Follow me on Twitter RSS FEED

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் சந்திப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

மீராவோடை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினருக்கும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு 2019.01.30ஆம் திகதி (நேற்று) மட்டக்களப்பில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் மீராவோடை வைத்தியசாலையில் நிலவும் ஆளணிகள் பற்றாக்குறை தொடர்பாகவும், இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் படும் சிரமங்கள் தொடர்பாகவும் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், கடந்த கால சந்திப்புக்களின்போது ஏற்கனவே அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட ஆளணி கோரிக்கைகளில் ஒருசில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பெற்றுத்தந்தமைக்காக அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நன்றி பாராட்டப்பட்டார்.

அதில், தாதி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர் மற்றும் அன்மையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட புதிய அம்பியுலன்ஸ் வண்டி என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு உருதுணையாக இருந்தார்.

மேலும், இங்கு நாளாந்தம் சுமார் 300 பேர் வெளிநோயாளர் பிரிவிலும், கிட்டத்தட்ட 1400 பேர் கிளினிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் இவ்வாறான நிலையில் தற்போது இவ்வைத்தியசாலையில் இரு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருவதாகவும் அபிவிருத்திக் குழுவினரால் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.


இவ்வைத்தியசாலையினை நாடிவரும் மக்களுக்கு இன்னும் தனது சிறப்பான சுகாதார சேவையினை வழங்குவதற்காக இங்கு காணப்படும் வைத்தியர்களின் வெற்றிட ஆளணிக்கேற்ப இரு வைத்தியர்கள் தேவைப்பாடாக உள்ளதாகவும், அத்துடன் சிற்றூழியர்கள் தேவைப்பாடுகள் பற்றியும் இன்றைய சந்திப்பில் மிக பிரதானமாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இம்முறை வழங்கப்படவுள்ள வைத்தியர்களுக்கான நியமன வெற்றிடத்தில் மீராவோடை வைத்தியசாலைக்கு இன்னுமொரு வைத்தியரை நியமிப்பதற்கான வெற்றிடம் காட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கு எவரேனும் தங்களின் பிரதேசங்களிலிருந்தோ அல்லது வேறு பிரதேசங்களிலிருந்தோ வைத்தியர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இன்னுமொரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் தேவைக்கேற்ப சிற்றூழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் தான் அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வைத்தியசாலையின்மீது இன்னுமொரு கரிசனையாளராக செயற்பட்டுவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அபிவிருத்திக் குழுவினர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான நேரத்தினையும் பெற்றுத்தந்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ததுடன், இச்சந்திப்பில் அபிவிருத்திக் குழுவினருடன் கலந்துகொண்டு இவ்வைத்தியசாலை இரு சமூகங்களும் நன்மையடையும் ஒரு வைத்தியசாலையாக அப்பிரதேசத்தில் காணப்படுவதுடன், அதற்கான ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளின் அவசியத் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எடுத்துரைத்தார்.

அது மாத்திரமல்லாமல், இவ்வைத்தியசாலையில் இன்னுமொரு வைத்தியரை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியருக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பான ஆளணி வெற்றிடம் காண்பிக்கப்படுவதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியர் அதிகாரிகள் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளையும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் முன்னெடுத்திருந்தார்.

“பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும்” சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரி. றிஸ்வி (மஜீதி)

Posted in
பிறைந்துறைச்சேனை பறக்கத் பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டு விழாவும் “மகுடம் சூட்டும் விழா” எனும் தலைப்பில் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணி தொடக்கம் பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்றது. 

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பொறுப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரி. றிஸ்வி (மஜீதி) அவர்கள் உரையாற்றுகையில் “பெற்றோர்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்குவதோடு அவர்களுக்காக இறைவனிடத்தில் துஆச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

அத்தோடு “இங்கு இருக்கின்ற பெற்றோர்கள் நல்ல சந்ததியினரை உருவாக்க வேண்டும். வெறுமனே நாம் நன்றாக வாழ்ந்துவிட்டு இந்த சமூகம் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் பரவாயில்லை என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்கியது மட்டுமல்லாது நல்ல தலைவர்களையும் எமக்கு வெளிக்காட்டினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பின் அப10பக்கர் ரழி அதற்குப் பிறகு உமர் ரழி, உதுமான் ரழி, அலி ரழி என தலைமைத்துவங்களை அடையாளப்படுத்திக் காட்டினார்கள். ஆனால் இன்றைய சமூகத்தில் எல்லாம் நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சமூகத் தலைமைகள் உருவாகும் போது அதனைத் திட்டமிட்டு அழிக்க முற்படுவதுடன் சமூகத்தில் பாரிய இடைவெளி ஏற்படுகின்ற நிலைமைகளும் ஏற்பட்டு விடுகின்றன. எனவே பிறைந்துறைச்சேனை சமூகம் நல்ல ஆளுமைகளை உருவாக்கி இருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் அதன் பிரதிபலன்களை இச்சமூகம் எதிர்காலத்தில் அடைந்து கொள்ளும்” என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார். 


மேற்படி கௌரவிப்பு நிகழ்விற்கு ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம மற்றும் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர் அவர்களும், ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவன உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான எம்.ஏ.சி. நியாஸ் (ஹாஜியார்) அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலைய உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா வாழைச்சேனை விகாராதிபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



“பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அபரிமிதமானது” – மட்டு. மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர்.

Posted in

பிறைந்துறைச்சேனை பறக்கத் பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் குறித்த பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பாராட்டு விழாவும் “மகுடம் சூட்டும் விழா” எனும் தலைப்பில் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணி தொடக்கம் பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்றது. 


மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தொழில் ஆணையாளர் ஏ. தாஹிர் அவர்கள்  “பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அபரிமிதமானது” என்று தனது உரையில் தெரிவித்தார். 

மேலும் அவர் உரையாற்றுகையில் “இங்கு நான்கு வகையான தரப்பினர் வருகை தந்திருக்கின்றோம். 1. தந்தைமார்கள் 2. தாய்மார்கள் 3. இந்த நிகழ்வின் கதாநாயகர்களும் இப்பிரதேசத்தின் முத்துக்களுமான பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்மைக்காக கௌரவிக்கப்படவிருப்பவர்கள் 4. மேடையில் வீற்றிருக்கும் அதிதிகள். மேற்குறிப்பிடப்பட்ட நான்கு தரப்பினரும் தத்தமது கடமைகளை அல்லாஹ்வுக்குப் பயந்து சரியான சமூகக் கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்போமாக இருந்தால் இன்றைய சமூகப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்” என்றும் தெரிவித்தார். 

மேற்படி கௌரவிப்பு நிகழ்விற்கு ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழத்தின் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான பொறுப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ரி. றிஸ்வி (மஜீதி) அவர்களும்,  ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவன உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான எம்.ஏ.சி. நியாஸ் (ஹாஜியார்) அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலைய உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா வாழைச்சேனை விகாராதிபதி அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 






மார்க்கத்தை கொச்சைப்படுத்தி வைத்தியத்துறையை கேவலப்படுத்தும் நுஸ்ரான் பின்னூரியின் வாழைச்சேனைக்கான வருகையைப் புறக்கணிப்போம்

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-

தூய்மையான இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சித்து பல கருத்துக்களை அண்மைக்காலமாகத் தெரிவித்து வருவதுடன், நவீன வைத்தியத்துறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் “சத்திர சிகிச்சை ஹராம், தடுப்பூசி யூத சதி” எனும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப்பரப்பி வரும் நுஸ்ரான் பின்னூரி வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயலில் நாளை 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கம் நிகழ்த்துவதற்காக வருகை தரவுள்ளதாகவும், மீராவோடை போன்ற பிரதேசங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூய இஸ்லாமிய மார்க்கத்தையும் வைத்தியத்துறையையும் கொச்சப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் இப்பிரதேச மக்களையும் பிழையான வழிகளுக்கு திசை திருப்ப வாய்ப்புள்ளது.

இவரின் பொய்யான வைத்தியத்தை நம்பி ஏமாந்த பலர் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளதுடன், இவரால் வெறும் ஆறே நாட்களில் உருவாக்கப்பட்ட போலி வைத்தியர்களும் நாட்டின் பல பகுதிகளிலும் அப்பாவி மக்களை எமாற்றி பிழைப்பு நடாத்தும் கைங்கரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் எமது பிரதேச மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதைத் தடுக்கும் நோக்கில் இவரது வருகை தடை செய்வதுடன், இதன் ஏற்பாட்டாளர்கள் சமூக ரீதியாக இவர் மீதுள்ள விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கவனத்திற்கொண்டு குறித்த நிகழ்வுகளை இரத்துச் செய்து சமூக நன்மைக்கு வழிவகுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம். 

இது விடயத்தில் கல்குடா உலமா சபை மற்றும் சமூக அமைப்புக்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும். இவர் வைத்தியத்துறை தொடர்பில் பிழையான தகவல்களைப் பகிர்ந்து வருவதுடன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியர்களை நாட வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தையும் முன் வைத்து சமூகத்தை பிழையாக வழி நடாத்த முயலும் ஒருவர் என்பதுடன், தன் வாழ்வில் இவைகளை எடுத்து நடக்க முடியாமல் தனது மனைவியின் பிரவசத்திற்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தமையும் வெளிச்சத்திற்கு வந்து மூக்குடைந்து போனமையும் குறிப்பிடத்தக்கது. கல்வி ரீதியான இவரின் கருத்துக்களும் கண்டனத்துக்குள்ளானது. தன் கருத்துக்களை தன் வாழ்வில் எடுத்து நடக்க முடியாத ஒருவர் சமூகத்தை பிழையான வழியில் நடாத்த நாம் எவரும் அனுமதிக்க முடியாது. இந்த வகையில் இவ்வாறான போலி மார்க்கவாதிகளை நாம் புறக்க வேண்டியது அவசியமாகின்றது. ஆகவே, கல்குடா உலமா சபையினரே, சமூக மட்ட அமைப்புக்களே, பள்ளிவாயல் நிருவாக சபையினரே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே சிந்தித்துச் செயற்படுங்கள்.

மீண்டும் முருங்கை ஏறும் இனவாத வேதாளம் : முஸ்லிம்களின் வருமானத்தில் மூட்டப்படும் இனவாதத் தீ

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி -

நாட்டில் ஒரு பக்கம் அரசியல் அரசியலைப்பு மாற்றம் தொடர்பான தீவிர முன்னெடுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, அதில் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன? என்ற ஒரு அங்கலாய்ப்பு ஒரு பக்கம். ஒன்றுபட்ட ஒரே தேசத்தில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க தமிழ் தரப்பினர் ஒன்றுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, முஸ்லிம்களைத்திசை திருப்பும் செயற்பாடுகள் இனவாதம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழாமலில்லை. இதன் தொடரில் கிழக்கில் இடம்பெற்று வரும் அண்மைக்கால சம்பவங்கள், அதன் பின்னணிகள் ஆபத்தான கட்டங்களை நோக்கி முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் செல்வதாக அமைகிறது. கிழக்கில் நியமிக்கப்பட்ட தமிழ் பேசும் ஆளுநருக்கெதிராக இனவாதம் சாயம் பூசி தீவிரத அமைப்புகளும் கடந்த காலத்தில் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறிக்கொள்வோரும் தமது தொடர் இனவாதக்கருத்துக்களை அள்ளி வீசி வரும் அதே வேளை, கடந்த காலங்களில் இனவாதம் பேசிய மக்கள் பிரதிநிதிகளின் முஸ்லிம்கள் மீதான அக்கறையும் ஆரோக்கியமானதல்லை. 

முஸ்லிம்களுக்கெதிரான மறைமுக சதியொன்று பின்னப்படுகிறதா? அதன் பின்னணியில் இவ்வாறான இனவாத அமைப்புக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனவா? என்ற அச்சமும் இல்லாமலுமில்லை. இவைகளுக்கு மத்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் உறக்க நிலை சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. 

இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னாலுள்ள மர்மங்கள் என்ன? இந்த இனவாதப் பின்னணியில் ஆளுனருக்கெதிராக கடந்த 11.01.2019ம் திகதி முடிக்கி விடப்பட்ட ஹர்த்தால் தமிழர் தரப்பினராலே புறக்கணிக்கப்பட்ட நிலையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாய் தமது தோல்விகளை மறைக்க மீண்டும் எதிர்வரும் 25.01.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய முடக்கப் போராட்டத்திற்கு இனவாத அழைப்பு ஒன்றால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தலைமையில் இயங்கும் இவ்வினவாத அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதே முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் நோக்கிலே என்பது மறுப்பதற்கில்லை. இதன் உரிமையாளர் நாடத்துகின்ற சினிமா திரையரங்கு மூலம் கிடக்கின்ற வருமானத்தில் இயங்கும் குறித்த அமைப்பு மிக மோசமாக முஸ்லிம் எதிர்ப்பை ஆரம்பம் முதல் இன்று முன்னெடுத்து வருகின்றது. 

இத்திரையரங்கு இங்கே திரையிடப்படும் தமிழக சினிமா படங்களை காண வரும் பெயர் தாங்கி முஸ்லிம்கள் மூலம் கிடைக்கும் மேலதிக வருமானத்தில் இயங்கி வருவதும் மறுப்பதற்கில்லை. என்ன தான் நாம் இந்த இனவாதியான துறையரங்கு உரிமையாளரால் நசுக்கப்பட்டாலும், நமக்கெதிரான இனவாதப் பிரசாரத்திற்கு நாமே மறைமுகமாக உதவி வருகின்றோம் என்பது கசப்பான உண்மையாகும். எம்மூலம் கிடக்கும் வருமானத்தைக் கொண்டே இதன் உரிமையாளர் முஸ்லிம் எதிர்ப்பை தனது அமைப்பு மூலம் மேற்கொண்டு வருகிறார் என்பதை நாம் உணராமலில்லை. எமக்கெதிராக இனவாதத்தீ மூட்ட நாமே விறகு கொடுக்கிறோம். எம்மவர்கள் அங்கு செல்லாவிட்டால் வருமான இழைப்பை சந்திக்க நிறையவே வாய்ப்புள்ளது. ஆளுனரைத் தான் எதிர்க்கின்றோம் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளால் அமைதியை விரும்பும் இரு இனங்களும் பாதிக்கப்படும் நிலையும் இனநல்லுறவு வளர்க்கப்பட்டு வரும் சூழலில் இன முறுகலைத் தோற்றுவித்து இலாபமடைந்து கொள்ள எத்தனிக்கும் செயற்பாடாக இதனை நாம் நோக்க வேண்டியுள்ளது, இவ்வாறான தொடர் ஹர்த்தாலுக்குப் பின்னால் பாரிய சதிகள் பின்னப்பட்டு வருகிறதா? என்ற அச்சமுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கவனத்தை திசை திருப்பி வரலாற்றுத் துரோகமொன்று இடம்பெற்று விடுமோ என்ற சந்தேகம் எழாமளுமில்லை. 

இவ்வாறான குழப்பங்களை உண்டு பண்ணி தீர்வு யோசனைகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை திசை திருப்பும் முயற்சியாக இதனை எண்ணத்தோன்றுகிறது. இந்த அத்தனை இனவாத முன்னெடுப்புக்களின் பின்னாலும் யார் உள்ளார்கள் என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, எந்தவொரு இனமாக இருந்தாலும் ஒரு இனத்திற்கெதிரான இனவாதத்திற்கு மற்றொரு இனம் துணை போய் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் இழைத்து விடக்கூடாதென்பதே எமது வேண்டுகோள். அதே நேரம் மாவட்டம் தழுவிய முடக்கத்தினால் இரு சமூகங்களுமே பொருளாதார இழைப்பைச் சந்திக்கப் போகின்றது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் வர்த்தகர்கள் வழமையாக வெள்ளிக்கிழமைகளில் வர்த்தங்க நிலையங்களை மூடுவதால் முழுவதுமாக பாதிக்கப்பட போவது தமிழ் சகோதரர்களே என்பது நிதர்சனமான உண்மை. இந்த இழப்பை இந்த முடக்கப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த எந்தவொரு நபராலும் ஈடு செய்து கொடுக்க முடியுமா என்றால், அது நடக்க வாய்ப்பே இல்லை. அன்றைய தினம் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதால் உங்கள் பொருளாதரத்தை இழக்கப்படுதைத்தவிர வேறு எதையும் இதன் ஏற்பாட்டாளர்கள் சாதித்து விடப்போவதில்லை என்பதை உணர்ந்து முடக்கப்போராட்டத்தை முறியடிக்க தமிழ் சகோதரர்கள் முன் வர வேண்டும்.

யாழிலிருந்து கிளம்பும் ஹபாயாவுக்கெதிரான இனவாதம்

Posted in
-எம்.ஐ.லெப்பைத்தம்பி-
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராகவும் அவர்களது ஆடைக்கலாசாரத்துக்கெதிராகவும் விஷமத்தனமான பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், மீண்டுமொரு இனவாதி யாழிலிருந்து அபாயாவுக்கெதிராக வெளிக்கிழம்பியுள்ளமை கவலையளிக்கின்றது. திருகோணமலை ஷண்முகா இந்துக்கால்லூரி ஹபாயா விவகாரம் தீர்வின்றித்தொடரும் நிலையில், தமது ஆடை கலாசாரத்தைப் பேணவும் நாட்டின் சட்டம் தமக்கு வழங்கியுள்ள உரிமையைப்பேணி நடக்கவும் முஸ்லிம் ஆசிரியைகள் போராடிக் கொண்டிருக்கையில், அவர்கள் தூர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு செயற்பாடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளமை கிழக்கில் முஸ்லிம்கள் தமது மத, கலாசார உரிமையைப்பேணி நடப்பதில் கேள்வி நிலை தோன்றியுள்ளமை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

இவ்வாறு கிழக்கின் நிலை என்றால், வடக்கிலும் இதன் பின்னணியின் பிரச்சினையை உண்டு பண்ணி ஹபாயாவுக்கெதிரான நச்சுக்கருத்துகளை விதைக்கும் முயற்சிகள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துள்ளமை அபாயகரமான ஒரு சூழலாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் யாழ்.இந்துக்கல்லூரில் இடம்பெற்ற கால்கோள் விழா நிகழ்வுக்குச்சென்று வந்த முஸ்லிம் சகோதரி ஒருவரின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ஹபாயாவுக்கெதிரான நச்சுக்கருத்துக்களைப் பதிவிட்டுள்ளமை வடக்கிலும் வளர்ந்து வரும் தமிழ்-முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதாகவே தோன்றுகிறது. குறித்த நபர் இட்டுள்ள அப்பதிவில், ஹாபாயாவை இலக்கு வைத்து சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பதிவிட்டுள்ளதுடன், இன உறவுக்கு வேட்டு வைத்து, வளர்ந்து வரும் தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் முயற்சியை மேற்கொள்ள எத்தனிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. 

யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு சுமூக நிலை வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இந்துக்கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்களும் கல்வி பயிலலாம். ஆசிரிய, ஆசிரியைகள் தங்களது ஆடைக்கலாசாரத்தைப் பேணி கற்பித்தலில் ஈடுபடலாம் என்ற நிலை உருவாகியுள்ளதுடன், இன நல்லுறவு வலுப்பெற்று வரும் சூழலைத்தாங்கிக் கொள்ள முடியாத இவ்வாறான விசமிகள் இனக்குரோதங்களை உண்டு பண்ணி எப்போது இனங்களைப் பிரித்தாளும் தந்திரங்களையே மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரம், முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்கும் எந்த இந்து மாணவர்களுக்கோ, கற்பிக்கும் எந்தவொரு ஆசிரிய, ஆசிரியைகளுக்கு எதிராகவோ இவ்வாறான எந்தச்செயற்பாடும் இடம்பெறவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது கடந்த காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இனவாதம் வெற்றியளிக்காத நிலையில், இப்போது இஸ்லாமியர்களின் கலாசார, வணக்க வழிபாடுகளில் கை வைக்கும் கைங்கரியத்தை கன கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு துருப்புச்சீட்டாக இவரைப்போன்ற சிலர் பயன்படுத்தப்படுகிறார்கள். சில அற்ப சொற்ப இலாபங்களை இலக்காகக்கொண்டு செயற்படும் குழுவினர் இதன் பின்னணியில் செயற்பட்டு வருகின்றனர் என்பதை அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். 

இந்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் தத்தமது மத, ஆடை கலாசாரங்களைப் பேணி நடக்க நாட்டின் சட்டம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இவ் வாறானவர்களின் செயற்பாடுகளினால் அந்த உரிமை கொச்சைப்படுத்தப்படுவதற்கு சட்டமும் நீதியும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறான விசக்கிருமிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். குறித்த நபர் இட்டுள்ள பதிவின் கீழ் நல்லுறவை விரும்பும் இந்து சகோதரர்கள் நியாயமான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். 

குறிப்பாக, பாடசாலை செல்லும் மாணவர்கள் சீருடை அணிய வேண்டியது அவசியம். அதே நேரம், மாணவனின் தாயும் பாடசாலை சீருடை அணிந்து தானா பாடசாலைக்கு வர வேண்டும்? எனத்தொடுத்துள்ள கேள்வி சிந்திக்க வேண்டியதே. இன நல்லுறவை விரும்பும் அவ்வாறானவர்களின் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறான இனவாத சதிகளுக்குள் ஏனைய இந்து சகோதரர்களும் சிக்கிக்கொள்ளாமல் தவிர்ந்து கொள்வதோடு, இன நல்லுறவை வளர்க்க முன்வர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக நீட்டப்பட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டாலும் நிருவாக, மத, கலாசார ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியின் பயனாக சுகாதார இராஜாங்க அமைச்சரினால் மீராவோடை வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி கையளிப்பு

Posted in
-M.T. Haither Ali-

சுகாதார அமைச்சினால் புதிய நோயாளர் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) வழங்கும் செயற்திட்டத்திற்குள் மீராவோடை பிரதேச வைத்தியசாலையையும் உள்வாங்கி புதிய அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றினை பெற்றுத்தருமாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம் அவர்களிடம் மீராவோடை வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

இதன் பிரகாரம் அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியினால் சுகாதார அமைச்சின் குறித்த செயற்திட்டத்திற்குள் மீராவோடை பிரதேச வைத்தியசாலை உள்வாங்கப்பட்டு இன்று (19) பிற்பகல் 4 மணிக்கு நிந்தவூரில் வைத்து சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களினால் அபிவிருத்திக் குழு மற்றும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாக புதிய அம்பியுலன்ஸ் வண்டி கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் கலந்துகொண்டார்.


வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினர் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களை 2017.07.23ஆம் திகதி நிந்தவூர் காரியாலயத்தில் சந்தித்து வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடியபோது இவற்றினை கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் அன்றைய தினமே இவ்வைத்தியசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளை நேரடியாக கண்டறிந்து கொண்டார்.

அச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கு வழங்கிய சில வாக்குறுதிகளுக்கமைவாக இன்று இவ்வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளது. 

இச்சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் தேவைப்பாடுகளில் ஒன்றினை நிவர்த்தி செய்து தந்தமைக்காக அபிவிருத்திக் குழுவினரால் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நேற்றைய நிகழ்வில் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


இச்சந்தர்ப்பத்தில் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளில் கவனம் செலுத்தி, புதிய அம்பியுலன்ஸ் வண்டி கிடைக்கப் பெறுவதற்கு உதவியாக இருந்த சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சரின் ஊடகச் செயலாளர் எச்.எம். கபீர் மற்றும் இணைப்புச் செயலாளர் உமர் அலி மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் இச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் என்பன நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

வைத்திய பொறுப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையிலுள்ள வைத்தியசாலை அபிவிருத்தி குழு இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பெரிதும் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் இயங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.






திருகோணமலை காணி பிரச்சினைகள், தனியான கல்வி வலயம் தொடர்பான ஆவணங்கள் அன்வரினால் கிழக்கு ஆளுனரிடம் கையளிப்பு

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இராஜாங்க சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஆர்.எம்.அன்வர் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை இன்று (17) ஆளுனர் செயலகத்தில் சந்தித்தார். 

இச்சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான தெளிவான விளக்கத்தை கூறியதுடன், புல்மோட்டை காணி மற்றும் திருகோணமலை மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பாக உள்ளடங்கிய ஆவணங்கள் மற்றும் குச்சவெளி பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பான கடிதமொன்றினையும் ஆளுனரிடம் அன்வர் கையளித்தார்.

மேலும் ஆளுனர் எதிர்வரும் ஒருசில தினங்களில் முப்படைகளின் தளபதி கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள், காணி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் மூன்று மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரும் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழை தான் அனுப்பி வைப்பதாகவும் கிழக்கிலுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பாக தான் கூடிய கவனம் செலுத்தி தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளுனர் வாக்குறுதி அளித்தார்.

தான் இன, மத, மொழி பேதத்திற்கு அப்பால் அணைத்து இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க தாம் உறுதி பூண்டுள்ளதாக ஆளுனர் கூறியதாக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்கள் DTSCஇனால் கௌரவிக்கப்பட்டார்

Posted in
கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களுக்கான விஷேட கௌரவிப்பு நிகழ்வும் இராசப் போசன விருந்துபசாரமும் நேற்று முன்தினம் 15.01.2019ம் இரவு டோன்ட் டச் விளையாட்டுக் கழகத்தினால் சகோதரர் தாஹிர் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் கழகத்தின் அழைப்பை ஏற்று ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரி. அமீஸ்டீன் அவர்களும், சட்டத்தரணி எம்.எம்.எம். ராசீக் அவர்களும், வைத்தியர் ஏ.ஏ. அல்தாப் அவர்களும், ஹக்கீம் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது அமைச்சர் அமீர் அலி அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு இடம்பெற்றதோடு அவரது எதிர்கால சேவைக்கும் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் நிகழ்வு முற்றுப் பெற்றது. 

Info & Pics: DTSC-Kalkudah




கல்குடா செலஞ்சர்ஸ்ஸினால் பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Posted in
செம்மண்ணோடை அல்-மினா பாலர் பாடசாலைக்கு அத்தியவசியத் தேவையாக இருந்து வந்த கற்றல் உபகரணங்கள் கல்குடா செலஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நேற்று 16.01.2019ம் திகதி புதன்கிழமை காலை அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்குடா செலஞ்சர்ஸ் அணியின் உப தலைவர் எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் சென்ற குழுவினரினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருட்களை அல்-மினா பாலர் பாடசாலை ஆசிரியைகள்ää நிருவாகத்தினரும் கையேற்றிருந்தனர். 

விளையாட்டு நிகழ்வுகளுக்கு அப்பால் சமூக சேவை விடயங்களில் சாதித்து வரும் கல்குடா செலஞ்சர்ஸ் அணியினர் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். 

சென்னை புத்தகத் திருவிழாவில் நம்நாட்டவர்கள் - ஒரே மேடையில் 42 நூல்களின் முதற் பிரதிகளையும் பெற்றுக் கொண்டார் புரவலர் ஹாசிம் உமர்

Posted in
-எம்.ரீ. ஹைதர் அலி-

42 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் மணிமேகலைப் பிரசுரத்தின் 42 நூல்களின் வெளியீட்டு விழா மிகக்கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் எங்களூர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார். ஒரே மேடையில் ஒரே தடவையில் 42 நூல்களின் முதற் பிரதிகளையும் அவர் பெற்றுக் கொண்டார். 

தலைமை வகித்த நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தளபதி ராம்குமார். மணிமேகலைப் பிரசுரத்தின் தலைவர் லேனா.தமிழ்வாணன் ஆகியோர் இணைந்து புரவலருக்கு நூல்களை வழங்கினர்.

திரைப்பட நடிகை கஸ்தூரி சிறப்பு அதிதியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன், நடிகர்களான தியாகராஜன், டெல்லி கணேஷ், நடிகை ரேகா, இயக்குநர் தம்பி ராமையா ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கலைஞர் கலைச் செல்வன், ஊடகவியலாளர் தௌபீக் கனி, சமூக சேவகர் இம்ரான் நெய்னார் ஆகியோரும் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். 

முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றினர். ரவி தமிழ் வாணனின் நெறிப்படுத்தலில திருமதி ஜெயசிறி சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். பெருந்திரளான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை இங்கே காணலாம்.






இனவாதி அரவிந்தனுக்கெதிராக வாழைச்சேனைப்பொலிஸில் முறைப்பாடு : சமூக நன்மைகருதி செம்மண்ணோடை இளைஞனின் முன்மாதிரி

Posted in
எம்.ஐ,லெப்பைத்தம்பி

தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் வகையிலும் முஸ்லிம்களையும் இஸ்லாம் மார்க்கத்தையும் கேவலமான முறையில் இனவாதக்குரோதத்துடன் பேசி வரும் இல.71/1 3ம் கட்டை, மன்னார் வீதி, நெளுக்குளம், வவுனியா என்ற முகவரியைச்சேர்ந்த பொன்னுத்துரை அரவிந்தனுக்கெதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி செம்மண்ணோடை தக்வா பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த முஹம்மது சலீம் என்பவரால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று 15.01.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இனவாதம் பேசும் குறித்த நபருக்கெதிராக சமூகத்தின் நன்மைகருதி தைரியமாக முறைப்பாட்டை மேற்கொண்ட முஹம்மது சலீமுக்கு வாழ்த்துக்கள். கடந்த வாரங்களில் ஒரு சிலரால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பொன்னுத்துரை அரவிந்தன் சமூக வலைத்தளங்களில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வீடியோக்காணொளி மூலம் விஷமத்தனமான கருத்துக்களைப்பதிவு செய்து வருவதுடன், முஸ்லிம்களில் யாராவது என் மீது சட்டநடவடிக்கையெடுக்க முடியுமா? என்ற தோரணையில் சவால் விட்டும் வருகிறார். இனவாதம் பேசி வரும் இவரை உடனடியாகக்கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக்கோரியே சட்டத்தரணி ஷாரூக் அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில் மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் முஹம்மது சலீம் கருத்துத்தெரிவிக்கையில், கடந்த காலங்களிலும் இனவாதம் பேசி தமிழ், முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட இன்பராசா போன்ற இனவாதிகளுக்கெதிராக என்னால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு பொலிஸார் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுடன், இதனையும் அவ்வாறு அலட்சியம் செய்யாது கவனத்திற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். மேற்படி என்னால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு உடனடியாக அறிவித்து, அவரைக் கைது செய்து இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக வாழைச்சேனைப் பொலிஸார் வாக்குறுதியளித்துள்ளனர். நாம் நாட்டின் சட்டத்தையும், பொலிசாரையும் மதிக்கிறோம். அவர்கள் இவ்வாறான இனவாதிகளுக்கெதிராக சரியான நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அத்துடன், தனிப்பட்ட ஒரு அரவிந்தன் மேற்கொண்டு வரும் இனவாத நடவடிக்கைக்கெதிராக நாமும் முழு இந்து மத சகோதரர்களையும் அவர்களது மதத்தையும் அநாகரிகமான முறையில் விமர்சிப்பதை கைவிட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளைச்செய்ய சகல சமூக மட்ட அமைப்புக்களும் குறிப்பாக இளைஞர்களும் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். 

இதன் பிரதிகள் பொலிஸ் மாஅதிபர், பொலிஸ் புலனாய்வுப் பிரிவு, மட்டு.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இனவாதத்துக்குத் துணை போகும் தனியார் தமிழ் ஊடகத்தைப் புறக்கணிப்போம்

Posted in
எம்.ஐ.லெப்பைத்தம்பி
இலங்கையின் முதலாவது தனியார் தமிழ் ஊடகமாக தமிழ் பேசும் மக்களின் குரலாக தன்னை முன்னிலைப்படுத்தி வரும் ஊடகம் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தைத் தூண்டுவதிலும் அதற்குத்துணை போவதிலும் முன்னிலை வகித்து வருகின்றது. சமாதானம், சகவாழ்வு, இனவொற்றுமையை விரும்பும் அனைவரும் குறித்த ஊடகத்தைப் புறக்கணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயாமாகின்றது. 

இலங்கையில் திகன மற்றும் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற இனவாதச்செயற்பாடுகள் சொத்தழிப்புக்கள், தாக்குதல்களை மூடி மறைத்ததுடன், அது தொடர்பிலான செய்திகள், தகவல்கள் இருட்டிப்புச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், கிழக்கில் இரு இனங்களுக்கிடையிலும் இன முரண்பாட்டத்தைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு துணை போனதுடன், ஆளுநர் நியமனத்தை எதிர்த்து ஹர்த்தால் என்ற பெயரில் ஒரு சிலரால் விடுக்கப்பட்ட அழைப்பை பெரிது படுத்திக்காட்டி ஹர்த்தால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகக் கூக்குரலிட்டதுடன், ஹர்த்தாலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முறியடிக்கும் நோக்கிலும் தமிழ் உறவுகளின் தைப்பொங்கலைக் கருத்திற்கொண்டும் முஸ்லிம் பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தமை மூடி மறைத்ததுடன், வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் தொழுகைக்காக கடைகள் மூடப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு என்ற செய்தியையும் வெளியிட்டு தமது இனக்குரோதத்தை குறித்த ஊடகம் வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு இலங்கை முழுவதும் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுக்கெதிராகவும் செயற்படும் குறித்த ஊடகத்தை முற்றாகப் புறக்கணித்து தமது எதிர்ப்பை சகல தரப்பினரும் வெளிக்காட்ட வேண்டும். அதிகப்படியான தமிழ் பேசும் முஸ்லிம் நேயர்களைக் கொண்டியங்குவதுடன், முஸ்லிம் வர்த்தகர்களின் அதிகப்படியான விளம்பரங்களைப் பெற்று பெரும் வருமானம் ஈட்டி வரும் குறித்த ஊடகத்தை புறக்கணிப்பதுடன், அதன் வளர்ச்சிக்கு துணை போவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த வாரம் ஒரு அரச அதிகாரியால் நிவாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட செய்தியை முற்றாக தவிர்ந்ததுடன், அதே நேரத்தில் ஒரு மாற்று இனத்தைச் சேர்ந்த ஒருவராக குறித்த முஸ்லிம் நபர் இருந்திருந்தால், பல முறை பிரேக்கிங் நியூஸ் போட்டு முஸ்லிம் பயங்கரவாதமாக முத்திரை குத்தி இருக்கும். பாதிக்கப்பட்டவர் ஒரு முஸ்லிம் நபர் என்பதாலும், அந்த மனித்தன்மையற்று நடந்து கொண்டவர் இந்து என்பதாலும் முற்றாக மூடி மறைக்கும் வழமையான செயற்பாட்டை கடைப்பிடித்தது குறித்த ஊடகம். 

இனவாதத்திற்கு துணை போகும் குறித்த ஊடகம் ஒருபடி மேலே சென்று, தமது செய்தியாளர்களாகச் செயற்பட்ட முஸ்லிம் ஊடகவியாளர்கள் அதிமானோரை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தியுள்ளதுடன், அதற்கான சரியான காரணங்களை இதுவரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இதுகால வரை செயற்பட்டு வந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்குப் பதிலாக தமிழ் பேசக்கூடிய இந்து இனத்தைச்சேர்ந்த அதிலும் குறிப்பாக, இனவாதத்துக்கு துணை போகும் அல்லது இனவாதம் பேசுவோரை ஹீரோக்களாகச் சித்தரிக்கும் அவ்வாறான செய்திகளுக்கு முன்னுரிமை வழங்குவோரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த காலங்களில் பிரதேச செய்தியாளர்களாக செயற்பட்டு வந்த அனைத்து முஸ்லிம் செய்தியாளர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அனைத்து ஆதாரங்களும் எம்மிடமுள்ளன. 

இவ்வாறு இனக்குரோத மனோ நிலையில், தமிழ் பேசும் மக்களின் ஊடகம் என பெயர்போட்டுக் கொண்டு ஒரு இனத்துக்கு சார்பாக அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராகவும் இனவாதத்துக்கு ஆதரவாகவும் செயற்படும் குறித்த ஊடகத்தை மென்மேலும் வளர்க்கத்தான் வேண்டுமா? இனி மேலும் குறித்த ஊடகத்தை வளர்ப்பதில் துணை போவதையும் வர்த்தக விளம்பரங்கள் என்ற போர்வையில் எமது பொருளாதாரத்தை வழங்கி அதனை வளர்ப்பதையும் முற்றாகத்தவிர்ந்து கொள்ள வேண்டுமென்பதுடன், அதன் விளம்பரங்களை முஸ்லிம் பிரதேசங்களில் காட்சிப்படுத்துவதையோ நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குதல், இடங்களை வழங்குவதையோ நாம் தவிர்ந்து கொள்வோம். 

அத்துடன், நம் பிரதேச நிகழ்வுகளுக்கு அழைக்கின்ற போது, குறித்த ஊடகத்தின் செய்தியாளர்களைத் தவிர்ந்து கொள்வதுடன், புனித ரமழான் காலங்களில் மட்டும் இன நல்லுறவு பேசிக்கொண்டு இப்தார் ஏற்பாடு, ரமழான் நற்சிந்தனை, ஸஹர் நிகழ்ச்சி என பள்ளிவாயல்களில் பதாதைகளை தொங்க விட்டுக்கொண்டு தங்களது ஊடக விளம்பரத்துக்கு பயன்படுத்துவதை பள்ளிவாயல்கள் முற்றாகத்தடை செய்வதுடன், தவிர்ந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். குறித்த ஊடகத்தை முற்றாகப் புறக்கணிப்போம்.

வாழைச்சேனை வைத்தியசாலை விவகாரம் : கவனத்திற்கொள்ளப்படுமா?

Posted in
- எம்.ஐ.லெப்பைத்தம்பி -

பிரதேசத்தின் பிரதான வைத்தியசாலையான வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகள், தேவைகள், வைத்தியர் பற்றாக்குறை, மருந்துத்தட்டுப்பாடு, போதிய ஏனைய ஆளணி இல்லாமை, இடநெருக்கடி போன்ற பல்வேறு குறைபாடுகளுடன், பல தேவைகளை வேண்டி நிற்பதுடன், இது தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனமெடுத்து செயற்பட வேண்டு,மென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி வைத்தியசாலை குறித்தும் அதன் தேவைப்பாடுகள் குறித்தும் இங்கு கடமை புரியும் வைத்தியர்களால் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டும் கவனத்திற்கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப்படுள்ளதுடன், முக்கிய பிரிவுகளை மூட வேண்டிய நிலையும் இங்கு கடமை புரியும் வைத்தியர்கள் நேரகாலமின்றி கடமை புரிய வேண்டிய அசெளகரிய நிலையும் காணப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் வைத்தியசாலை இழுத்து மூடப்படும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சுமார் நாற்பது வைத்தியர்கள் கடமை புரிய வேண்டிய நிலையில், 17 வைத்தியர்களே கடமையில் உள்ளனர். இதன் காரணமாக, வெளிநோயாளர் பிரிவை குறிப்பிட்ட சில தினங்கள் மாத்திரம் திறக்கும் நிலையும், அதனால் வைத்தியசாலையை நாடி வரும் நோயாளர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்ளும் நிலையும் காணப்படுகின்றது. சுமார் பாரியதொரு பரப்பில் வாழும் மக்களுக்கு சேவையை வழங்க வேண்டிய நிலையில், தமது இயலாமை காரணமாக சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளிகளை மற்றும் நிலையும் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகின்றன. 

ஆகவே, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். அத்தோடு, இவ்வைத்தியசாலை தொடர்பில் இப்பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்தும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் சுகாதார இராஜாங்க அமைச்சருக்கும் பாரிய பொறுப்புள்ளதால், அதற்கான அழுத்தங்களை முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் அரசியல்வாதிகள் வழங்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, வைத்தியசாலை அபிவிருத்திக குழுபினர்களின் பங்களிப்பும் அவசியமாகின்றது சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸீம் அவர்களை அழைத்து வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க சகல தரப்பினரும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து, கல்குடாவை மையப்படுத்தியுள்ள தமிழ், முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. 

மாறாக, அதையும் தாண்டி புறக்கணிப்பும் உதாசீனமும் தொடருமாக இருந்தால், மக்கள் போராட்டங்களையாவது முன்னெடுத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது இப்பிரதேச மக்கள் உயிர் வாழ்வதற்கான போராட்டம். இவ்வைத்தியசாலையின் குறைப்பாடுகள் நீக்கப்பட்டு, கிராமமாக இயங்காத விடத்து சுமார் முப்பது கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மட்டக்களப்பு அல்லது அதனையும் தாண்டி பொலன்னறுவை வைத்தியசாலையை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவாகுமென்பதை கவனத்திற்கொள்வதுடன், அதானால் பெறுமதியான உயிர்களை இழக்கும் நிலையும், பொருளாதார, கால நேர விரயங்களும் இன்னோரன்ன அசாதாரண நிலைகளும் உருவாகுமென்பதை கவனத்திற் கொள்வோமாக.

தமிழ், முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் குணசேகரன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

Posted in
-லெப்பைத்தம்பி முஹம்மது இஸ்மாயில்-

யுத்த முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டிலும் குறிப்பாக, கிழக்கு மண்ணிலும் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள நல்லுறவைச் சீர்குலைத்து கசப்புணர்வைத் தோற்றுவித்து, இனமுறுகலை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் குணசேகரன்கள் ஒழிக்கப்பட வேண்டும். 

கிழக்கு மண் மூவின மக்களும் கலந்து வாழ்வதுடன், குறிப்பாக தமிழ், முஸ்லிம் உறவு என்பது தவிர்க்க முடியாதவொன்றாக ஒருவரில் ஒருவர் தங்கி வாழும் நிலையையுடையது. மிகத்தொன்மையானது. தமிழ், முஸ்லிம் உறவு வலுப்பெற்று நாம் செல்லாக்காசாகப் போய் விடுமோ என்ற அச்சத்திலும், எதிர்கால அரசியல் இருப்பு, சுகபோக வாழ்க்கை என்பவற்றை இலக்காகக் கொண்டு இயங்கும் ஒரு சிலரும் சிறு குழுக்களுமே இந்த இரு இனங்களையும் மோத விடும் சூழ்ச்சியை இலாவகமாக முன்னெடுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளதை அண்மையக் காலங்களில் கிழக்கு மண்ணில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் பறைசாற்றுகின்றன. 

பல்வேறு இழப்புக்கள், அர்ப்பணிப்பு, தியாகம், பழையனவற்றை மறத்தல் எனும் நிலையில் தமிழ், முஸ்லிம் உறவு புதுப்பிக்கப்பட்டு வருவதை விரும்பாத சக்திகள் இவ்வாறு களமாடி வருவதுடன், மறைமுகத் திட்டமிடலுடன் இயங்கி வருவதை நாம் கண்ணூடே கண்டு வருகின்றோம். நேரடியாக களத்தில் இறங்கி சாதிக்க முடியாது. அதனை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை இன்று அமைதியை விரும்பும் தமிழ் உறவுகளிடம் இல்லை என்பதை உணர்ந்த இவர்கள், அற்ப சொற்ப இலாபங்கள், எதிர்கால அரசியல் கனவு, குரோத உள்ளம் கொண்ட ஒரு சில சில்லறைகளை ஏவி விட்டு, பின்னாலிருந்து செயற்படுவதை நாம் சொல்லித்தான் தமிழ் சமூகம் உணர வேண்டுமென்பதில்லை. இவ்வாறாக, இனவாத செயற்பாடுகளுக்கு இனங்காணப்பட்டவர் தான் குணாசேகரன். கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரான இவர் இனவாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகி பலி கொடுக்கப்பட்டுள்ளார். மூளைச்சலவை செய்யப்பட்டு, சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட இவர், கிழக்கில் குறிப்பாக, மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன் நின்று நடாத்துவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்பதை தமிழ் சமூகமும் நன்குணர்ந்துள்ளது. 

வாழைச்சேனை முதல் மட்டக்களப்பு வரை இடம்பெறும் அனைத்து முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிரான இனவாத ஆர்ப்பாட்டங்களில் துருப்புச்சீட்டாக பயன்படுத்தபட்டு வருவதுடன், தன்னை ஒரு இனப்பற்றாளனாகக் காட்டிக்கொண்டு இரு இனங்களுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அத்துடன், தமிழ் மக்களினது விடுதலைப்புலிகள் அமைப்பினது ஆதரவைப்பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளான மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மதிப்பிற்குரிய தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவையும் கடுமையாக விமர்சித்து, தமிழ் மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயத்தையும் உண்டு பண்ணும் பணியினையும் கனகச்சிதமாக செய்து வருகிறார். இதன் பின்னணியில் யார் உள்ளார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டத் தேவையில்லை. அவர் யார் என்பதை தமிழ் சமூகம் நன்கறிந்துள்ளது. கடந்த காலங்கள் போன்று இவர்களை நம்பி பெறுமதியான தமது உயிர், உடமைகளை, தாம் பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்க இனி மேலும் தமிழ் சமூகம் தாயாரில்லை. 

சொந்த மண்ணும் சொந்த சமூகமும் புறக்கணித்து வருவதை உணர்ந்த இவர்களே, இந்த குணசேகரனுக்கு பின்னாலிருந்து ஆட்டுவித்து வருவதுடன், இனவாத பாடத்தையும் ஊட்டி வருகின்றனர். வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஆட்டோ தரிப்பிடப் பிரச்சினையில் முக்கிய பாங்காற்றிய இவர், தசாப்தங்களாக அப்பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டி ஜீவனோபாயம் நடாத்தி வந்த முஸ்லிம் சகோதரர்களை விரட்டியடிப்பதில் முன்னிலை வகித்துச்செயற்பட்டார். அதற்காக சன்மானமாக பிரதேச சபை உறப்பினர் பதவியை அடைந்து கொண்டார். அத்தோடு, தனது பணியை நிறுத்திக் கொண்டாரா? அதன் பின்னரும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஆர்பாட்டங்கள் நடாத்தியே புழைப்பு நடாத்தும் இந்த நாதாரி, அண்மையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மீது பழியைச்சுமத்தி செங்கலடியில் ஆர்ப்பாட்டமொன்றை தலைமையேற்று நடாத்தினார். 

அதே ஆர்ப்பாட்டத்தில், கடந்த காலங்களில் இனவாதம் பேசியமையால் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரும் ஓரமாய் நின்று முன முனைத்து, சரிந்து போன தனது செல்வாக்கை சரி செய்ய முயற்சித்தும் தோற்றுப்போனமை வேறு விடயம். இனவாதம் பேசுவதில் தன்னை யாரும் விஞ்சி விடக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருக்கும் குணசேகரனின் செயற்பாட்டால் குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மூக்குடைந்து போனார். அத்தோடு,மாணவி மதமாற்றம் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து முஸ்லிம் ஆசிரியர்கள் மீதும் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் பலியைச்சுமத்தி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் அதன் பின்னணியிலும் இவரின் பங்களிப்பு கனகச்சிதமாக இருந்தமை மறுப்பதற்கில்லை. 

அத்தோடு, நேற்றைய கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்தை இனவாதமாக மாற்றுவதிலும் அதற்கெதிராக ஹர்த்தால் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தீவிரமாகச் செயலாற்றிய இவர், முன் பின் தெரியாத, என்ன நடக்கிறது என்ற களநிலவரங்கள் புரியாத அப்பாவி தமிழ் மக்கள் ஒரு சிலரை ஆசை வார்த்தைகாட்டி அழைத்து வந்தது, பதாதைகளை கையில் கொடுத்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக காட்ட முனைந்து மூக்குடைந்து போனதுடன், நாங்கள் எப்போது இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்ற நல்லதொரு பாடத்தை சிந்திக்கத்தெரிந்த தமிழ் சமூகம் சொல்லாமல் சொன்னதை இந்த குணசேகரன்கள் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. ஆயுதங்களால் சாதிக்க முடியாமல் போனதை இனவாதத்தீயை மூட்டி சாதிக்கலாம் என்று எத்தணிக்காதீர்கள். 

சுய புத்தியில் சிந்திக்கும் ஆற்றலில்லாத, எந்தவொரு விடயத்தையும் இனவாத, மதவாதக்கண்ணோட்டத்தில் நோக்கும் குணசேகரன்களின் அற்ப சொற்ப சுய இலாபங்களுக்கு பலிக்கடாவாகாமல் குணசேகரன்கள் போன்ற விசக்கிருமிகளை தமிழ் சமூகம் ஒழித்துக்கட்டி இனநல்லுறவு தழைத்தோங்க முயற்சிக்க வேண்டும். உலக வரலாற்றில் ஒரு சமூகத்தைப்பலி கொடுத்து, ஒரு சமூகத்தின் முதுகிலேறி சவாரி செய்ய முற்பட்ட குணசேகரன்களுக்கு என்ன நடந்து என்பது நமக்கு பாடங்களாகவும் படிப்பினையாகவும் ஆகின்றன. அத்தோடு, இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் குணசேகரன்களை சந்தைப்படுத்தி இனவாதத்தை தூண்டி இலாபம் தேட முயலும் ஊடகங்களும் ஊடக தர்மத்தை பேணி நடப்பதுடன், தங்களில் செயற்பாட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது இன நல்லுறவுக்கு வழி செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

இனவாதத்திற்கு எதிரான அனைவரும் நாளைய ஹர்த்தாலை முறியடிக்க வேண்டும் - CASDRO தலைவர் அன்வர் நௌசாத்

Posted in

மேலும் அவர் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து குறிப்பிட்ட சில தமிழ் இனவாதக் குழுக்களினால் நாளை 11.01.2019ம் திகதி கிழக்கு மாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

இருந்தாலும் இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் நிலைப்பாடு என்று நாம் ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது. காலம் காலமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபம் காணும் ஒரு சிலரின் நடவடிக்கைகளின் பின்னணியே இதுவாகும். இதனால் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவித் தமிழ் மக்களே ஆகும். 

இனவாத செயற்பாடுகளினால் 30 வருடகால யுத்த இழப்புக்களைப் பாரியளவில் சந்தித்த உண்மையான தமிழ் சமூகம் ஒருபோதும் இன்னொரு சிறுபான்மை மீது திட்டமிட்ட அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட முனையாது. இது கடந்த காலங்களில் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக ஒன்றாக வாழும் சகோதர இனத்தின் மீதான இனவாத செயற்பாடுகளைத் திணிக்கின்ற ஒரு சிலரின் முயற்சியேயன்றி வேறொன்றுமில்லை.

தமிழ் தரப்பின் அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும் முஸ்லிம் தரப்பு ஆதரவளித்து வந்துள்ளதுடன் பக்கபலமாக நின்றுள்ளதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இந்த இனவாத செயற்பாட்டை வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு செயற்படும் கடைநிலையிலுள்ளவர்களே முன்னெடுக்கின்றார்கள் என்பது நாம்அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக இருக்கும்போது மௌனித்திருந்தவர்கள் ஒன்றாக வாழும் சகோதர இனத்திலிருந்து அதுவும் நமது கிழக்கு மண்ணிலிருந்து பரிச்சயமான ஒருவர் ஆளுனராக நியமிக்கப்படும்போது அதனை வாய்ப்பாகக் கருதி இழந்த உரிமைகளை மீளப் பெருவதற்கான சந்தர்ப்பமாகப் பார்க்காது எதிர்த்து நின்று இனவாத செயற்பாடுகளை மேற்கொள்வது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். 

அத்தோடு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒரு பொறுப்புள்ள உயர் நிருவாகப் பதவியான ஆளுனர் எனும் இடத்திற்கு இந்த மாகாணத்திலுள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவாகச் சேவையாற்ற பதவியமர்த்தப்பட்டுள்ள ஒரு உயர் அரசாங்க அதிகாரியே தவிர குறிப்பிட்ட ஒரு குழுவிற்கோ ஒரு இனத்திற்கோ மட்டும் சேவையாற்ற பதவியிலமர்த்தப்பட்டவர் அல்ல என்பதனையும் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே உண்மையான நிலைப்பாட்டை அனைத்து இன மக்களும் தெளிவாகப் புரிந்து ஒற்றுமையுடன் வாழ முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

ANWAR NAWSHARD
President
CASDRO  

இன ரீதியான முன்னெடுப்புக்களின்போது கூட்டமைப்பின் மௌனம் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

Posted in
எம்.ரீ. ஹைதர் அலி

கூட்டமைப்பின் மௌனம் யுத்த காலத்தின்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மௌனம் சாதித்ததை நினைவு கூறுகின்றது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்.

இனரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு சில இனவாதிகள் முன்னெடுக்கும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பது கடந்த யுத்த காலத்தின்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மௌனம் சாதித்ததை நினைவு கூறுகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் தொடர்ந்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு ஆளுனர் விவகாரத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்), தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்னாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனரீதியான கருத்துக்களை வெளியிடும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயா மௌனம் காப்பது அவருடைய அரசியல் முதிர்ச்சிக்கும் அவருடை எதார்தம் அறிந்த அனுபவத்திற்கும் உவப்பானதல்ல என்பது என்னுடைய அவதானமாகும். 

எது எப்படி ஆயினும் ஆளுனர் பதவி என்பது ஜனாதிபதி தனக்கு விஸ்வாசம் எனக்கருதும் ஒருவருக்கு தனக்குள்ள அரசியலமைப்பினூடான அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் செய்கின்ற ஓர் நிர்வாக பதவி என்பதை சட்ட வல்லுனரான சம்பந்தன் அய்யாவுக்கு நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

கடந்த காலங்களில் இராணுவ உயர் அதிகாரத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நாட்டின் பொதுச் சொத்துக்களை அமைச்சரவையில் இருந்துகொண்டு துஷ்பிரயோகம் செய்த பெரும்பாண்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களை ஆளுனர்களாக நியமித்தது மாத்திரமல்லாது நியாயமாக கிழக்கில் பெரும்பாண்மையாக வாழும் சிறுபாண்மையினருக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் ஆளுனர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவைகள் தடுக்கப்பட்டது என்ற பட்டியலை நான் மீழ் பதிவு செய்ய வேண்டியதில்லை. 

இருப்பினும் கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை, மேய்ச்சல்தரை சம்பந்தமான பிரச்சினை, பெரும் பாண்மை சமூக்கத்தினர் அத்துமீறி மாகாண எல்லையைத்தாண்டி காடழிப்பு செய்து குடியேற முற்பட்டபோது அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்காமலும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக காணிகளுக்குள் குடியேற முற்பட்டபோது அதனை வனப்பாதுகாப்பு என்ற பெயரில் முற்றாக தடுத்த விடயங்களையும், திட்டமிட்ட அடிப்படையில் பெரும்பாண்மையினரை மாகாண இனவிகிதாசாரத்தில் அதிகரித்துக் கொள்வதற்காக ஆளுனர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி செய்த குடியேற்றங்களையும், திறமைக்கு இடமில்லை விகிதாசார சமப்படுத்தல் என்ற பெயரில் எமது இரண்டு சமூகத்து இளஞர், யுவதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை பிற மாகாண பெரும்பாண்மை இளைஞர்களுக்கு பகிர்ந்தளித்ததையும் என்று இங்கு குறிப்பிடப்படாத எத்தனையோ விடயங்களை சுட்டிக்காட்ட முடியும்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடந்த கால அனுபவத்தினூடாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீதான நம்பிக்கையினை இழந்த நிலையில்தான் புதிய அரசியல் அமைப்பைபற்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த அரசியல் அமைப்புக்கு ராஜபக்சைக்களும் பேரினவாதிகளும் எதிர்த்து விசமப்பிரச்சாரம் செய்துவரும் இச்சூழலில் முஸ்லிம்களின் ஆதரவினை இராஜதந்திர முறையிலும் பல விட்டுக் கொடுப்புக்களையும் முஸ்லிம்களின் சார்பில் செய்வதனூடாக முஸ்லிம்களை இணைத்துக்கொண்டு ஓர் தீர்வினை இரண்டு சமூகங்களும் பயன்பெறக்கூடிய வகையில் காய் நகர்த்த வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கெதிராக இனவாதக் கருத்துக்களை தமது கட்சி சார்ந்தவர்களும் தமது ஆதரவாளர்களும் வெளிப்படுத்தும்போது மௌனம் காப்பது பெரும் வியப்பாக உள்ளது.

பிரபாகரனின் போராட்டம் அது நியாயமானது என்று கண்ட எத்தனையோ 1000 முஸ்லிம்களில் 800 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர் யுவதிகள் அவர் அனியில் நின்று போராடி உயிர் நீர்த்திருக்கிறார்கள். பிரபாகரனின் துப்பாக்கி என்று முஸ்லிம்களை நோக்கிய பக்கம் திரும்பியதோ அன்றுடன் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரியனார்கள் போராட்டத்தில் நேரடியாக கலந்தகொண்ட காலத்தில் இழக்காத பெறுமதியைவிட அதிகமான உயிர்களையும் உடைமைகளையும் முஸ்லிம்கள் இழந்து இறுதியில் ஈழப்போர் தோற்றுப்போனது.

இன்று சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும்போதே பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோகிறார்கள் என்ற ஓர் நிலைமை கடந்த அரசியல் நெருக்கடி காலத்தில் தோண்றியிருந்தது. சம்பந்தன் அவர்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமைப் பதவிக்குள்ளும், இப்போதிருக்கின்ற அரசியல் சூழலுக்குள்ளும் ஓர் தீர்வு வரவில்லை என்றால் தீர்வுத்திட்டம் என்பது தமிழ் பேசும் சிறுபாண்மையினருக்கான ஓர் எட்டாக்கனியாகிவிடும்.

ஆக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் ஏனைய அரசியல்வாதிகளைப் போன்று அரசியல் இலாபத்திற்காக இன நல்லுறவை சீர் குலைத்து இனவாதத்தினூடாக பாராளுமன்றம் செல்ல ஆசைப்பட்டவர் அல்ல என்பதை கடந்த கால செயற்பாடுகள் சான்று பகிர்கின்றது. ஆகவே மிதவாதப்போக்குடனும், விட்டுக் கொடுப்புடனும், தம்மை சார்ந்திருக்கின்றன சமூகத்திற்கு எதார்தத்தை தெளிவுபடுத்தி அடைய வேண்டிய இலக்கை அடைய முயற்சிக்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் காலத்தின் தேவையாகும் என தனது அறிக்கையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சுட்டிக்காட்டியுள்ளார்.