Posted in
50 பொலிஸார் காயமடைந்த வெலிக்கடை சிறைச்சாலை மோதல் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கைதிகளின் உணர்வுகளை தூண்டி அவர்கள் தாக்கும் விதத்தில், பொலிஸார் எவரும் நடந்துகொள்ளவில்லை என சிறைச்சாலைப் பிரதி அமைச்சர் விஜிதமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும் சிறைச்சாலைக் கைதிகளுக்கு பொலிஸார் மற்றும் நீதிபதிகள் மீது விரோத உணர்வுகளுன் காணப்படுவதாக அவர் பிபிசியிற்கு தெரிவித்துள்ளார்.
நேற்யை தினம் தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்வதற்காக பொலிஸார் முற்பட்டபோது கைதிகள் அவர்களை நெஞ்சிலும் தலையிலும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினாலேயே இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டீ சில்வா பிபிசியிற்கு தெரிவித்துள்ளார்.

