Follow me on Twitter RSS FEED

50 க்கும் மேற்பட்ட ஆபாச இணையத்தள விபரங்கள் சேகரிப்பு

Posted in
ஆபாசக் காட்சிகள் அடங்கிய மேலும் 50 க்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் 15 இணையத்தளங்களில் உள்ள ஆபாசக் காட்சிகளில் இலங்கையின் இளைஞர், யுவதிகள் தோன்றியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த இணையத்தளங்களையும் தடைசெய்வதற்கு நீதிமன்ற  உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாசக் காட்சிகள் அடங்கிய 284 இணையத் தளங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இதுவரை தடைசெய்யப்பட்டுள்ளன.
இணையத் தளங்களில் ஆபாசக் காட்சிகளில் தோன்றும் உள்நாட்டு இளைஞர் யுவதிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மட்டத்தில் இலங்கையில் புதிய ஆய்வு நிலையம்

Posted in
சர்வதேச மட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடிய புதிய ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஒத்துழைப்புடன் இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகூட வசதிகள் இந்த நிலையத்தில் ஏற்படுத்தப்படுமெனத் தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையத்தில் நவீன தொழினுட்ப வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ஆய்வுகூடமொன்றையும் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச ஆய்வு நிலையத்திற்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்காக நாசா நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுநிலையத்தை அமைப்பதற்கென 50 ஏக்கர் காணி ஹோமாகம பகுதியில் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளதாகவும் தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

1,768 அடி கோபுரத்தில் ஏறும் ஊழியர்கள் : மயிர்க்கூச்செறியும் காணொளி (காணொளி இணைப்பு)

Posted in
 ஒளிபரப்புக் கோபுரமொன்றின் திருத்தப் பணிகளுக்காக அதன் மீது ஏறும் ஊழியர்கள் இருவரின் மயிர்க்கூச்செறியும் காணொளிக் காட்சியானது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. 
இக்காணொளியானது சுமார் 6 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது. 
ஊழியர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த கமெரா ஒன்றின் மூலமே இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 
சுமார் 1,768 அடி உயரமான இக்கோபுரமானது பிரான்ஸிலுள்ள ஈபிள் டவர் (1,063 அடி), அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடம்( 1,453 அடி ) மற்றும் அமெரிக்காவின் வில்லிஸ் டவர் (1730 அடி) ஆகியவற்றை விட உயரமானதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 
தனியாக அல்ல, கூடவே சுமார் 13.6 கிலோகிராம் நிறையுடைய ஆயுதங்கள் உள்ளடங்கிய பெட்டியொன்றையும் இவர்கள் சுமந்து செல்லவேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
மேற்படி காணொளி குறிப்பிட்ட ஊழியர்கள் கடமைபுரியும் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தது. 
மேலும் இது போன்ற 2 காணொளிகளை அந்நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 

to see the video & download click this link:
http://www.youtube.com/watch?v=IqX2IQdgKDw&feature=player_embedded#!

மட்டக்களப்பில் பிரதியமைச்சர் முத்துவ சிவலிங்கத்தால் வீதிகள் திறந்து வைப்பு

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கமநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் இன்று மாலை திறந்து வைத்தார்.
பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்துடன் கமநெகும திட்டத்துக்கான பணிப்பாளர் ஆர்.பி.அமரசிங்க மற்றும் அதிகாரிகளும் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செழியன் பிரதியமைச்சரையும் அதிகாரிகளையும் வரவேற்றார்.

சத்தியமா நான் அவன் இல்லை...!

Posted in
சத்தியமா நான் அவன் இல்லை...! ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது சேறு பூசும் வகையிலான பதாகைகளை அச்சிட உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொன்சேகாவிற்கு எதிரான மனு ரத்து

Posted in
ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறுக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹப்புத்தளை பகுதியில் வசிக்கும் ஆனந்தன் மோஹனதாஸ் என்ற நபர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 
சரத் பொன்சேகா வாக்காளராக பதியப்படவில்லை எனவும், அதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருக்க அவருக்குத் தகுதி இல்லை எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த அரச தரப்பு சட்டத்தரணி, குறித்த மனு சட்ட திட்டங்களுக்கு அமைய நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்பட முடியாத ஒன்றென எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 
இதன்படி மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மனுவை வாபஸ் பெறத் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை ரத்து செய்தது. 
எனினும் தேவைப்படின் மனுதாரர் இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதியை நாட முடியுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருகோணமலையில் 40 மில். ரூபா செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்திச்சாலை

Posted in
திருகோணமலை மாவட்ட கப்பல்துறையில் 40 மில்லியன் ரூபா செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் இந்திராணி தர்மராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் நிதியில் இது அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலைக் கட்டடங்களும் இயந்திரங்களுமாக பெரியளவான இந்தத் தொழில்சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 32 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கமுடியும்.
இங்கிருந்து மருந்துகள் உற்பத்தியாக தொடங்கியதும் மிகக் குறைந்த விலைகளில் மருந்துகளைப் பெறக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருமலை வனபரிபாலன திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்சியை கைப்பற்ற முயலும் ரணில் முதலில் கட்சியைக் காப்பாற்ற வேண்டும்:கெஹெலிய

Posted in
அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப்பீடம் ஏற்றுவதற்கு முன்னர் தமது சொந்தக் கட்சியை ஒருங்கிணைத்து உறுப்பினர்களை தம்முடன் வைத்துக்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முயற்சிக்கவேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


நாடு ஒன்றின் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்று எண்ணுவதும் முயற்சிப்பதும் இயல்பான விடயமாகும். ஆனால் அதற்கு முன்னர் தனது கட்சியை கட்டிக்காக்க வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் தலையாய கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூடிய விரைவில் பாராளுமன்றத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று முன்நாள் களனியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் தெரிவித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடமேற்றப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அதாவது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் அதனை கலைக்க முயற்சிப்பதற்கு முன்னர் தனது கட்சியை சீர்ப்படுத்த அவர் முயற்சிக்கவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைத்து ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியின் உறுப்பினர்களை தன்னுடன் வைத்துக் கொள்ள எதிர்க்கட்சி தலைவர் முதலில் முயற்சிக்கவேண்டும்.
அதனைவிடுத்து விரைவில் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றுவேன் என்று கூறினால் எப்படி? முதலில் தமது பக்கம் உள்ள விடயங்களை சரிசெய்துகொள்ள வேண்டும் என்பதுடன் சீர்ப்படுத்தவேண்டும்.
மேலும் பாரிய பலமான நிலையில் இருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை கலைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது அவரின் மற்றுமொரு நகைச்சுவை என்றே கூற வேண்டும். மக்களுக்கு அதனை பற்றி நன்றாகவே தெயும்.
மற்றுமொரு விடயமாக சரத் பொன்சேகாவை விடுவிக்கப் போவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். பொன்சேகா விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறப்பாக செயற்படுவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி அடிக்கடி குற்றம் சுமத்தி வந்தது. அதனை சமாளிக்கும் வகையிலேயே தற்போது பொன்சேகா குறித்து எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுகின்றோம்.

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்

Posted in
சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்லாசத்துறை அமைச்சருமான பசில் ராஜபக்ஸ கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுதலின் பேரில் இந் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
அந் நிகழ்வுகளில் ஓர் அங்கமாக கல்லடி கடற்கரை சிரமதானம் செய்யப்பட்டது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அரம்பித்து வைத்தார்.

மாவடி இராணுவ முகாமில் வெடிப்பு

Posted in
பலாலி மாவடிக்குளப் பிரதேச இராணுவ முகாமில் நேற்றைய தினம் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காணமடைந்நதுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவ இருவரம் கொழும்பு போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இராணுவ வீரர்கள் முகாமினை சுத்தப்படுத்தும் வேளையில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்தாலேயே சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவிற்கு எதிராக சாட்சி...!

Posted in
விடுதலைப் புலி உறுப்பினர்கள் வௌ்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையில் சாட்யமளிக்க பாதுகாப்பு விவகார செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ் மேல் நீதிமன்றிற்கு விஜயம் செய்திருந்தார்.

