Posted in
வெள்ளைக் கொடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் குழு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கின் பிரதான சந்தேகநபரான் சரத் பொன்சேகா நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதன்போது பிரதான சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நலின் உத்துவஹெட்டி பெட்ரிகா ஜேன்ஸிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார். நீதிமன்றில், தான் அளித்த சாட்சியங்களை பத்திரிகைகள் சில திரிபுபடுத்தி வெளியிடுவதாக ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்ஸ் நீதிமன்றில் கூறியுள்ளார். அதன் காரணமாகவே பத்திரிகை ஊடாக விளக்கமளிக்க வேண்டியிருந்ததெனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் பத்திரிகைகளில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்குமாயின் அது தொடர்பில் முதலில் நீதிமன்றிற்கு அறிவிக்க வேண்டுமென மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்ஸிற்கு உத்தரவிட்டுள்ளது.