Posted in
உல்லாசப் பயணிகள் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் செப்டம்பரில் 82.8 வீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகலிருந்து செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தாலும், ஏனைய உலக நாடுகளிலிருந்து இலங்கை சென்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 44 வீதத்தாலும் அதிகரித்துள்ளது என பெல்ஜியத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆரியசிங்க தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், உல்லாசப் பயணத்றையை மேலும் அபிவிருத்தி செய்ய பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு நேரடியான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.