Nov 20108
By Oddamavadi News
Posted in
கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கிச் செல்லும் இரவு நேர ரயில் சேவைகள் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் பிற்பகல் 2.30 அளவில் பலுகஸ்வெவ பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக இரவு 7.30 மட்டக்களப்பு ரயில் சேவை, 9 மணி திருகோணமலை தபால் ரயில் சேவை என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.