Posted in
உயர் கல்வி அமைச்சினுள் புகுந்து அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் எனக் கூறி கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள 21 மாணவர்களுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த 21 மாணவர்களும் நீண்ட நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளதனால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்ட போது பிணை வேண்டுகோளினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இவ்வழக்கில் பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இல்லையென கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி தெரிவித்துள்ளதுடன் பிணை கேட்டு மேல் நீதிமன்றிற்கு செல்லுமாறும் கூறினார்.
இந்நிலையில் மாணவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மாணவர் பிணை தொடர்பில் மனு ஒன்றினை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து மனு மேல்நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ் முன்னிலையில் எதிர்வரும் 3 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.