Follow me on Twitter RSS FEED

'வழக்கில் மஹிந்தவை விடுவித்திருக்காவிடின் அவர் ஜனாதிபதியாகியிருக்க மாட்டார்'

Posted in
ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவை விடுவிக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திராவிடின், மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். 
சுனாமி நிதிக் கையாடல் என்ற குற்றச்சாட்டிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை தனது தலைமையிலான நீதியரசர் குழாம் விடுவிக்காது விட்டிருப்பின் மஹிந்த ராஜபக்ஷவினால்  2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

மஹிந்த ராஜபக்ஷ மக்களின் உரிமைகளை பாதுகாப்பாரென எதிர்பார்த்தே நாம் இதனைச் செய்தோம். ஆனால் அது தற்போது நடப்பதில்லை.

ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டுவந்தமைக்கு நான் பொறுப்பென பலரும் முறையிடுகின்றனர். நான் இதை ஒப்புக்கொள்கின்றேன். 

அவரை நாம் விடுதலை செய்ததால் தான்; ஜனாதிபதி ராஜபக்ஷவினால் பிழையான காரியங்களை செய்ய முடிகின்றது. 

2004 டிசெம்பர் 26ஆம் திகதி இடம்பெற்ற சுனாமி பேரழிவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இலங்கை பெருமளவான நிதியுதவிகளை பெற்றது. அச்சமயத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாடு சென்றிருந்ததால் பிரதமர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ நன்கொடை நிதிகளுக்கு பொறுப்பாக இருந்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாஷிம், இவர் சுனாமி நிதியத்திலிருந்து பணத்தை தனியார் கணக்கொன்றுக்கு மாற்றுவதாக பொலிஸில் முறைப்பாடு செய்தார். ராஜபக்ஷ நம்பிக்கை மோசடி, பொது நிதிக் கையாடல் ஆகிய குற்றங்களை செய்வதாக கபிர் ஹாஷிம் குற்றஞ்சாட்டினார். இதைத் தொடர்ந்து பொலிஸ் இவருக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்கியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (சுசித ஆர்.பெர்னாண்டோ)

0 comments: