Follow me on Twitter RSS FEED

மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் நமது 5 கிராம சேவகர் பிரிவுகளையும் தாரைவார்த்துக் கொடுத்தாரா?

Posted in

மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் நமது 5 கிராம சேவகர் பிரிவுகளையும் தாரைவார்த்துக் கொடுத்தாரா? யதார்த்தத்தை புரிய மறுக்கும் நாம்.

(சற்று நீண்ட பதிவு)

கல்குடா முஸ்லிம்களாகிய நாம் இழந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பாக மூளையில் ஞாபகம் வந்து கதவைத் தட்டும்போதெல்லாம் கடந்த 20 வருடங்களாக இடையிடையே பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். பிரதேச சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை நாம் அனுப்பிய பிரதிநிதிகளும் இந்த விடயம் பற்றி அந்தந்த உயரிய சபைகளிலே குரல் கொடுத்தும் வருகின்றனர். முக்கியமாக தேர்தல் காலங்களில் கட்சிப் பாகுபாடின்றி இவ்விடயம் பல பிரச்சார மேடைகளை அலங்கரித்துச் சென்றிருக்கிறது.

மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் நமது 5 கிராம சேவகர் பிரிவுகளையும் தாரைவார்த்துக் கொடுத்தாரா? என்றால் அது முற்றிலும் திரிபுபடுத்தி பரப்பப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கருத்தாகும். 03.06.1999ல் உருவாக்கப்பட்ட பன்னம்பலன ஆணைக்குழு மூலம் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய 08 பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிர்ணயத்திற்கான பரிந்துரைகளின்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உருவாக்கத்திற்கு 240 சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் 5 கிராம சேவகர் பிரிவுகள் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உருவாக்கத்திற்கான எல்லைக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரை செய்தது. ஆனாலும் கிரானுடன் 5 கிராம சேவை பிரிவுகளை இணைப்பதை மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களும் இன்னும் எமது சமூகத்தைச் சேர்ந்த பலரும் விரும்பவில்லை என்பதோடு அதற்கெதிராகவே பன்னம்பலன ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர்.
இருந்தாலும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அமைச்சரவையும் அரசாங்கமும் நடைமுறைப்படுத்தியது.
அமைச்சரவை அங்கீகாரத்தின்படி கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலகம் நமது 5 கிராம சேவகர் பிரிவுகளும் இணைக்கப்பட்டு அவை அடங்கலான 18 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு கடந்த 2002ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம் துரதிஸ்டவசமாக அமைச்சரவை அங்கீகாரம் நடைமுறைப்படுத்தப்படாமலும் அரச வர்த்தமானி வெளியிடப்படாமலும் வெறும் 7.78 சதுரகிலோமீட்டர் நிலத்துடன் கோறளை மத்தி பிரதேச செயலகம் துவங்கி வைக்கப்பட்டது. இன்றுவரை இந்நிலையே நீடிக்கின்றது.

எல்லை நிர்ணய விடயத்தில் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கும் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கும் அரசாங்க நடைமுறைக்கும் மேலதிகமாக அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் இருந்த மர்ஹ{ம் முகைதீன் அப்துல் காதர் அவர்களினால் எவ்வாறு இந்த 5 கிராம சேவகர் பிரிவுகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்?. அரச காணி விடயத்தில் அதனை விட்டுக் கொடுப்பதற்கும் தக்க வைத்திருப்பதற்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கான வகிபாகம் என்ன?.

மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களே இதை விட்டுக் கொடுத்தார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறெனின் அவர் எல்லாவற்றையும் தாண்டி தன்னிச்சையாக முடிவெடுக்க இந்த நிலங்கள் அவரது தந்தை வழி சொத்தா? அதுவுமில்லை. அப்படி இருந்தும் ஏன் முழு கல்குடாத் தொகுதி முஸ்லிம்களும் இந்த விடயத்தில் அவரை எதிர்த்து நிற்கவில்லை?. புத்திஜீவிகள் என்று ஒரு உயர் வர்க்கம் இருந்ததே அவர்களாவது இதற்கெதிராக கிளம்பியிருக்கலாமே. நிலம் பறிபோகிறது என்று முழு ஊரையும் கூட்டி மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அவர்களுக்கும் அரசாங்க ஆணைக்குழுவுக்கும் எதிராக எதிர்ப்புக்களை வெளியிட்டிருக்கலாம். ஏன் அதனை செய்யவில்லை?.
அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் அது அரசாங்கத்தின் முடிவு.

எல்லாவற்றையும் புதுனம் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு மரணித்த ஒருவரின் தலையில் பழியைப் போடுகின்றோம். இந்த பழிபோடுதல் அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இரண்டு வகையான பழிகள் அவர் மீது திட்டமிட்டு பரப்பப்பட்டு அவரை அரசியலில் இருந்து ஒதுங்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதில் ஒன்று ஊர்த்துவேசம்: ஓட்டமாவடி மக்களின் காணியை தமிழர்களுக்கு விட்டுக் கொடுத்து வாழைச்சேனைக்கு தனியான பிரதேச செயலகம் கொண்டு வந்தார் என்று சொல்லப்பட்டது.

இன்னொன்று பன்னம்பலன ஆணைக்குழுவின் பரிந்துரைகளினால் அரசாங்க உத்தரவுப்படி விட்டுக் கொடுக்கப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளையும் மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் தனியொரு ஆளாக அவரது வீட்டுக் காணியைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டார் என்று திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

இவையெல்லாம் காரணமின்றி பரப்பப்படவில்லை. மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் அதே சமகாலப்பகுதியில் சுகயீனமுற்றிருந்த வேளையில் அவரை கல்குடா அரசியலில் இருந்து வெளியேற்றி இன்னொருவரைக் கொண்டு வருவதற்கான முதற்கட்ட வேலைத் திட்டமாக இது இருந்தது. அது அப்போதைய பிரச்சாரங்களின் முக்கிய பேசுபொருளாகவும் இருந்தது.

பிழை எங்கே யாரால் நடந்தது?
ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான மேலதிக இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கத்துடன் வாகரை எல்லையிலுள்ள இரு பிரிவுகளையும் இணைத்து தற்போதுள்ள 7 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாக 11 கிராம சேவகர் பிரிவுகள் உருவாக்கப்பட்டு 240 சதுர கிலோமீட்டர் நிலம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் இழந்த கிராம சேவகர் பிரிவுகள் பற்றிய பேச்சுக்கே இடமிருந்திருக்காது.

ஆணைக்குழுவின் பரிந்துரையையும் அமைச்சரவை அங்கீகாரத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த அரச வர்த்தமானி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறிய மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் (சுகயீனமுற்றிருந்தமை) அதன் பின்னர் வந்த அரசியல் தலைமை இவர்களோடு கூடவே இருந்த புத்திஜீவிகள் அழுத்தம் கொடுக்கத் தவறியமை மற்றும் இவர்கள் அனைவருக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கத் தவறிய பொதுமக்கள் ஆகிய நாமும்தான் காரணம்.

அதேவேளை முன்னாள் அமைச்சர் அமீர்அலி அவர்களும் மாவட்டம் தொடக்கம் பாராளுமன்றம் வரையும் இவ்விடயத்தை பல தடவைகளில் புள்ளி விபரங்களுடன் கொண்டு சென்றிருந்தார். அண்மையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்றத்திற்குக் கொணடு சென்றிருந்தார். அதேபோன்று பாராளுமனற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அவர்களும் பேசியிருந்தார். இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் பஷீர் சேகுதாவுத் அவர்களும் சில தடவைகளில் முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர்.

இனிவரும் காலங்களில் கூட்டான முயற்சி ஒன்றின் மூலம் தொடர் அழுத்தங்களை இவ்விடயத்தில் காட்டி கோறளைப்பற்று மத்திக்கான 240 சதுர கிலோமீட்டர் நிலத்தைப் பெறுவதே ஒரே தீர்வு. ஏற்கனவே 5 கிராம சேவகர் பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் மாத்திரமே கிரானுக்கு மாற்றப்பட்டுள்ளதே தவிர அதன் பெரும்பாலான உரிமைகள் எமது ஊரைச் சேர்ந்தவர்களுக்கே சொந்தமாக உள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.

-ஆதம் றிஸ்வின்-

பாரிஸில் ஏற்பட்ட குண்டுவெடிப்புப் பீதி

Posted in

 


றியாஜ் பதியுதீன் விடுதலை

Posted in


 

மண் அகழ்விற்கான சிபாரிசுகள் தடை

Posted in


 

சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டெர்நெசனல் இந்தியாவில் பணிகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

Posted in


இது குறித்து அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறும்போது, ' கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்னெஸ்டி அமைப்பின் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய அரசால் முடக்கப்படுவது தற்செயலானது அல்ல. அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு முகமைகள் தொடர்ந்து எங்களுக்குத் தொல்லை கொடுத்தவண்ணம் இருந்தன. காரணம் அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தியதுதான்.

சமீபத்தில் டெல்லி கலவரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து காவல்துறை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்ய முடியாத அளவு அநீதி நிலவுகிறது.

அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதைத் தவிர இந்த அமைப்பு ஒன்றும் செய்துவிடவில்லை, மறுப்பையே, எதிர்ப்பையே உறையச் செய்ய முயற்சி நடக்கிறது.

எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லாமல் குற்றம் செய்யும் நிறுவனங்கள்போன்று மனித உரிமை அமைப்புகளை நடத்துவது, எதிர்ப்புத் தெரிவிக்கும் தனிநபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவது என்பது விமர்சனக் குரல்களை ஒடுக்கும் ஒரு வகையான அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்குவதாகும்.

அம்னெஸ்டி அமைப்பு சர்வதேச சட்டம், இந்தியச் சட்டங்களுக்கு உடன்பட்டே முறைசார்ந்தே செயல்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக ஒரு லட்சம் இந்தியர்கள்தான் இதில் நன்கொடை பங்களிப்பு செய்தனர். எனவே இவை அந்நிய நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்துடன் தொடர்புடையது அல்ல. சட்டரீதியான நிதித் திரட்டலை அரசு தற்போது நிதி மோசடியாகச் சித்தரிக்கிறது. மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புகளும் அரசின் செயலின்மையையோ மீறல்களையோ சுட்டிக்காட்டினால் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, அம்னெஸ்டி இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்கிறது. அம்னெஸ்டி அமைப்பு மீதான இந்திய அரசின் பொய்க் குற்றச்சாட்டு மற்றும் அடக்குமுறையே இம்முடிவுக்குக் காரணம்' எனக் கூறியுள்ளார்.

அம்னெஸ்டி இந்தியா, மனித உரிமைகள் பணிக்காக, உள்நாட்டில் நிதி திரட்டுவதற்கான ஒரு தனித்துவமான சர்வதேச அமைப்பாகச் செயல்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் பணிகளை ஆதரித்துள்ளனர்.

சுமார் 1,00,000 இந்தியர்கள் நிதிப் பங்களிப்புகளை அம்னெஸ்டி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளனர். இந்தப் பங்களிப்புகளுக்கு அரசாங்கம் இப்போது சட்டத்துக்கு எதிரான நிதி திரட்டும் பணமோசடி எனச் சித்தரிக்கிறது என்றும் அம்னெஸ்டி இந்திய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் மனித உரிமை அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு அடக்குமுறைக் கொள்கைகளின் நீட்சியே எங்கள் மீதான தாக்குதல் என்று அம்னெஸ்டி விமர்சித்துள்ளது.

வஸீம் தாஜுதீன் வழக்கு முடிவுறுத்தப்பட்டது

Posted in


 

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடல் மற்றும் விநியோகித்தல்: இனி இராணுவத்தினர் வசம்

Posted in


 

கல்குடாவில் பெருந்தலைவர் நினைவேந்தல்

Posted in

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவடிச்சேனை, செம்மண்ணோடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் 

ஏ எல் ஏ கபூர் அவர்களின் தலைமையில் மாவடிச்சேனை வட்டார அமைப்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.அமீர் அவர்களின் ஏற்பாட்டில்  பெருந்தலைவர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வும் விசேட துஆப்பிரார்த்தனை வைபவமும் மாவடிச்சேனை ஜூம்ஆப் பள்ளிவாயலில் நேற்று 16.09.2020ம் திகதி  புதன் கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

செம்மண்ணோடை பயாஸ்.






ஓட்டமாவடி UTOCS அமைப்பினால் சேகரிக்கப்பட்ட நிதி ACJU கல்குடாக் கிளையினரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

Posted in
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் வேண்டுகோளுக்கமைவாக உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்காகவும் அதனைத் தொடர்ந்து வடமத்திய மாகாணத்தில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களில் பாதிப்படைந்தவர்களுக்குமான நிதி ACJU பிராந்தியக் கிளைகளின் மேற்பார்வையில் பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஊடாக இலங்கையிலுள்ள அனைத்துப் பாகங்களிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் மேற்பார்வையின் கீழ் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் (United Tractor Owners' Co-operative Society) காவத்தமுனை, காகிதநகர் ஆகிய பிரதேசங்களில் கடந்த 26.05.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிதி சேகரிப்பில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு பெருந்தொகைப் பணத்தினை வசூல் செய்திருந்தனர். 

மேற்படி சேகரிக்கப்பட்ட நிதியானது இன்று 27.05.2019ம் திகதி இரவு 09.00 மணியளவில் ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் தலைமையில் சென்ற குழுவினரால் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரி. அமீஸ்டீன் மற்றும் வாழைச்சேனை தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர். இல்ஹாம் இஸ்மாயில் (MBBS) ஆகியோரின் முன்னிலையில் வைத்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா – கல்குடாக் கிளைப் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டிருந்தது.

ஓட்டமாவடி ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தினர் தங்களது அமைப்பு சார்ந்த விடயம் மட்டுமல்லாது பொதுநலன் சார்ந்த விடயங்களில் மிகவும் அக்கறையுடனும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதை கௌரவ தவிசாளர் மற்றும் ஜம்மிய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 


தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த சிறுவனுக்கு ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தினால் சிகிச்சைக்கான நிதியுதவி

Posted in

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட கொடூர தற்கொலைக் குண்டுவெடிப்பில் பலத்த காயங்களுக்குள்ளான 10 வயதான அசாயல் றொசைறோ அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் குறித்த சிறுவனுக்கு மேலதிகமாகத் தேவைப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் மருந்துகளுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் பெற்றோர் உடைந்து போயிருந்ததோடு விருப்பமுடைய கொடையாளர்களிடமிருந்து உதவிகளையும் கோரியிருந்தனர்.

மேற்படி சிறுவனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்ட ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தம்மாளான ஒரு உதவித் தொகையினை அவசரமாக சேமித்திருந்தனர்.
அந்தவகையில் நேற்று 2019.05.24ம் திகதி மாலை குறித்த அமைப்பின் தலைவர் எம்.பி.எம். ஹுஸைன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பிலுள்ள குறித்த சிறுவனின் இல்லத்திற்குச் சென்ற ஐக்கிய உழவு இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் உதவித் தொகையாக சுமார் இருபத்தி ஐயாயிரம் ரூபா காசோலை மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

இதேபோன்று சமூக அமைப்புக்கள், தனவந்தர்கள் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி படுகாயமடைந்துள்ள குறித்த சிறுவனின் மருத்துவ செலவுகளுக்கு உதவிட முன் வர வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.





ஸ்ரீ.மு. காங்கிரஸின் இணைப்பாளராக எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் நியமனம்

Posted in
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதிக்கான இணைப்பாளராக CASTRO அமைப்பின் பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்கள் இன்று கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான கௌரவ அல்ஹாஜ். ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் கீழும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் சிபார்சின் பேரிலும் இந்நியமனம் தேசிய அமைப்பாளர் கௌரவ. சபீக் ரஜாப்டீன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களினால் இன்று 10.05.2019ம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரான எச்.எம்.எம். றியாழ் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் முன்னெற்றமடைவதற்கு எம்.ஜே.எம். அன்வர் நௌஷாத் அவர்களின் இவ்விணைப்பாளர் நியமனம் பெரிதும் வலுச் சேர்க்கும் என்பதோடு இளம் தலைமைத்துவங்களான இவ்விருவரும் கட்சியின் வளர்ச்சியில் ஒன்றிணைந்து செயலாற்றி இளைஞர்கள், மூத்த போராளிகள் என அனைவரையும் ஒன்றிணைத்து கல்குடாத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.