Follow me on Twitter RSS FEED

ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ் வீதியில் பொலிசாரின் அதிரடி - பொதுமக்கள் வரவேற்பு

Posted in
ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ் வீதியானது பிரதான சன நெரிசல் மிக்க வீதியாகும். இவ்வீதியில் பிரதான பாடசாலைகள், பள்ளிவாயல்கள், அரசாங்க அலுவலங்கள், மத்ரசாக்கள், அதிக வர்த்தக நிலையங்கள் என்பன அமைந்துள்ளதாலும் ஓட்டமாவடியிலிருந்து மீராவோடைக்குச் செல்லும் பிரதான மார்க்கம் என்பதாலும் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்வீதியினூடாகப் பயணம் செய்கின்றனர். அத்தோடு வாகனப் போக்குவரத்தும் இவ்வீதியில் அதிகம் காணப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வீதியாகவும் காணப்படுகின்றது. 

மேலும், போதைவஸ்து பாவனையாளர்கள் மோட்டார் சைக்கிளில் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிகமானவர்களை ஏற்றிக் கொண்டு வேகமாகப் பயணிப்பதால் இவ்வீதியால் செல்லும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததோடு அதிக விபத்துக்கள் ஏற்படக் காரணமாகவும் இருந்தது.  

மேற்படி விடயம் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 03.09.2018ம் திகதி தொடக்கம் எம்.பி.சி.எஸ் வீதியில் அதிகளவிலாள போக்குவரத்து பொலிசார் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு அவ்வீதியால் சந்தேகத்திற்கிடமாக மற்றும் வேகமாக பயணிக்கக் கூடியவர்கள், பாடசாலை மாணவிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவர்கள் போன்றோரை நிறுத்தி சோதனையிட்டு குற்றம் காணப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டதோடு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டும் இருந்தனர். 

மேற்படி பொலிசாரின் நடவடிக்கையை பிரதேச மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடு நோக்கியதோடு வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன அவர்களுக்கும் பொலிசார் மற்றும் போக்குவரத்துப் பொலிசார் ஆகியோருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்தும் பொலிசார் அவசியம் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென்று பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

0 comments: