Posted in
By Oddamavadi News
Posted in
கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்ததத்தை தொடர்ந்தே இவர் இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
By Oddamavadi News
Posted in
By Oddamavadi News
Posted in
கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடனேயே நஜீப் ஏ மஜீத் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பகமாக அறிய முடிகின்றது.
முதல் இரண்டரை வருடங்களுக்கு நஜீப் ஏ மஜீதும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இந்த முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண அமைச்சுக்கள் இரண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் மற்றைய அமைச்சுக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனுக்கும், விமல வீர திஸாநாயக்கவுக்கும் வழங்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிக்கும் பிரதி தவிசாளர் பதவி தேசிய காங்கிரசுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கு மிடையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒப்பந்தமொன்று நாளை கைச்சாத்தாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மேலதிக மாவட்டமாக அங்கீகரிப்பதெனவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச மொன்று தனியான பிரதேச சபையாகவும் திருகோணமலை மாவாட்டத்தில் பிரதேச சபையொன்று தனியான பிரதேச சபையாகவும் அங்கீகரிப்பது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக அந்த ஒப்பந்த்தில் குறிப்பிடப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த ஒப்பந்தம் நாளை காலை (18.9.2012) தயாரிக்கப்பட்டு மாலை அல்லது நாளை மறுதினம் புதன்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இன்று மாலை அரசாங்க பிரதி நிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் இது தொடர்பிலான பேச்சவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, மற்றும் சசில் பிறேம் ஜயந்த, டளஸ் அழகப்பெரும, அநுறபிரியதர்சன யாப்பா, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் ஹசன் அலி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மேற்படி விடயங்கள் பேசப்பட்டதாகவும் அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட தாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை செவ்வாய்க்கிழமை (18.9.2012) காலை புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதிகள் மற்றும் அரசாங்க தரப்பு பிரதிகள் சந்திக்கும் சந்திப்பொன்றும் நடை பெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
By Oddamavadi News
Posted in
ஆஃப்கானிஸ்தான் போலீஸ்காரர் ஒருவர் நான்கு நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரை சுட்டுக் கொலைச் செய்துள்ளார். தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் செக்போஸ்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பிறகு ஐந்து ஆஃப்கான் போலீசாரை காணவில்லை. ஆனால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரரை நேட்டோ படையினர் கொலைச் செய்துள்ளனர். காணாமல் போன போலீசாருக்கு துப்பாக்கிச்சூட்டில் தொடர்பு இருக்கிறதா? என்பது உறுதிச் செய்யப்படவில்லை. ஆனால், பயந்துபோய் இவர்கள் தலைமறைவாகியிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த சம்பவத்தின் மூலம் இவ்வாண்டு ஆஃப்கானிஸ்தானில் போலீஸ் காரர்களின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் நேட்டோ ஆக்கிரமிப்பு ராணுவத்தினரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு ஆஃப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் உள்ள செக்பாயிண்டில் நேற்று முன்தினம் 2 பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஹெல்மந்த் ராணுவ தளத்தில் ராணுவ சேவைப்புரிய வந்த இளவரசர் ஹாரியைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அமெரிக்க கப்பற்படையினர் கொல்லப்பட்டனர். நேட்டோவின் 6 போர் விமானங்கள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் தகர்க்கப்பட்டன.
அண்மைக் காலமாக நேட்டோ ஆக்கிரமிப்பு படையினர் தாலிபான் போராளிகள் மற்றும் ஆஃப்கான் போலீசாரின் தாக்குதலில் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
அதனிடையே, நேட்டோ படையினர் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் லக்மான் மாகாணத்தில் விறகு பொறுக்கச் சென்ற அப்பாவி பெண்கள் எட்டுபேர் பலியானார்கள். பலியான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல்களை ஊர்மக்கள் மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதாக மாகாண செய்தித் தொடர்பாளர் ஸர்வாதி ஸிவாக் கூறினார். தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நேட்டோ படையினர் தாக்குதலில் 45 போராளிகள் கொல்லப்பட்டதாக பொய்யை கூறுகிறது. (தூது ஒன்லைன்)
By Oddamavadi News
இறைத்தூதரை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்ற வேண்டும் – சவூதி தலைமை முஃப்தி கோரிக்கை
Posted in
முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டமியற்ற வேண்டும் என்று உலக நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தி (மார்க்க தீர்ப்பு வழங்குபவர்) ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது:
“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராடுவோர் வன்முறையில் இருந்து விலகவேண்டும். முஸ்லிம்கள் கோபத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது. நிரபராதிகளை கொலைச் செய்வதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்த்து இத்தகைய திரைப்படங்களை தயாரிப்போரின் லட்சியங்களை நிறைவேற்றாமல் இருப்பதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தவேண்டும்.” இவ்வாறு ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இஸ்லாத்தின் புனிதங்களை அவமதிப்பதை சர்வதேச அளவில் தடைச் செய்யவேண்டும் என்று எகிப்தில் உயர் முஸ்லிம் அறிஞரும், அல் அஸ்ஹர் இமாமுமான ஷேக் அஹ்மத் அல் தய்யிப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நிரபராதிகள் தாக்கப்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். (தூது ஒன்லைன்)
By Oddamavadi News
கிழக்கின் சிறுபான்மை ஆட்சி ! நனவாகிய கனவு நீடிக்குமா ? முதலமைச்சரும் ஆள்பவரும் யார் என்பதில் இழுபறி !
Posted in
என்னதான் கூறினாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு உள்ளுர ஒரு பெருமைதான். தாங்கள்தான் ஆட்சியமைப்பதில் ஜாம்பவான்கள் என்பதில்தான் இத்தனை பெருமை. ஆனால் பாவப்பட்டவர்களாக வாக்களித்த மக்கள் வாயைப்பிளந்து கொண்டு என்ன நடக்கப்போகிறது என்று ஆளையாள் மாறி மாறிக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
By Oddamavadi News
Posted in
கிழக்கு மாகாணசபை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பையா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையா ஆதரிக்கும் என்பதை தீர்மானிப்பதற்கான விசேட கூட்டத்துக்கு வருமாறு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான தனது ஏழு அங்கத்தவர்களையும் அழைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன.
ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமும் இன்று கலந்துகொண்டார்.
கூட்டத்தில் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பியபோதும் தான் எதுவும் பேசவில்லை என அவர் கூறினார். அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார்.
இதேசமயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹஸன் அலியை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தூதுக்குழுவை ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.
11 ஆசனங்களைப் பெற்றுள்ள இந்த கட்சி முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கிலுள்ள மூன்று பெரிய சமுதாயங்களின் பிரதிநிதிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் சபையை நியமிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
நாம் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துப்போக தயாராகவுள்ளோம். அமைச்சர்களை நியமிக்கும் போது சிங்களம் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன.
ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீமும் இன்று கலந்துகொண்டார்.
கூட்டத்தில் சிலர் இந்த பிரச்சினையை கிளப்பியபோதும் தான் எதுவும் பேசவில்லை என அவர் கூறினார். அதுபற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டம் என கூறினார்.
இதேசமயம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹஸன் அலியை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் சந்திப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு தூதுக்குழுவை ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.
11 ஆசனங்களைப் பெற்றுள்ள இந்த கட்சி முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கிலுள்ள மூன்று பெரிய சமுதாயங்களின் பிரதிநிதிகளுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைச்சர் சபையை நியமிக்க தயாராக இருப்பதாக கூறினார்.
நாம் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துப்போக தயாராகவுள்ளோம். அமைச்சர்களை நியமிக்கும் போது சிங்களம் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
By Oddamavadi News
Posted in
SLMCக்கு முதலமைச்சர் பதவியும் மத்தியில் மேலும் பிரதான அமைச்சுப் பதவிகளும் வழங்க மகிந்த தயாராகிவருகிறார்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ள அரசு, இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கியமான பொறுப்புகளை முஸ்லிம் காங்கிரஸிடம் வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணசபையில் விட்டுக்கொடுப்புடன் கூட்டாட்சியாக மு.காவுடன் இணைந்து செயற்படத் தயாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த ஒரு சூழலில் அரசின் இந்த யோசனை வெளியாகியுள்ளது.
அரசின் இந்தத் தீர்மானம் நேற்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கு ஆட்சியை எவ்வாறு அமைப்பது, மாகாண அமைச்சுகளில் எவரை நியமிப்பது என்பன உட்பட்ட பல விடயங்களை மு.காவுடன் பேச உயர்மட்ட அமைச்சர் குழுவொன்று தயாராகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளேதான் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை கட்சியில் இருந்தபோதும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் அதில் மாற்றங்களைச் செய்ய அரசுத் தலைமை உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது விடயத்தில் மு.கா. தலைமைத்துவம் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுக்கும்வரை காத்திருப்பதாகவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Courtesy:GTN
By Oddamavadi News
Posted in
எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை அற்ற நிலையில் முடிவுற்ற தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை தொடர்பில் நேற்று (10) காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இரவு அது தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
நேற்றைய கூட்டத்தில் முழுதாக ஆட்சி அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தே பேசப்பட்டதாகவும், போனஸ் ஆசனங்கள் குறித்தோ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் யார் முதல்வர் என்பது குறித்தோ பேசப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருப்பதால் அவர் வருகை தந்தவுடன் தேசியப்பட்டியல் தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என்று ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதன் சாத்தியக்கூறுகளைப் பற்றி வினவியபோது அது தொடர்பில் முடிவேதும் இல்லை எனினும் சாதகாமான சமிக்ஞையாக நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டம் ஒன்றில் மு. கா. தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹகீம், தாங்கள் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டே போட்டியிட்டதாகவும் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டினார்.
முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்ட போது. அதை அரசு அவதானித்து வருவதாகவும், அவ்வாறான நிலை ஏற்படின் எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
By Oddamavadi News
Posted in
எதிர்பார்த்தபடியே கிழக்கு பிராந்திய மாகாணசபை தேர்தல் எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் ‘தொங்கு சபை’ எந்தவிதத்தில் முடிந்துள்ளது. என்றாலும், மேலும் எதிர்பார்த்தபடியே அந்த பிராந்தியத்தில் அடுத்து யார் அரசு அமைக்க வேண்டும், யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று உள்ளது.
நடந்து முடிந்துள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில், இரண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதுவும் கூட எதிர்பார்த்த ஒன்றே. அதே சமயம் கிழக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளும் அதன் காரணமாக அதிக இடங்களையும் பெறும் என்ற எதிர்பார்க்க முடியாத எதிர்பார்ப்புகளும் இருக்கத் தான் செய்தன. தேர்தல் முடிவுகள் அந்த எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளன.
அந்த விதத்தில், கிழக்கு மாகாணத்திலும் மத்தியில் ஆளும் கூட்டணியே அதிக இடங்களை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை வைத்து நோக்கும் போது, தமிழ் கூட்டமைப்பு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிபை விட ஒரே ஒரு இடம் தான் குறைவு. மொத்தமுள்ள முப்பதியேழு இடங்களில் கூட்டமைப்பிற்கு பதினொன்றும், ஆளும் கூட்டணிக்கு பன்னிரெண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் கிடைத்துள்ளன. ஆனால் மாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற விதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியே முன்னிற்கிறது. அதன் காரணமாக இரண்டு ‘போனஸ்’ இடங்கள் அந்த கூட்டணிக்கு கிடைத்துள்ளன. ஆக, கூட்டணியின் மொத்த இடங்கள் பதினான்காக உயர்ந்துள்ளது.
ஆனால், மாகாணத்தில் ஆட்சி அமைக்க இத்தனை இடங்கள் போதாது. மொத்தமுள்ள முப்பதியேழு இடங்களில் பாதிக்கும் அதிகமான பத்தொன்பது இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியம். அதே சமயம், மாகாண சபை சபாநாயகர் பதவியும் தன் வசமே இருக்க வேண்டும் என்று எந்தவொரு ஆளும் கட்சியும் கருதுவது இயற்கை. சபாநாயகர் பதவியும் வேண்டும், அதே சமயம் சபை வாக்களிப்புகளில் ஒவ்வொரு முறையும் சபாநாயகரின் ‘விருப்ப வாக்கை’ நம்பி மட்டுமே அரசு செயல்படக் கூடாது என்று கட்சி தலைமைகள் எண்ணுவதும் இயற்கை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தில் நிலையான ஆட்சி அமைக்க இருபது இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த கணக்கை வைத்துப் பார்க்கும் போது, அரசு மற்றும் கூட்டமைப்பு தரப்பினர் இருவருக்குமே போதிய அளவில் உறுப்பினர்கள் இல்லை என்பதே உண்மை. இந்த பின்னணியில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி – கிழக்கு மாகாணத்தில் பெற்றுள்ள நான்கு இடங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதுபோன்றே அரசில் பங்கு வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்தை பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஐக்கிய தேசிய கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் – விமல் வீரவன்சவின் கட்சியானது அரசு கூட்டணியையுமே ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறானால், இரு தரப்பினருமே தலா பதினைந்து இடங்களை பெற்றவர்களாவார்கள்.
இந்த பின்னணியில், இரு தரப்பினருக்குமே மேலும் நான்கு இடங்களையாவது பெற்றால் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு பின்னாலான அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கிறது. மேலே கூறியது போல் இரண்டு அணிகள் உருவாகும் பட்சத்தில், தலா பதினைந்து இடங்கள் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு இடங்கள் முஸ்லிம் காங்கிரஸ் வசம் உள்ளது. சாதாரண நிலையில் அந்த கட்சியின் ஆதரவுள்ள அணியே கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அரசு சார்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரத்தின் போதே, முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து அரசு அமைக்க கூட்டமைப்பு முயலும் என்று சம்பந்தன் வெளிப்படையாகவே பேசிவந்துள்ளார். தேர்தலுக்கு பின்னர், சுட்டமைப்பு ஆட்சியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் அது கூட்டணி அரசாகவே இருக்கும் என்பதில் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. அந்த அரசுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் இடம் பெற்றால் மட்டுமே மாகாண சபையில் கூட்டமைப்பிற்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் சம்பந்தன் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த பின்னணியில், மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸை எவ்வாறு எதிர் அணிக்கு இழுக்க வேண்டும் என்பது குறித்த சர்ச்சைகள் தமிழ் கூட்டமைப்பு தலைமைக்குள் எழுந்தமை குறித்து பத்திரிகை செய்திகள் முன்பே கூறி வந்துள்ளன. அதில் ஒன்று தான், கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவியை கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தலா இரண்டரை ஆண்டுகள் தங்களதாக்கிக் கொள்வது. இது குறித்து இரு கட்சிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தேர்தலுக்கு முன்பு செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் தான், தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையுடன் சம்பந்தன், இத்தகைய கூட்டணி கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளார். இத்தகைய கருத்து அமைந்த கடிதத்தையும் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்ற முறையில் மாவை சேனாதிராஜா கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு, இரண்டரை ஆண்டு விகிதாசாரத்தில் விடுக்கப்பட்ட அழைப்பா அல்லது, அடுத்த ஐந்து ஆண்டுகளுமே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு கூட்டமைப்பு அளிக்கும் உத்தரவாதமா என்பது தெரியவில்லை. முக்கியமாக, இவ்வாறு பத்திரிகை செய்தி மூலம் எதிர்கால கூட்டணி கட்சிகள் என்று கூட்டமைப்பு கருதும் கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்பு அந்தந்த கட்சி தலைமைகளுடன் கலந்தாலோசித்தே விடப்பட்டதா என்றும் தெரியவில்லை.
அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டமைப்பு ஒரு தலைப்பட்சமாக முடிவு தெரிவித்து இருந்தால், அத்தகைய அழைப்பு, அந்தந்த கட்சி தலைமைகளை ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்காக கூட்டமைப்பு விரித்த அரசியல் வலை என்ற எண்ணம் உருவாகும். அதுவே, பின்னர் கூட்டமைப்பு பங்கு பெறும் அரசு அமைவதற்கு தடைக்கல்லாக அமையும். அல்லது, அத்தகைய அரசு அமையும் பட்சத்தில், பிற்காலத்தில் கூட்டமைப்பு குறித்த நம்பகத் தன்மையின்மையை அந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே உருவாக்கும். இது கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.
அதை விட முக்கியமாக, இப்போதும், எப்போதும் கூட்டமைப்பின் இத்தகைய ‘வெளிப்படையான’ அரசியல் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளேயே அனாவசிய சலசலப்புகளை ஏற்படுத்தி, உட்கட்சி பூசல்களுக்கு வழிவகுக்கும். அதற்குண்டான பழியும் பாவமும் முதல் முறையாக மத்தியில் ஆளும் இரண்டு முக்கிய சிங்களவர் கட்சிகளுக்கு அப்பால் சென்று, கூட்டமைப்பின் தலையில் விழும். அதற்கு கூட்டமைப்பு தலைமை தயாரா? என்று ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதுபோன்றே, தங்களது தற்போதைய அரசியல் முயற்சி வெற்றிபெறவில்லை என்றால், அது குறித்து தமிழ் மக்களிடையே எத்தகைய எண்ணங்கள் உருவாகும் என்பதையும் கூட்டமைப்பு கருத்தில்கொள்ள வேண்டும்.
