Follow me on Twitter RSS FEED

இனி மக்களும் சிறையைத் தேடிச் செல்வர்

Posted in
இனி மக்களும் சிறையைத் தேடிச் செல்வர்மக்கள் தமது பட்டினியைப் போக்கிக் கொள்வதற்குள்ள உரிமையை அரசாங்கம் கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவிக்கின்றார். மக்கள் இலவசமாக ஒருவேளை உணவை உட்கொள்ள வேண்டுமாயின் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். 

100 ரூபாவை வைத்துக் கொண்டு ஒரு கிலோ அரிசியும், உப்பு ஒரு பைக்கற்றும் மாத்திரமே கொள்வனவு செய்யமுடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலிருப்பது மிகவும் சிறந்தது என புத்திக்க பத்திரண கூறியுள்ளார். நுவரெலிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குரங்குக் குழுவின் தலைவர்கள் தன்னுடைய தலைமைப் பதவிக்கு பிரச்சினை ஏற்படுமென, சக்திமிக்க குரங்குகள் உருவாவதை விரும்ப மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார். சில சில அரசியல் கட்சிகளில் உள்ள சிலருக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 comments: