Posted in
மக்கள் எனக்கு அதிகாரத்தினை வழங்குவார்களாக இருப்பின், புதியதொரு வரலாற்றினை உருவாக்கி, புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டினை பாதுகாக்க தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதானமாக உள்ளொன்று வைத்து வெளியொன்று போன்றதொரு அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் எமது நாடு இழிவுபடுத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போபிட்டிய ஶ்ரீ சுதர்ஷனராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாவறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஒருசில அரசியல்வாதிகள் கொழும்பு 7 இல் குளிரூட்டப்பட்ட அறைகளில் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதும், அறிக்கை வெளியிடுவதும், மேடையில் உரையாற்றுவதும்தான் அவர்களது அரசியல். எனது அரசியல் வாழக்கை அவ்வாறு வரையறுக்கப்பட்டது அல்ல, உயர் மாடியினில் இருந்து வேலை செய்யவும் எனக்கு விருப்பமில்லை, நான் வீதியில் சென்று மக்களுக்காக வேலை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதேவேளை எனது அபிவிருத்திக்கான தலையீட்டினை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.