அதே சமயம், இத்தகைய கூட்டணி ஒன்று உருவாகி செயல்படும் பட்சத்தில், அதன் பிரதிபலிப்பு தேசிய அளவில் தோன்றவும் செய்யும். அவ்வாறானால், மத்தியில் புதிய கூட்டணி ஒன்று உருவாவதற்கு அந்த கூட்டணி அச்சாரம் போடும். அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசிற்குள்ளும் நாடாளுமன்றத்திலும் பிரதிபலிக்க தொடங்கும். அதுவே, அடுத்த தேர்தல் சமயத்தில் ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலும் என்று எதிர்பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், வடமத்தி மற்றும் சப்ரகமுவ ஆகிய இரு மாகாண சபை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அத்தகைய எண்ணம் உருவாக உடனடி காரணம் இல்லை. ஆனால் அதுவே உந்துவிசையாக உருவாகாது என்று கூறிவிடவும் முடியாது.
ஆனால், கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நடவடிக்கை அறிவிக்கும் செய்தி என்ன? ஒன்று, எப்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை எந்தவித கோரிக்கைகளும் இல்லாமல் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதோ, கிழக்கு – வடக்கு இணைப்பு போன்ற மிகவும் சிக்கலான பிரச்சினைகளிலும் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளையும் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டதாகவே கருத வேண்டும். அவ்வாறாகும் பட்சத்தில், நாளை கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப ஓர் அரசு கிழக்கு மாகாணத்தில் ஏற்படவில்லை என்றாலும், இரு மாகாண இணைப்பு பிரச்சினையை அந்த கட்சி மீண்டும் முன்னெடுத்து அரசியல் செய்வதற்கான தார்மீக உரிமையை இப்போதே இழந்து விட்டது.
அதுபோன்றே, கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் இதுபோன்ற ஓர் அரசியல் மற்றும் தேர்தல் அமைப்பிற்கு அந்த கட்சி தயாராக வேண்டும். எப்போது, வடக்கில் மகாணசபை தேர்தல் நடக்கிறதோ, அப்போது, தேர்தலில் கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு என்பன போன்ற கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸும், ஏன் ஐக்கிய தேசிய கட்சியும் கூட முன் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு மாகாணத்தில் தனது அரசியல் வலிமை மற்றும் உட்கட்சி நிர்பந்தங்கள் ஆகிய காரணங்களுக்காக, கூட்டமைப்பு அத்தகைய ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லாத பட்சத்தில், கிழக்கு மாகாண அரசு கவிழும் நிலைமை உருவாகலாம். அதற்கும் கூட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு மேலும் ஒரு தார்மீக சங்கடத்தை கூட்டமைப்பிற்கு ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆளுமைக்கு பணிந்து கூட்டமைப்பு அரசியல் செய்து வந்ததன் காரணமாக, அரசு இயந்திரங்களுடன் இணைந்து செயல்படும் விதத்தையும் வித்தையையும் அந்த கட்சி அறிந்திருக்கவில்லை. அந்த விதத்தில், ஏதோ ஒரு விதத்தில் கிழக்கு மாகாண அரசில் கூட்டமைப்பு இடம் பெறுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் முஸ்லிம் (காங்கிரஸ்) தலைமையிலான அரசில் கூட்டமைப்பு பங்கு பெறுமானால், அதுவே, கூட்டமைப்பின் மகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் – மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் பங்கு வகித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களின் ஆட்சி அனுபவத்தில் இருந்து நல்ல படிப்பினை பெற வழிவகுக்கும்.