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைள்

Posted in
லலித் கொத்தலாவை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வந்த சொத்து விசாரணைகளின் மூலம் அவரது வங்கிப் பெட்டகத்தில் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைள் இருப்பது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

நாவலடி பகுதியில் விபத்து, ஒருவர் பலி

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியில் இன்று காலை கல் ஏற்றிய லொறியொன்று குடை சாய்ந்ததில் அதன் உதவியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று காலை பொலன்னறுவையிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை நோக்கிவந்த லொறி நாவலடி சந்தியில் நிலைதடுமாறு குடைசாய்ந்துள்ளது. இதன்போது அந்த லொறியின் உதவியாளர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டுவில் தேரர் உண்ணவிரதம்

Posted in
அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலராமய ரஜமகா விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

நேற்று முதல் குறித்த தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் பல்வேறு தடவைகள் இவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட சிங்கள மக்களை மட்டக்களப்பில் குடியேற்றக்கோரி இவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
Posted in
கடலில் தத்தளித்த மூன்று; மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீட்பு!
வாழைச்சேனையில் இருந்து மீன்பிடிக்கச் சென்று பின்னர் காணாமல் போன மூன்று தமிழ் மீனவர்கள் ஒரு மாதகாலத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சுமார் 800 கடல்மைல் தொலைவில் மற்றொரு மீன்பிடிப் படகினால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சிவராசா ஜீவராசா செல்லப்பா மனோகரன் ஆகிய மூன்று மீனவர்களும் கடந்த ஓகஸ்ட் 18ம் திகதி மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்தனர். இவர்கள் சென்ற படகின் இயந்திரம் பழுதடைந்ததால் படகு காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த மூன்று மீனவர்களும் கடலில் தத்தளிப்பதை அவதானித்த மின்னொளி என்ன மற்றொரு படகு இவர்களை மீட்டுள்ளது.

திருகோணமலை சிறைச்சாலையில் தீ வைப்பு

Posted in
திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தீ வைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை சிறைச்சாலையில் ஞாயிற்றுகிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் திடீர் சோதனையினை மேற்கொண்டனர். சிறைச்சாலையின் 'டீ' பிரிவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரிவில் 109 கைதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த திடீர் சோதனையின்போது கைதிகளிடமிருந்து இரண்டு செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கையினால் ஆத்திரமுற்ற சிறைக் கைதிகள் சிலர் அங்குள்ள படுக்கை விரிப்புகளுக்கு தீவைத்துள்ளனர். தீ வெகு வேகமாக பரவியதையடுத்து ஏற்பட்ட புகைமூட்டத்தினால் தீவைப்பினை மேற்கொண்ட கைதிகளைவிட ஏனைய சிறைக்கைதிகளும் பாதிப்படையும் நிலை உருவானது.
இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாகவே செயற்பட்டு அங்குள்ள ஏனைய சிறைக்கைதிகளை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கடற்படையினரின் தீ அணைக்கும் படையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று தீ பெருமளவில் பரவாதவாறு தீயை அணைத்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சிறைச்சாலை பகுதியை அடுத்துள்ள பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புகள் இருந்தபோதும் தீ எங்கும் பரவாதவாறு துரிதகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தீவைப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிசார் மேற்கொண்டுள்ளனர். பதினொரு சிறைக்கைதிகள் இநத சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்

Posted in
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு (CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இந்த நிதியத்திற்கு (SAVE THE CHILDREN) சேவ் த சில்ரன் முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாகவும் ஏனைய தன்னார்வ தொண்டர் அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் இதற்கான நிதியை மேலும் பெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இது தொடர்பாக தமது அமைச்சினால் அமைச்சரவையில் முன் வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெறவிருப்பதாகவும் அவர் கூறுகின்றார். சேவ் த சில்ட்ரன் வழங்கியுள்ள நிதி வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் 500 முன் பள்ளி ஆசிரியைகள் மாதாந்தம் ரூபா 2000 ஊக்குவிப்பு கொடுப்பனவை பெறவிருக்கின்றார்கள்.


ஏனைய பாடசாலை முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கட்டம் கட்டமாகவே இத்திட்டம் விஸ்தரிக்கப்படவிருக்கின்றது.அதற்கான நிதியைப் பெறுவதங்கான முயற்சிகளிலும் அமைச்சு ஈடுபட்டுள்ளது." என்றும் குறிப்பிட்டார் மகளிர் மற்றும் சிறுவர் விவகார துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ். இலங்கையில் 5 வயதிற்கும் 10 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களின் கல்வி தொடர்பா ககவணம் செலுத்த வேண்டியதன் அவசியம் பற்றி அண்மையில் சேவ் த் சில்ட்ரன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டி காட்டியுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்ட துணை அமைச்சர் "கல்வி அமைச்சுடன் இணைந்து இதற்கான திட்மொன்றை அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 
Posted in
N[.tp.gp FOtpdh; thior;Nridg; gpuNjrj;jpw;F jpBh; ,ufrpa tp[ak;

N[.tp.gp apd; jiyth; Nrhktd;r mkurpq;f kw;Wk; mDuFkhu jp]hehaf;f vk;.gp. cs;spl;l FOtpdh; rpy jpdq;fSf;F Kd;dh; thior;Nridg; gpuNjrj;jpw;F jPBh;  ,ufrpa tp[ankhd;iw Nkw;nfhz;Ls;sdh;.
,jd;NghJ fy;Flh tPjpapYs;s ,e;J Nfhapy; xd;Wf;F tp[ak; nra;j ,th;fs;> mf;Nfhapypd; ghpghyd rigapdiur; re;jpj;J Nfhapypd; mgptpUj;jp eph;khzg; gzpfSf;F tpiutpy; epjpAjtp nra;tjhf thf;fspj;Jtpl;L nrd;Ws;sjhfTk; mwpa Kbfpd;wJ. 

விசாரணை செய்யும் அதிகாரம் நிபுணர் குழுவுக்கு இல்லை

Posted in
ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவிப்பு
இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடை யாதென்று ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதி யுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரி வித்துள்ளார்.
இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடி யமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர் களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிரு த்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட் டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக் கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாள ருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாளைய முரண்பாடுகளுக் கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல் லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டு வதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவி மடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத் துரைத்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதே சங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடி யேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபி விருத்திப் பணிகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு தேர்தல் களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத் துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செய லாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டு. சுற்றுலாத்தகவல் நிலையத்தை பசில் ராஜபக்ஷ திறந்து வைத்தார்

Posted in





மட்டக்களப்பு நகரத்தில் நெக்டப் திட்டத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தகவல் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று காலை திறந்து வைத்தார்.
இதை திறந்து வைக்கும் வைபவத்தில் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் பௌசி மற்றும் கிழக்கு மகான முதலமைச்சர் சிவநெசதுறை சந்திர காந்தன் மற்றும் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, விநாயக மூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்க மாகாண ஆளுனர் அல்மிரட் மொஹான் விஜே விக்ரம உட்பட மட்டக்களப்பு மாநகர சபை மேயர் பிரதி மேயர் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபையினால் நெக்டப் திட்டத்தின் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் நிலையத்தினை திறந்து வைத்து அதன் நினைவுக்கல்லையும இதன்போது திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இதையடுத்து அமைச்சர் பசில் ராஜபக்ச மட்டக்களப்பு வாவியில் நடைபெற்ற தோனி ஓட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னார் மட்டக்களப்பு பாலமீன் மடுவில் அமைக்கப்பட்டுள்ள சூழல் கற்கை நிலையம் மற்றும் சுற்றுலாத்துறையினரை கவரும் உல்லாசத்தீவு என்பவற்றையும் அமைச்சர் பசில் ராஜபக்ச திறந்து வைத்தார்.

10 சர்வதேச கல்வி நிறுவனங்களை இலங்கையில் அமைக்க நடவடிக்கை

Posted in
10 சர்வதேச கல்வி நிறுவனங்களை இலங்கையில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஆசிய வலயத்தில் உயர்கல்வித் துறையில் இலங்கையை முதலிடம் பெறச் செய்வதே தனது நோக்கமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாக். விஞ்ஞானிக்கு 86 வருட சிறைத்தண்டனை: அமெரிக்கா தீர்ப்பு

Posted in
பாகிஸ்தான் விஞ்ஞானி ஆபியா சித்தீக்கிற்கு 86 வருட சிறைத்தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து பாகிஸ்தானில் பல பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிளானி இது தொடர்பாக அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். 
அமெரிக்க இராணுவத்தினரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேற்படி பாகிஸ்தானிய பெண் விஞ்ஞானிக்கு 86 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
அவர் கைது செய்யப்படும் போது மோசமான குண்டுகளை தயாரிப்பதற்கான குறிப்புகளையும் நியூயோர்க்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பட்டியலையும் தன்னுடன் வைத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. 

The High Cost Of Negligence

Posted in
Days after the explosion in the Karadiyanaru Police Station, debris can still be seen strewn several meters away from the site of the explosion. Debris from the containers could be seen on the bare lands on either sides of the Batticaloa-Badulla A5 highway. Senior police officers in Batticaloa told The Sunday Leader that the explosion was due to negligence on the part of the authorities for granting approval to a company to hold explosives when they had not followed the required safety precautions.
“Following the liberation of the East, the government ordered the setting up of police posts in the region. Most of these police stations have been set up in temporary locations and lack even basic requirements for a police station like a holding cell and an armoury,” the police officers said. These issues, they said would result in another massive incident like the Karadiyanaru explosion if not addressed soon.
When The Sunday Leader visited the site of the explosion, minor explosion sounds were from heated and damaged ammunition from the former police station strewn around the premises. A massive crater of about five feet in depth is a clear indication of the severity of the explosion.
A police officer said that the Government Analyst who had visited the site of the explosion had said at least 500kgs of explosives would be needed to create a crater of such magnitude.
A police constable standing outside the site from the Ayithyamale police said that when they arrived a few minutes after the explosion, there were remains of several persons strewn all over.
A. Wickremasinghe, the uncle of Chandana Kumara Hettiarachchi who died in the explosion, was looking at the debris of the double cab driven by his nephew.
My nephew purchased a double cab and rented it to the Chinese Company. He could speak a little Chinese so the company asked him to drive his cab for them. Now he is dead and I was asked by his family to see if we could find any documents that belonged to the vehicle,” he said.
A new Karadiyanaru police station has been established a few feet away from the explosion site.
Police officers from the Ayithyamale police and those remaining from the Karadiyanaru police are still completing construction work of the new police station.
The remains of two persons – a driver attached to the Chinese company (Covec China) and a police officer – are still missing.
The Covec-China site near the Karadiyanaru police, where the explosives were to be taken to a quarry, has come to a complete standstill without explosives to blast the granite.
Nevertheless there still remained mountains of granite stones blasted earlier and powdered granite.
When The Sunday Leader visited the Covec-China project office in Urani, Batticaloa, the Project Manager who is a Chinese national refused to speak saying he was busy.
However, the office seemed to be at a standstill as well. A small memorial site was set up in the office premises with offerings placed before two portraits of the diseased Chinese nationals – Luo Jian Xin (metal quarry manager) and Xu Xiao Jiang (deputy project manager).
Posted in
fUthf;Nfzpapy; 03 ,isQh;fs; nghyprhuhy; ifJ
rw;W Kd;dh; fWthf;Nfzp gpuNjrj;jpy; itj;J 03 ,isQh;fs; fy;Flhg; nghyprhuhy; ifJ nra;ag;gl;Ls;sjhf jfty;fs; njhptpf;fpd;wd. Nkw;gb egh;fs; rpy jpdq;fSf;F Kd; thior;Nridg; gpuNjrj;jpy; ,lk;ngw;w nfhs;isr; rk;gtk; xd;wpd; njhlh;gpd; Nghpy; ifJ nra;agl;Ls;sjhf nghyp]; jfty;fs; njhptpf;fpd;wd.

சாதாரண மக்கள் ரயில் பாதையில் நடக்க முடியாது

Posted in
ரயில் சட்டமூலத்திற்கு அமைய, ரயில் பாதை புனரமைப்பவர்கள் மற்றும் ரயில் அதிகாரிகளுக்கு மாத்திரமே ரயில் பாதைகளில் நடந்து செல்ல முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில் பாதைகளில் சாதாரண மக்கள் நடமாடுவது சட்டத்திற்கு முரணானதென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரயில் சட்டத்தை கடைபிடிக்காததன் காரணமாகவே கடந்த காலங்களில் பல பொது மக்கள் ரயிலில் மோதி உயிரிழந்ததாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரயில் கடவைகளில் சாரதிகளின் கவனயீனம் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக திணைக்களம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் பொது மக்களும் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ரயில்வே திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியா முயற்சி

Posted in
சீனாவின் ஆதிக்கம் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிகரித்துள்ளமையை அடுத்து இந்தியா, இந்த பகுதிகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாகவே இந்தியா, வடக்கு, கிழக்குக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக்கொடுத்து அங்குள்ள மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்வேறுகட்ட சுற்றுலாத்துறை முதலீடுகளை இந்தியா இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.
அண்மையில் கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிவிபத்து சம்பவத்தை அடுத்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இலங்கை தொடர்பாக கவனம் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் சீனாவை வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி பணிகளில் இருந்து தவிர்க்கும் வகையிலேயே இந்தியாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் உள்ள நிறுவனங்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் ஊக்குவிப்புகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க்கில் மஹிந்தவை அதிர்ச்சியில் ஆழ்த்திய குட்டி விமானம்

Posted in


ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் உரையாற்றுவதற்கு நேற்று முன்நாள் புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிர்ச்சி தரும் வகையிலான பதாகையொன்று கண்ணில் பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.

"இலங்கை சர்வாதிகாரி ராஜபக்ஷ, ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்" என்ற வசனங்களுடனான பதாகையொன்று வானத்தில் காணப்பட்டதாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டதுடன் பதாகையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அலுவலகக் கட்டடத்துக்கு கிழக்குப் புறமாக வானத்தில் குட்டி விமானமொன்று இந்தப் பதாகையுடன் வலம் வந்து கொண்டிருந்தது.
ஜனாதிபதியுடன் சென்ற பரிவாரங்கள் தாம் தங்கியிருந்த ஹோட்டலின் யன்னல் வழியாக இந்தப் பதாகையைப் பார்த்தனர் எனவும் அந்த இணையதளம் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதியுடன் சென்றிருந்த பாதுகாப்புப் பிரிவினர் ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள இலங்கை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்தப் பதாகையை அகற்ற வழி இல்லையா எனக் கேட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்தப் பதாகையுடனான குட்டி விமானம் நீண்ட நேரம் வானத்தில் சுற்றிக் கொண்டிருந்ததாக நியூயோர்க்கிலுள்ள இலங்கையர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம் _

Posted in
கரடியனாறு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு கடந்த ஒரு வாரமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி அபிவிருத்தி வேலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் கடந்த 17.9.2010 வெள்ளிக் கிழமையன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் வீதி நிர்மான வேலைகளை மேற்கொண்டு வந்த சீனா நிறுவனமொன்றின் சீனா நாட்டு பொறியியலாளர்கள் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து வீதி அபிருத்தி நிர்மான வேலைகள் இடை நிறுத்தப்பட்டன.
இதையடுத்து இன்று வீதி நிர்மான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் வாகரைப் பொலிஸார் கைது!

Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவுக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்,அவரின் கீழ் பணியாற்றும் ஏழு பொலிஸார், இரு பொதுமக்கள் ஆகியோரைப் புதையல் தோண்டினர் என்கிற சந்தேகத்தில் அனுராதபுரம் பொலிஸ் நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

வாகரையில் திம்புலாகல பகுதியில் ஸ்ரீபுர என்கிற இடத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டினர் என்று குற்றஞ்சாட்டியே இக்கைது இடம்பெற்றுள்ளது.
கொழும்புக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த பத்துப் பேரையும் மன்னம்பிட்டி பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்துள்ளார்கள்.

உலருணவு கடத்தல் : மட்டு. அரச உத்தியோகத்தர் மூவருக்கு விளக்கமறியல் _

Posted in
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவில் அரசுக்குச் சொந்தமான உலருணவுப் பொருட்களைக் கடத்தி விற்பனை செய்ய முற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரை எதிர்வரும் முதலாந் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு. நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ. இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வெல்லாவெளி செயலகப் பிரிவுக்குட்பட்ட 13ஆம் கொலனி, சங்கர்புரம் கிராமங்களைச் சேர்ந்த வறிய மக்களுக்கு வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் விநியோகித்த அரிசி, மா போன்றவற்றை இவர்கள் பதுக்கி வைத்திருந்தனர்.

இவற்றை விற்பனை செய்வதற்காக ட்ரக்டரில் எடுத்துச் சென்றபோது வெல்லாவெளி பொலிஸார் இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிபதி இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

கிராம சேவை அதிகாரி, பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர், சமாதான நீதிவான் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர்.