப்பட்ட வாக்குகளின் முழு விபரம் பின்வருமாறு -

ஒன்லைன் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வெற்றியடைந்தோர்.

01. எம்.எல்.ஏ. ஜுனைட் - 93 வாக்குகள்
02. எம்.எம். ஹனீபா – 47 வாக்குகள்
03. ஐ.எல்.எம். அஸ்மி – 43 வாக்குகள்
04. பீ.எம். பிர்னாஸ் - 41 வாக்குகள்
05. எஸ்.எம். சனூஸ் - 41 வாக்குகள்
06. எஸ்.ஏ.எம். றியாஸ் - 39 வாக்குகள்
07. ஏ.எல்.எம். அனஸ் - 37 வாக்குகள்
08. எம்.ஐ. மாஜிதீன் - 33 வாக்குகள்
09. எஸ்.ரி.எம். நஜீப்கான் - 32 வாக்குகள்
10. எம்.எஸ்.எம். அஷ்ரப் - 30 வாக்குகள்
11. எம்.யூ.எம். இஸ்மாயில் - 28 வாக்குகள்
12. எச்.எம்.எம். முஸ்தபா – 27 வாக்குகள்
13. ஏ. தாஹிர் - 26 வாக்குகள்
14. ஏ.எம்.எம். உவைஸ் - 24 வாக்குகள்
15. எம்.ஐ.எம். இல்யாஸ் - 24 வாக்குகள்
16. ஏ.எஸ். ஜெமீல் - 23 வாக்குகள்
17. ஏ.எல்.எம். ஹனீபா – 21 வாக்குகள்

ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் அவர்களின் இலக்கத்திற்கு நேரே சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. 


தெரிவுசெய்யப்பட்ட முதல் 17 பேர் (1-17) 
அவர்கள் பெற்ற நிலை சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. 




இலக்கத்துடன் சரிபார்ப்பதற்காக கீழே பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. 


செய்தி - ஆதம் றிஸ்வின்

வாழைச்சேனை முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது யார்?

Posted in

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இவ்வளவு காலமும் தொழில் செய்து வந்த ஆட்டோ சாரதிகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தது நாமறிந்ததே!
அதன் ஒரு அங்கமாக இன்று பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தலைமையில் ஏற்கனவே எமது சகோதரர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்தை உடைத்தெறிந்துவிட்டு தமிழ் சகோதரர்களின் ஆட்டோ தரிப்பிடத்திற்கு முன்னால் பஸ் தரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் விளைவாக இன்று இன முறுகள் ஒன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இருந்த போதும் SSP யின் தலையீட்டினால் சற்று அமைதியான சூழல் தற்போது நிலவுகின்றது.


இருந்தும் தமிழ் சகோதரர்களின் தரப்பில் பலமான அரசியல் பலம் இருப்பதை கண்கூடாக கானகிடைத்தது மட்டுமல்லாமல் குறித்த பிரதேசத்தைவிட்டும் எமது சகோதரர்களை அப்புறப்படுத்தி அவ்விடத்தில் தமிழ் சகோதரர்கள் மட்டும் தொழில்புரிவதற்கு தான் சம்மதிப்பதாக அமைச்சர் அமீர் அலி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கையெழுத்திட்டு உறுதியழித்ததாக யோகேஸ்வரன் எம்.பி. SSP முன்னிலையில் விளக்கமளித்தார்!

ஏன் நாம் இன்னும் அனாதையாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் எமது பிரச்சினையை பார்ப்பதற்கு ஏன் ஒரு அரசியல்வாதிகளும் முன் வருகிறார்கள் இல்லை என்ற ஏக்கம் அங்கு குழுமியிருந்தவர்களின் ஒன்றுபட்ட ஓலமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது!

செய்தியாளர் - நாசர் இஸ்மாயில் 

குறித்த நிகழ்வின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/imnazar34/videos/1516683788384817/ 

மாற்றத்திற்கான நடுநிலை அணி பள்ளிவாயல் தேர்தல் களத்தில் உறுதியுடன் தனது இலக்கை நோக்கி

Posted in
ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் நிருவாகத் தெரிவிற்கான தேர்தலில் மூன்று வேட்பாளர் அணிகள் பிரதானமாகக் களமிறங்கியுள்ளன. அதில் ஹனீபா ஹாஜியார் தலைமையில் ஒரு குழுவும், ஹனீபா (மம்மலி ஜீஎஸ்) தலைமையில் ஒரு குழுவும், மூன்றாவதாக மாற்றத்திற்கான நடுநிலை அணி என்று ஒரு குழுவும் களமிறங்கியுள்ளனர்.




சமூகத்தில் முக்கிய நிலைகளில் இருக்கும் 17 பேரை உள்ளடக்கிய மாற்றத்திற்கான நடுநிலை அணியானது எந்தவித அரசியல் பின்னணியும் இன்றி பள்ளிவாயலின் மறுமலர்ச்சியைக் குறிக்கோளாக மட்டும் கொண்டு களமிறங்கியுள்ளதால் அதிக எதிர்பார்ப்பினைக் கொண்ட அணியாகவும் காணப்படுகின்றது.

இருந்தாலும் மற்றைய இரு அணியினரும் இந்த நடுநிலை அணியினுள் உள்ளடங்கும் சுமார் 6 பேரை தங்களது பிரச்சார விளம்பரங்களிலும் உள்ளடக்கி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதால் இந்த 6 பேரும் உண்மையில் எந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

இந்தக் குழப்பங்களை களையும் வண்ணம் மாற்றத்திற்கான நடுநிலை அணியாகப் பிரகடணப்படுத்தப்பட்ட அனைவரும் நேற்று 25.10.2017ம் திகதி இரவு ஏ.எல்.எம். றிசான் அவர்களின் இல்லத்தில் ஒன்றாகக் கூடி தாங்கள் ஒரே அணியாகவே உள்ளதை நிரூபித்துள்ளனர்.

இதன்மூலம் ஏனைய இரு குழுக்களுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும் மாற்றத்திற்கான நடுநிலை அணியினுடனேயே தொடர்ந்தும் இருப்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


அத்தோடு மாற்றத்திற்கான நடுநிலை அணியிலுள்ள 6 பேரின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியில்லாமலேயே மற்றைய இரு அணியினரும் தங்களது பிரச்சார விளம்பரங்களில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.