அதே சமயம், எப்போது வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற ‘அடிப்படை விடயங்களில்’ கூட்டமைப்பு விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதோ, அப்போதே அந்த கட்சி பிற அரசியல் கட்சிகளை போலவே சிந்தித்து செயலாற்ற தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கி விட்டது என்றே கருத வேண்டும். இதுவும் ஒருவிதத்தில் வரவேற்கப்பட வேண்டிய விடயமே. அதே சமயம், எப்போது கொள்கைசாரா அரசியலுக்கு கூட்டமைப்பு தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டதோ, அப்போதே அதனால் ஏற்படும் அதிர்வுகளுக்கும் அதிர்ச்சிகளுக்கும் கூட அதன் தலைமை கட்சியை தயார் செய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, கூட்டமைப்பை விட நேரடி அரசியலில் அனுவமும் அது பான்றே எதிர்பார்ப்புகளும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேறுவிதமாக சிந்திக்கலாம். மத்தியில் தற்போது ஆட்சி செய்யும் கூட்டணியும் தனது பங்கிற்கு முதலமைச்சர் பதவி உட்பட்ட பிற அரசியல் சலுகைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் அந்த சமுதாயத்தினருக்கு அள்ளி அளிக்கலாம். இந்தவிதத்தில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடரும் பட்சத்தில், கிழக்கு மாகாண ஆட்சியில் பங்கு என்பதுடன் மத்தியில் அமைச்சரவை பதவிகளையும் அந்த கட்சி தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறாக முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்தால், அதற்காக கூட்டமைப்பு – மத்திய அரசு தலைமை உள்ளிட்ட யாரையும் குறை கூறி அரசியலாக்கக் கூடாது. அதில் அனாவசியமாக இனப் பிரச்சினையின் அலகுகளை கண்டு, கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு தமிழ் மக்களின் எண்ணவோட்டத்தை தவறான பாதையில் வழி நடத்த முயலக் கூடாது. நடிகர் கவுண்டமணியின் வார்த்தையில் கூற வேண்டும் என்றால், ‘அரசியலில் இதுவெல்லாம் சகஜம்’ என்ற விதத்தில் அதனை ஏற்றுக்கொண்டு எதிர்கால தேர்தல் அரசியலுக்கு தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுவே, கூட்டமைப்பும் தமிழ் சமுதாயமும் தங்களை இனப் போர் அற்ற எதிர்கால அரசியலுக்கு தங்களை தயார் செய்துகொள்ள உதவும். அதுவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கும் வழிவகை செய்யும். மாறாக, ‘எதிர்மறை அரசியல்’, தமிழ் சமுதாயத்திற்கு எதிர்மறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். இதுவே கடந்த காலம் அறிவித்துணர்த்தும் பால பாடம். அதுவே தமிழ் சமுதாயத்திற்கு தற்போது முதியோர் கல்வியும் கூட என்று மாறிவிட்டதற்கு தமிழ் அரசியல் மற்றும் போராளிக் குழுக்களின் தலைமைகள் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய நிலைமை மாறுவதற்கு தற்போதாவது ஆவன செய்ய வேண்டும்!
Courtesy: Tamilmirror
By Oddamavadi News
Posted in
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவர் நசீர் ஹாபிஸ் நியமிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.
ஆரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது நசீர் ஹாபிஸை முதலமைச்சராக நிமிக்கு மாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரலாமென எதிர் பார்க்கப்படுகின்றது.
By Oddamavadi News
Posted in
‘ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்’ என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்…
‘மக்களால் எமக்குத்தரப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றவேண்டியது எமது கடமை. இந்த தேர்தல் வெற்றியை அரசாங்கம் களவாட நாம் அனுமதிக்கமாட்டோம். அரசாங்கத்தரப்பு இப்போது பெற்றுள்ள சாதாரண வெற்றியைக்கொண்டு அவர்கள் ஆட்சியமைக்க அனுமதிக்க முடியாது. மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மாகாண ஆட்சியை அமைக்க அழைத்தால் அதனை நாம் சட்டரீதியாக தடுப்போம்.
கிழக்கு மாகாண தேர்தலை நடத்திய முறை மூலம் எமக்கு கிடைக்கவேண்டிய வெற்றியை அரசாங்கம் சூறையாடியுள்ளது. இந்த தேர்தலில் அரசாங்கத்தை எதிர்த்த கட்சிகள் மூன்றும் வெற்றிபெற்றுள்ளது. மூன்று கட்சிகளினதும் மொத்த ஆசன எண்ணிக்கை 22. ஆனால் அரசாங்கம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படக்கூடிய இன்னுமொரு கட்சி ஆகிய இரண்டினதும் ஆசன எண்ணிக்கை 15. எனவே ஐ.ம.சு.மு. மாகாண ஆட்சியை அமைப்பதை நாம் அனுமதிக்கப்போவதில்லை.
‘இன்று காலை கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் எமது கட்சிப் பொதுச் செயலாளர் – மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன 22 ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ளன. எனவே கிழக்கு மாகாண ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மைப் பலம் எமக்கு உள்ளது. ஆகவே அத்தகைய ஆட்சியமைப்பதற்கும் அதற்கேதுவாக மாகாண முதலமைச்சரை நியமிக்கவும் எமக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கவும் என்று நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்று மேலும் குறிப்பிட்டார்.
By Oddamavadi News
Posted in

2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உள்ளுர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வ தற்காக முன்மொழியப்பட்ட பிரேரணை களின் பிரகாரம், மட்டக்களப்பில் விமான நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஆயிரத்து 700 மீட்டர் நீளமான ஓடுபாதை, வீதிகள், விமானம் தரையிறங்கும் பகுதி, உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதற்காக 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாண பணிகள் இடம்பெறவுள்ளன.
20 மில்லியன் ரூபா செலவில் பயணிகள் தங்கியிருக்கும் பகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
By Oddamavadi News
Posted in
இது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் சாம் சரிபி விடுத்துள்ள அறிக்கையில் தெளிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு மறுப்பதற்காக இலங்கை அரசு மூடிமறைக்கும் முயற்சிகளை யுத்தம் நிறைவுற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
போர்க்குற்றங்களை யார் செய்தது, யாருக்கு என்ன செய்தது என்று முடிவு செய்வதற்கும், குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போரின்போது இரண்டு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க ஐ.நா.வின் விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் உறுதிப்படுத்த வேண்டும் போரின் இறுதிக்கட்டத்தில் அதிலிருந்து தப்பிய சாட்சிகள் மிகப் பயங்கரமான காட்சிகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். காயங்கள் அடைந்தும் வாழ்க்கையை இழந்தும் போயுள்ளனர். உணவு, மருத்துவ வசதிகள், குடிநீர் என்பன அவர்களுக்குக் கிடைக்காமல் பிடுங்கிக் கொள்ளப்பட்டன.
போர் வலயத்தில் இருந்து தப்பிய அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் பரிதாபகரமான நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.இரண்டு ஆண்டுகள் கழிந்தும் பலர் இன்னமும் குற்றச்சாட்டுகள் ஏதும் சுமத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதியை நாம் எப்படி மறுக்க முடியும்.
விடுதலைப் புலிகளாலும் இலங்கை அரசினாலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக அனைத்துலக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலமே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
By Oddamavadi News
Posted in
அது மாத்திரமன்றி 35000 மெட்ரிக் தொன் பெற்றோல் எற்றிய கப்பலொன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த விதத்திலும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படாதெனவும் ஏனைய எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாதெனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கனியவள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
By Oddamavadi News
Posted in
நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை எந்தவொரு பள்ளிவாசலையும் உடைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன். இது சத்தியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கல்முனையில் நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக கிழக்கில் பொய்ப் பிரசாரம் செய்கின்றவர் அமைச்சரவையில் அது குறித்து எதுவும் பேசவில்லை. என்னுடனும் மிக அன்பாகவே பேசுகின்றார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அதன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் பெஸ்டர் ஏ.எம்.றியாஸை ஆதரித்து கல்முனைகுடி சுனாமி வீட்டுத்திட்ட வெளியரங்கில் நேற்று திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றும்போது தெரிவித்ததாவது;,
“நான் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்கள் அணைவருக்குமான ஜனாதிபதியாவேன். முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, பௌத்தர் என்ற வேறுபாடு காட்டி நான் ஆட்சி செய்ய முடியாது. எல்லா மதங்களைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் நான் மதிப்பளிக்கின்றேன். விகாரைகளையும் பள்ளிவாசல்களையும் கோவில்களையும் பாதுகாப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.
இத்தேர்தலில் உங்கள் வாக்குகளை பெறுவதற்காக பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக இங்கு இனவாத பிரசாரம் செய்யப்படுகிறது. பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதென்று இங்கு பிரசாரம் செய்பவர் என்னிடமோ அமைச்சரவையிலோ இதுவரை முறையிடவில்லை. அவர் என்னுடன் மிகவும் அன்பாகவே பேசுகின்றார். இது என்ன நியாயம்? எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம். மக்களும் ஏமாற வேண்டாம்.
இந்தமேடையிலே இருக்கின்ற சிரேஷ்ட அமைச்சர் பௌஸி உட்பட எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் அவ்வாறு நடந்ததாக கூறவில்லை. என்னை உங்களிடமிருந்து பிரிப்பதற்காகவே இனவாதம் பேசுகின்றனர். அதன் மூலம் சில வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான புண்ணியம் எனக்கே கிடைக்கும்.
மக்களுக்கு மத்தியில் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு எம்மை மக்களின் எதிரிகளாக்குகின்ற விடயத்தை சிலர் செய்து வருகிறார்கள். இதற்கு ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன். இனவாதம் பேசி என்ன பலம். அதுதான் அரசியல் இலாபம். அதற்காகவே இன்று இனவாத பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதி மக்கள் என்றும் ஏமாளிகளாக வாழ மாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
ஏற்கனவே வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அபிவிருத்திக்காக இப்பிரதேச மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும். இங்குள்ள விவசாயிகளுக்கு போதிய உரமானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு தேவைகளை நாம் செய்து கொடுத்திருக்கின்றோம்.
இதற்கு மேலாக நாம் எல்லா மக்களையும் நிம்மதியாக வாழ வைத்திருக்கின்றோம் என்பதில் நான் நிம்மதிப் பெருமிதத்துடன் இருக்கின்றேன். மக்களின் அர்ப்பணிப்பாலும் நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை. சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த சமாதானத்தையும் இன ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
ஆகையினால் நீங்கள் என்னை முழுமையாக நம்புங்கள். நான் உங்களுக்கு வேண்டிய அத்தனையும் செய்து தருவேன். என்னுடன் நம்பிக்கையாக இணைந்து சேவையாற்றக் கூடியவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யுங்கள். அதுவே இந்த மண்ணுக்கும் உங்களுக்கும் நல்லது. அதன் மூலம் எனக்கும் உங்களுக்கு சேவை செய்ய இலகுவாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, வேட்பாளர்களான முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், ஏ.எம்.றியாஸ், ஜமாலியா சுபைர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட
பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு ஜனாதிபதி தமிழில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
By Oddamavadi News
Posted in
மரண தண்டனையை நிறைவேற்றுபவர் (அலுகோசு) பதவி வெற்றிடத்தை நிரப்பவென இன்று (28) நேர்முகப் பரீட்சை ஆரம்பமாகிறது.
இந்த பதவி வெற்றிடத்திற்கென விண்ணப்பித்த 178 பேரில் 169 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார்.
3 வருடங்கள் வெற்றிடமாகக் காணப்படும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
1976 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, இதுவரை 357 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதவி வெற்றிடத்திற்கென விண்ணப்பித்த 178 பேரில் 169 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு.கொடிப்பிலி தெரிவித்தார்.
3 வருடங்கள் வெற்றிடமாகக் காணப்படும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
1976 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, இதுவரை 357 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
By Oddamavadi News
Posted in
மட்டக்களப்பில் சூரியனை சுற்றி சிவப்பு நிறத்திலான கற்கள் தோன்றும் அதிசயம் இன்று காலைமுதல் நிகழ்கிறது.
.jpg)
இதனை சாதாரண கண்களால் பார்க்கமுடியவில்லை. வீடியோ கமறாக்களின் மூலமும் நடமாடும் தொலை பேசிகளின் கமறாக்களின் மூலமும் இந்த அதிசயத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். Sources : Tamil Mirror
.jpg)
இதனை சாதாரண கண்களால் பார்க்கமுடியவில்லை. வீடியோ கமறாக்களின் மூலமும் நடமாடும் தொலை பேசிகளின் கமறாக்களின் மூலமும் இந்த அதிசயத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். Sources : Tamil Mirror
By Oddamavadi News
Posted in
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடாந்தும் உரையாற்றிய இரா.சம்பந்தன்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்போம்.
தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சேன்றதே தவிர நாங்கள் இதிலிருந்து நழுவிச் செல்லவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியம்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஏன் நடாத்தப்படுகின்றது எதற்காக நடாத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும் ஆகவே தான் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.