Posted in
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லா கோர்னியூவ் நகரில் நினைவுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சு.ப.தமிழ்ச்செல்வனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்த நினைவுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பிரான்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக சிலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் நாம் வெளிவிவகார அமைச்சில் வினவியபோது, சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை தனியார் காணி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளதனால் எதனையும் செய்யமுடியாதுள்ளதென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார். எனினும் இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது 2007ஆம் ஆண்டு விமானப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி சு.ப.தமிழ்ச்செல்வன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.