Posted in
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரிக்காது தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அனுமதி வழங்கப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் அமைக்கப்பட்ட போது, அப்போதிருந்த வைத்தியசாலைகள் அனைத்தினதும் வசதிகள் அதிகரிக்கப்பட்டதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் சுதந்திரக் கல்வி மற்றும் சுதந்திர சுகாதார சேவை என்பவற்றை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக குற்றம் சுமத்தியுள்ளார்.