Follow me on Twitter RSS FEED

ரிஸானாவுக்கு கருணை கோரி பிரார்த்தனைகள்

Posted in
ரிஸானாவின் குடும்பத்தினர்(ஆவணப்படம்-2007)சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது குழந்தை ஒன்றின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணுக்கு கருணை கிட்ட வேண்டுமெனக் கோரி பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.
இலங்கையின் கிழக்கே மூதூர் சாபி நகரைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்ற இந்தப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு கிட்ட வேண்டுமென மூதூர் பொது மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை வழிபாடுகளை நடத்தியுள்ளனர்.
இதேவேளை சவுதி அரேபியாவில் ரிஸானாவின் பராமரிப்பிலிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரிடமும் ரிஸானாவுக்கு மன்னிப்பளிக்குமாறு கோரும் மக்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவினையும் இலங்கையில் உள்ள சவூதி தூதரகத்தின் மூலம் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளையும் அந்த மக்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குழந்தையைக் கொன்றதாக ரிஸானா மீது குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளிக்கும் பட்சத்தில் மட்டுமே ரிஸானாவின் விடுதலை சாத்தியமாகும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், ரிஸானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: